பல்லவராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்லவராயர்கள் என்போர் சோழ சாம்ராஜ்ஜியத்தில், குறு நில மன்னர்களாகவும், படைத்தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இது பற்றிய பல சரித்திரக் குறிப்புகள் அமரர். கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலில் காணலாம். சோழர் காலத்தில் பல்லவரையர் என்றும் அழைக்கப்பட்டனர். இரண்டாம் இராஜராஜன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவர் தலைமை அமைச்சராக விளக்கினார். [1]

சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.

பல்லவராயர் மன்னர்களின் தொடர்புடையவனவாக விளங்கும் ஊர்கள் பல்லவராயன்பட்டி, பல்லவராயன்பத்தை, பல்லவராயன்பாளையம் போன்றவையாகும்.

அமரர் கல்கி தனது பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் இத்தகைய பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.

உதாரணம்:

பல்லவராயன் (பல்லவ +அரையன்)
பல்லவராயர் (பல்லவ +அரையர்)
தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அரையர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அரையர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான்

என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம். புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். கொங்கரையர், ஈழத்தரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர், கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம்.

தமிழ் அகராதியில் பல்லவராயர் என்பதற்கு விளக்கமாக, சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்றாகவும் மற்றும் கள்ளர்ஓச்சர் முதலிய சிலசாதிகளின் சாதிகளின் பட்டப் பெயராகவும் குறிப்பிடப்படுகிறது.[2]

விருதுகள்[தொகு]

புலிக்கொடி, மீன் கொடி, வெண்குடை, ஆறுகாற்சிங்காதனம், ஆத்தி மாலை

பூர்வீகம்[தொகு]

பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு, பல்லவகுடியினர் பல்லவராயர், சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்றினர். பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் என்றுதான் அர்த்தம்.

இதனையும் காண்க[தொகு]


பார்வைக்கு[தொகு]

  1. தமிழ்நாட்டின் ஊரும் பேரும். https://books.google.co.in/books?id=bhuOCgAAQBAJ&pg=PT136&lpg=PT136&dq=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&source=bl&ots=EYkoXieGC6&sig=ACfU3U10M6KERAhPpzm-f3u1XuEX0hIGfQ&hl=en&sa=X&ved=2ahUKEwjVs-epxPbqAhUlzTgGHSF0DsQ4PBDoATAHegQIBBAB#v=onepage&q&f=false. 
  2. Tamil Lexicon. https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%C2%B9&searchhws=yes. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவராயர்&oldid=3026477" இருந்து மீள்விக்கப்பட்டது