பலார்சா சந்திப்பு தொடருந்து நிலையம்
பலார்சா சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
விரைவு தொடருந்து, பயணிகள் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 19°50′56″N 79°20′53″E / 19.849°N 79.348°E | ||||
ஏற்றம் | 188 மீட்டர்கள் (617 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மத்திய இரயில்வே மண்டலம் | ||||
தடங்கள் | தில்லி-சென்னை வழித்தடம் கோண்டியா–நாக்பீர்–பல்ஹர்சா வழித்தடம் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 8 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைத்தளம் | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | பயன்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | BPQ | ||||
கோட்டம்(கள்) | Nagpur CR | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 15000 | ||||
|
பலார்சா சந்திப்பு தொடருந்து நிலையம் (Balharshah Junction Railway Station)(நிலையக் குறியீடு: BPQ ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூர் நகரத்திற்குச் சேவை செய்யும் தொடருந்து நிலையமாகும். இது இந்திய இரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலத்தின் நாக்பூர் சிஆர் ரயில்வே பிரிவின் கீழ் உள்ளது. இந்திய ரயில்வேயின் புது தில்லி-சென்னை முதன்மை வழித்தடத்தில் உள்ள முக்கியமான சந்திப்பாகும். இது கடல் மட்டத்திலிருந்து 185 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன். பல்லர்சா-வர்தா-நாக்பூர் பிரிவு 1989இல் மின் மயமாக்கப்பட்டது. [1]
வரலாறு
[தொகு]1929இல் பல்ஹார்சா-காசிபேட் இணைப்பு பணி முடிந்தவுடன் சென்னை நேரடியாகத் தில்லியுடன் இருப்புப் பாதைமூலம் தொடர்புப்படுத்தப்பட்டது.[2]
1908ஆம் ஆண்டில் கோண்டியா-நாக்பீர்– நாக்பூர் இரயில் போக்குவரத்துக்காகப் பயணத்திற்காகத் திறக்கப்பட்டது. நாக்பீர்-ராஜோலி பாதை 1913இல் திறக்கப்பட்டு சாந்தா கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. [3] 240 km (149 mi) நீள கோண்டியா-சாந்தா கோட்டை குறுகிய பாதையானது டிசம்பர் 1992இல் அகலப்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. நாக்பீர்-சந்தா கோட்டை பகுதியை உள்ளடக்கிய நான்காவது கட்ட அகலப்பாதைப் பணி ஜனவரி 13, 1999 அன்று முடிவடைந்து உபயோகத்திற்காகத் திறக்கப்பட்டது. சாந்தா கோட்டை-பல்ஹர்சா பிரிவு ஜூலை 2, 1999 முதல் திறக்கப்பட்டது.[4]
இராமகுண்டம்-பல்ஹர்சா-வர்தா-நாக்பூர் பகுதி 1988-89ல் மின் மயமாக்கப்பட்டது.[5] கோண்டியா - நாக்பீர் - பல்ஹர்சா பாதையானது 2018 இல் மின் மயமாக்கப்பட்டது.
வசதிகள்
[தொகு]இந்த இரயில் நிலையத்தில் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம், பொது தொலைப்பேசி நிலையம், ஓய்வு எடுக்கும் அறை, காத்திருப்பு அறை, சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டிச் சாலை மற்றும் புத்தகக் கடைகள் உள்ளன. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://irfca.org/docs/electrification-history.html
- ↑ "IR History: Early Days – III". Chronology of railways in India, Part 3 (1900–1947). பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
- ↑ "Major Events in the Formation of S.E. Railway". South Eastern Railway. Archived from the original on 1 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-11-10.
- ↑ "Nagpur Division" (PDF). South East Central Railway. பார்க்கப்பட்ட நாள் 2012-11-10.
- ↑ "History of Electrification". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
- ↑ "Balhashah to Bangalore trains". Make My Trip. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]வெளி ஒளிதங்கள் | |
---|---|
Tamil Nadu Express entering Balharpur Junction |
முந்தைய நிலையம் | [[{{{title}}}]] | அடுத்த நிலையம் | ||
---|---|---|---|---|
மத்திய இரயில்வே மண்டலம் | ||||
Terminus | South East Central Railway zone |