உள்ளடக்கத்துக்குச் செல்

பறக்கும் சேக்கப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறக்கும் யாக்குப்
அரிசி மற்றும் பச்சடியுடன் யாக்குப்
வகைகலனுணவு (கேசரோல்)
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
தொடங்கிய இடம்சுவீடன்
ஆக்கியோன்ஊவ யாக்குப்சன்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்கோழி, பாலாடை (பாலேடு), மிளகாய் வெஞ்சனம், வாழைப்பழங்கள், வறுத்த நிலக்கடலை, பன்றி இறைச்சி

பறக்கும் யாக்குப் (சுவீடிய: flygande Jacob/Jakob, பிலீகண்ட யாக்குப் Flying Jacob) [1] என்பது ஒரு சுவீடிய நாட்டுக் கலனுணவு (கேசரோல்). இது கோழி இறைச்சி, பாலாடை, மிளகாய் வெஞ்சனம், வாழைப்பழங்கள், வறுத்த நிலக்கடலை மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகின்றது.[2] இந்த உணவு அடுப்பில் சுடப்பட்டு பொதுவாக அரிசி மற்றும் பச்சடி உடன் பரிமாறப்படுகிறது.

இந்த உணவு விமான சரக்குத் துறையில் பணியாற்றிய ஊவ யாக்குப்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது, அவருடைய பெயராலேயே வழங்கப்பட்டுவருகிறது. 1976 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டின் தலைநகரமான சுடாக்கோமின் சுற்றுப்புறத்தில் ஒரு சமுதாயக் கலந்துணவு நிகழ்வுக்கான முதன்மை உணவைத் தயாரிக்குமாறு வேண்டப்பட்டார். அப்போது அவரிடமிருந்த பொருட்களான வறுத்த நிலக்கடலை. வாழைப்பழங்கள், பாலாடை, குளிர்சாதனப் பெட்டியில் எஞ்சியிருந்த பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றுடன், இறக்குமதி செய்யப்பட்ட கெய்ன்சு மிளகாய் வெஞ்சனத்தையும் சேர்த்து ஒரு கலனணுவாகச் சமைத்து அதை விருந்தில் பரிமாறினார். அந்த உணவு விருந்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அவரது அண்டை வீட்டாரான ஆந்தர்சு தூன்பெரி, ஆல்ட் ஒம் மாட் (உணவைப் பற்றி எல்லாம்)[3][4] என்ற இதழில் பணிபுரிந்தார். அவர் இவ்வுணவின் செய்முறையை முதன்முதலில் 1976 இல் சுவீடியச் சமையல் இதழில் வெளியிட்டார்.[2][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Flygande Jacob" (in en-IN). The Hindu. 25 February 2011. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Flygande-Jacob/article15457445.ece. 
  2. 2.0 2.1 Fater, Luke (26 August 2019). "How a Banana-Chicken Casserole Defined Swedish Cuisine". Atlas Obscura. பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.
  3. https://lostinapot.com/flygande-jacob-flying-jacob/
  4. Fagerberg, Jerard. "How a banana-chicken casserole became a beloved Swedish comfort food". The Takeout. பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.
  5. "Recept: Flygande Jacob med banan, jordnötter och bacon". Dagens Nyheter. https://www.dn.se/mat-dryck/recept/flygande-jacob-med-banan-jordnotter-och-bacon/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_சேக்கப்&oldid=3770445" இலிருந்து மீள்விக்கப்பட்டது