பரிதா சித்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனைவர் பரிதா அகமது சித்திகி (Farida Ahmed Siddiqui) (பிறப்பு: 1937கள், மீரட் - இறப்பு: 2013 ஆகத்து, கராச்சி ) பாக்கித்தானைச் சேர்ந்த மத அறிஞரான இவர் பாக்கித்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பின்னணி[தொகு]

இவர் இந்தியாவின் மீரட்டில் பிறந்தார். 1958 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் பாக்கித்தானின் இஸ்லாமிய அறிஞரும், தீவிர பழமைவாத அரசியல்வாதியுமான மௌலானா ஷா அகமது நூரானியின் தங்கையாவார்.[1]

தொழில்[தொகு]

இவர் பெண்கள் இசுலாமித் திட்டத்தின் நிறுவனர் தலைவராகவும், அஞ்சுமான்-இ-தபலே-இ-இசுலாம் மற்றும் இசுலாமிய நலன் திட்ட உறுப்பினராகவும் இருந்தார். இவர், பல மத புத்தகங்களை எழுதியுள்ளார். [1][2] பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். மேலும் தான் இறப்பதற்கு முன் இசுலாமிய கருத்தியல் அமைப்பின் பணியாற்றிய ஒரே பெண்மணியாக இருந்தார். [3]

இறப்பு[தொகு]

நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் ஆகத்து 2013 இல் [1] இவருக்கு இரண்டு மகன்ளும் ஒரு மகளும் இருக்கின்றனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Newspaper, From the (2013-08-08). "Noorani's sister dies". DAWN.COM (in ஆங்கிலம்). 2020-12-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sister of Maulana Noorani dies – Business Recorder" (in ஆங்கிலம்). 2020-12-07 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The Council in question | Special Report | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). 2020-12-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதா_சித்திக்&oldid=3113107" இருந்து மீள்விக்கப்பட்டது