ஷா அகமது நூரானி
ஷா அகமது நூரானி | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||
1985இல் அகமது நூரானி | |||||||||||||||||
முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் கூட்டணியின் தலைவர் | |||||||||||||||||
பதவியில் 9 அக்டோபர் 2002 – 11 திசம்பர் 2003 | |||||||||||||||||
முன்னவர் | 'உருவாக்கபட்டது | ||||||||||||||||
பின்வந்தவர் | உசைனி அகமது | ||||||||||||||||
பாக்கித்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் | |||||||||||||||||
பதவியில் 14 ஏப்ரல் 1972 – 7மார்ச் 1977 | |||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||
பிறப்பு | அகமது நூரானி சித்திக் அக்டோபர் 1, 1926 மீரட், பிரிதானிய இந்தியா (தற்போதைய இந்தியா) | ||||||||||||||||
இறப்பு | 11 திசம்பர் 2003 இஸ்லாமாபாத், பாக்கித்தான் | (அகவை 77)||||||||||||||||
அடக்க இடம் | அப்துல்லா ஷா காசி கல்லறை | ||||||||||||||||
குடியுரிமை | பாக்கித்தான் | ||||||||||||||||
தேசியம் | பாக்கித்தான் | ||||||||||||||||
அரசியல் கட்சி | ஜாமியத் உலமா-இ-பாக்கித்தான் 1970–2002 | ||||||||||||||||
பெற்றோர் | முஹம்மது அப்துல் அலீம் சித்திகக்[1] | ||||||||||||||||
இருப்பிடம் | இஸ்லாமாபாத், பாக்கித்தான் | ||||||||||||||||
படித்த கல்வி நிறுவனங்கள் | அலகாபாத் பல்கலைக்கழகம் தாருல் - உலூம் அராபியா, மீரட் | ||||||||||||||||
மெய்யியல் பணி
|
ஷா அகமத் நூரானி (Shah Ahmad Noorani) (1 அக்டோபர் 1926 - 11 திசம்பர் 2003, அல்லாமா நூரானி எனவும் அழைக்கப்படும் இவர் பாக்கித்தானைச் சேர்ந்த இசுலாமிய அறிஞரும், சூபித்துவவாதியும், தத்துவவாதியும், மறுமலர்ச்சி மற்றும் தீவிர பழமைவாத அரசியல்வாதியும் ஆவார். [2]
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், பின்னர் மீரட்டிலுள்ள தாருல் உலூமில் (இசுலாமிய கல்வி நிறுவனம்) சான்றிதழ் பெற்றார். பின்னர் புகழ்பெற்ற இசுலாமிய அறிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் இசுலாமிய தத்துவத்தை வளர்ப்பதில் அதிகமாகப் பணியாற்றினார். 1972இல் உலக இசுலாமியத் திட்டம் என்ற நிறுவனத்தை நிறுவ உதவினார் [3]
உருது, அரபு, ஆங்கிலம், பாரசீக, பிரஞ்சு, சுவாகிலி ஆகிய ஆறு மொழிகளில் சொற்பொழிவாற்றுபவர் எனவும், "17 மொழிகளில் உரையாடும்" பன்மொழிப் புலமையாளர் எனவும் இவர் விவரிக்கப்பட்டுள்ளார். [4]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
அகமத் நூரானி பிரிட்டிசு இந்தியாவின் மீரட்டில் 1926 மார்ச் 31 அன்று (17 ரமலான் 1344) உருது மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் அலீம் சித்திகியும் ஒரு இசுலாமிய அறிஞர் ஆவார். மேலும் இவரது ஆரம்பகால இளமை பருவத்தில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இசுலாமிய நிறுவன சுற்றுப்பயணங்களில் தனது தந்தையுடன் சென்றார். [5] அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இசுலாமிய சட்டத்தில் மீரட்டில் உள்ள தாருல்-உலூமில் சான்றிதழ் பட்டம் பெற்றார். இவர் தனது எட்டு வயதில் புனித திருக்குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்த ஒரு நபரானார். இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர் இவரது குடும்பம் பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலுள்ள கராச்சிக்கு குடிபெயர்ந்தது. இவர் 1972இல் உலக இசுலாமியத் திட்டம் என்பதை நிறுவினார். இது சவூதி அரேபியாவின் மக்காவை மையமாகக் கொண்டது.
தொழில்[தொகு]
இவர், அகமதியா முஸ்லிம்களை காஃபிர் (கடவுளை நிராகரிப்பவர்) என்று அறிவித்தார். 1970களில் ஜாமியத் உலமா-இ-பாக்கித்தான் கட்சியின் ஆதரவுடன் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பங்கேற்று தெற்கு கராச்சியிலிருந்து [6] தேசிய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக சுன்னி இசுலாத்தின் மத பரேல்வி விகாரத்திற்கான அரசியல் வாகனமாகக் கருதப்படுகிறது. [7] ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இவரும் இவரது குழுவும் 1974இல் முகம்மது நபியை இறுதி தீர்க்கதரிசி என ஒப்புக்கொள்ளும் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வெற்றிபெற்றனர். எனவே அகமதியாக்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக இவர் 1977 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் ஐதராபாத்திலிருந்து [8] தேசிய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து, தேசிய அரசியலில் இவரது செல்வாக்கு மேலும் வளர்ந்தது. 1980களில் இவர் செனட்டரானார்.
1990களில் அரசியலிலிருந்து விலகிய பின்னர், அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சியை எதிர்ப்பதற்காக ஒரு தீவிர-பழமைவாத கூட்டணியை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். பாக்கித்தானின் பழமைவாத, இஸ்லாமிய, மத மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகளைக் கொண்ட ஒரு அரசியல் கூட்டணியான முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் என்பதின் (எம்.எம்.ஏ) தலைவர் பதவியைக் கருத்தில் கொண்டு இவர் முஷாரப்பிற்கு எதிராக கடுமையான சொல்லாட்சியைப் பயன்படுத்துவதாக அறியப்பட்டார். மேலும் நாட்டில் முஷாரப்பின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் ஆதரவை உருவாக்கினார்.
இறப்பு[தொகு]
2003 திசம்பர் 11 அன்று (17 ஷவ்வால் 1424), இவர் மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "(22 Zil-Hijjah)Shaykh Abd al-Aleem Siddiqui al-Qadiri Meerathi (AlaihirReHma)". http://www.alahazrat.net/islam/sheikh-abdul-aleem-siddiqui-qadri-meerathi.php.
- ↑ "Qaid-e-Ahl Sunnat His Eminence Maulana Shah Ahmad Noorani Siddiqui Al-Qadiri (RA) Rahmatullah alaih (1926–2003)". Noorani. http://imamnoorani.net/.
- ↑ Wasim, Amir (12 December 2003). "Maulana Noorani passes away: Funeral prayers at Nishtar Park today". Dawn News. Dawn Newspapers (Dawn Newspapers). http://www.dawn.com/news/129224/maulana-noorani-passes-away-funeral-prayers-at-nishtar-park-today.
- ↑ Obituary in Impact International, volume 34, n° 4, 2004
- ↑ "World Islamic Mission: Mauritius Branch – Maulana Shah Ahmad Noorani Siddiqui Al-Qaderi". Islamic Mission. http://islaminafrica.wordpress.com/2010/03/04/world-islamic-mission-mauritius-branch-maulana-shah-ahmad-noorani-siddiqui-al-qaderi/.
- ↑ "Archived copy". http://www.ecp.gov.pk/GE/1970/NAWestPakistan.aspx.
- ↑ "In Qadri’s fate, Barelvis see their redemption". http://www.thenews.com.pk/print/102383-In-Qadris-fate-Barelvis-see-their-redemption.
- ↑ "Archived copy". http://www.ecp.gov.pk/GE/1977/Default.aspx.
வெளி இணைப்புகள்[தொகு]
- "Home". tangali.net. http://www.tangali.net.
- "Home". jup.com.pk. http://www.jup.com.pk.