உள்ளடக்கத்துக்குச் செல்

பரிதா கானும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிதா கானும்
பாடல் ஒத்திகையில் பரிதா, 2005
தாய்மொழியில் பெயர்فرِیدہ خانُم
பிறப்புபரிதா காணும்
1929 (அகவை 94–95)
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா, இந்தியா
மற்ற பெயர்கள்கசலின் ராணி[1]
பணி
  • பாரம்பரிய இசைப்பாடகர்
  • நடிகை
  • கசல் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1948 - தற்போது வரை
அறியப்படுவதுகசல் • தாத்ரா • கயல் • தும்ரி
பிள்ளைகள்6
உறவினர்கள்ஆகா அசார் காஷ்மீரி (மைத்துனர்)
முக்தார் பேகம் (சகோதரி)
விருதுகள்(2005)

பரிதா கானும் (Farida Khanum, உருது : فرِیدہ خانُم ) மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரத்தைச் சேர்ந்த ஒரு பாக்கித்தானிய பாரம்பரிய பாடகி ஆவார். பாக்கித்தான் மற்றும் இந்தியா[2] ஆகிய இரு நாடுகளிலும் இவர் மலிகா-இ-கசல் ( கசலின் ராணி) என்று அறியப்படுகிறார். [3] [4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பரிதா 1929 பிரித்தானிய இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தார். [5] ஒரு சகோதரி மற்றும் மூன்று சகோதரர்கள் என இவருக்கு நான்கு உடன்பிறப்புகள். பிரபல பாடகி முக்தார் பேகம் இவரது சகோதரி. இவரது 18 வயதில் இவர்களது முழு குடும்பமும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து பாக்கித்தானின் இலாகூருக்கு குடிபெயர்ந்தது.[6] [7]

பாட்டியாலா கரானாவின் (இசைப் பாணி) உஸ்தாத் ஆசிக் அலி கானிடம் கயல், தும்ரி மற்றும் தாத்ரா ஆகியவற்றைக் கற்கத் தொடங்கினார். [6] ஒரு குழந்தையாக, இவரது சகோதரி முக்தார் பேகம் வழக்கமான பாரமபரிய இசை பயிற்சிக்காக உஸ்தாத் ஆசிக் அலி கானிடம் அழைத்துச் செல்வார். [8] 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது.

தொழில்

[தொகு]

பரிதா கானும் தனது முதல் பொதுக் கச்சேரியை 1950 இல் 21 வயதில் வழங்கினார். பின்னர் வானொலி பாக்கித்தானில் சேர்ந்தார். அங்கு இவர் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றார்.[9] 1960 களில் பாக்கித்தானின் அதிபர் அயூப் கான் ஒரு பொது இசை நிகழ்ச்சிக்கு அழைத்தபோது இவர் பிரபல நட்சத்திரமானார். பரிதா படங்களிலும் நடித்தார். மேலும் இவர் படங்களுக்கு பாடல்களையும் பாடினார். பாக்கித்தான் தொலைக்காட்சி மற்றும் பிற பாக்கித்தான் தொலைக்காட்சி நிறுவனங்ககளில் அடிக்கடி நடித்து வருகிறார். பிரபல கவிஞர் பயாஸ் ஹஷ்மி எழுதிய ஆஜ் ஜானே கி ஜித் நா கரோ என்ற கசலுடன் இவர் மிகவும் தொடர்புடையவர். 2015 ஆம் ஆண்டில், 86 வயதில், கோக் ஸ்டுடியோ சீசன் 8 இல் இந்த கசலைப் பாடினார். [10]

இந்தியாவில் பரிதா கானுமின் நேரடி இசை நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக உள்ளன.[11] இவர் 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் ஆப்கானித்தானின் காபூலுக்கு கச்சேரிகளுக்காக சென்றார். அங்கு இவர் ஆப்கானிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பாரசீக மொழி கசல்களைப் பாடினார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

பரிதா கானும் பாக்கித்தானின் இலாகூரில் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Farida Khanum: The Queen of Ghazal". Youlin Magazine. July 24, 2022.
  2. "Khawaja Najamul Hassan Remembers Farida Khanum: The Queen of Ghazal: Part III". Youlin Magazine. February 4, 2022.
  3. Shuaib, Haroon (Feb 2, 2022). "Khawaja Najamul Hassan Remembers Farida Khanum: The Queen of Ghazal". youlinmagazine.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  4. "Farida Khanum sings Aaj Jane Ki Zid Na Karo on Instagram live". The Indian Express (in ஆங்கிலம்). 2020-03-25. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  5. "Farida Khanum: The Queen of Ghazal". Youlin Magazine. January 18, 2022.
  6. 6.0 6.1 "Song Sung True (Farida Khanum interview)". 4 May 2010. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
  7. "Farida Khanum: Memories New and Old". ALL THINGS PAKISTAN website. 12 December 2007. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
  8. "Song Sung True (Farida Khanum interview)". 4 May 2010. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021."Song Sung True (Farida Khanum interview)".
  9. "Song Sung True (Farida Khanum interview)". 4 May 2010. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021."Song Sung True (Farida Khanum interview)".
  10. 10.0 10.1 Profile of Farida Khanum on Coke Studio (Pakistan) website Retrieved 13 July 2021
  11. "Farida Khanum: Memories New and Old". ALL THINGS PAKISTAN website. 12 December 2007. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதா_கானும்&oldid=3655345" இலிருந்து மீள்விக்கப்பட்டது