பயனர் பேச்சு:Kalidasan
வாருங்கள்!
வாருங்கள், Kalidasan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--Umapathy 09:45, 9 நவம்பர் 2006 (UTC)
விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு ஊடகமல்ல
[தொகு]காளிதாசன், விக்கிப்பீடியா ஒரு கலைக் களஞ்சியம். இங்கு அதற்குப் பொருத்தமான தலைப்புகளில் மட்டும், சொந்தக் கருத்துக்கள் எதுவும் இல்லாமல் கட்டுரைகள் எழுத வேண்டும். சில நல்ல கட்டுரைகள் இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. அக்கட்டுரைகளை ஒருமுறை பார்க்கவும். மற்றும் மேலே தரப்பட்டுள்ள வரவேற்புச் செய்தியிலுள்ள இணைப்புகளையும் பாருங்கள். நன்றி. -- Sundar \பேச்சு 10:25, 10 நவம்பர் 2006 (UTC)
- சுந்தர் நன்றி அவர்களே தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இனி எனக்கு அனுபவம் நிறைய இல்லை அதிலும் இந்த விக்கிப்பீடியாவில் நான் ஒரு புதிய வரவு அதனால்தான் எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தொடங்கி விட்டேன். மன்னித்து விடுங்கள்.
- இதில் மன்னிப்புக் கோரும் அளவிற்கு பெரிய தவறில்லை. நீங்கள் இங்கு புதிய வரவு என்பதை அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் இங்கு பல நாட்கள் இருந்து நன்கு பங்களிக்க வாழ்த்துக்கள். விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் என்ற உதவிப் பக்கத்தைப் பாருங்கள். உதவி தேவையெனில் தவறாமல் கேளுங்கள். உங்களைப் பற்றிய தகவல்களையும் விக்கிப்பீடியா உங்களுக்கு எவ்வாறு அறிமுகம் ஆனது என்பது பற்றியும் உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். -- Sundar \பேச்சு 12:07, 13 நவம்பர் 2006 (UTC)
உங்கள் வரவு நல்வரவாகுக
[தொகு]காளிதாசன் உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு,
- ஒருங்குறியில் (யுனிகோட்) தட்டெழுதத் தெரியும்
- விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரையொன்றைத் தொடங்கவும் ஏற்கனவே உள்ளதைத் தொகுக்கவும் தெரியும்.
- வாசிப்புப் பழக்கம், இணைய பயன்பாட்டில் ஆர்வம் உண்டு.
ஆதலால், விக்கிப்பீடியாவுக்குத் தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க உங்களால் நிச்சயமாக முடியும். உங்களுக்குப் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருப்பதால், நீண்ட கால நோக்கில் தமிழ் தெரிந்த அனைவருக்கும் உதவுவதற்காக கட்டியெழுப்பப்படும் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.
ஒரேயடிகாகப் பெருமளவு பங்களிக்க வேண்டுமென்றில்லை; ஆனால் தொடர்ச்சியாகப் பங்களித்து வாருங்கள். இங்கு பல பயனர்கள் ஆர்வத்துடன் தொடங்கி விட்டு பின்னர் காணாமற் போய் விடுவதுண்டு. அந்த வரிசையில் நீங்களும் சேர்ந்துவிடாதிருந்தால் நிச்சயம் உங்களால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு சிறிதளவாயினும் உதவ முடியும். அத்துடன் இது ஒரு கலைக்களஞ்சியமாதலால் இப்பணியில் தொடர்ந்து ஈடுபடுவதால் உலக அறிவும் பெருமளவு விசாலமடையும் என்பது எனது அனுபவம். நன்றி. கோபி 15:36, 13 நவம்பர் 2006 (UTC)
உங்களுக்குத் தெரியுமா?
[தொகு]நீங்கள் பங்களித்த மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 19, 2012 அன்று வெளியானது. |