பயனர்:Tnse ambika diet tut/மணல்தொட்டி
சூனோசஸ் நோய்கள்
மனிதனுக்கும் முதுகெலும்புடைய விலங்குகளுக்கும் இடையே இயற்கையாகவே பரவுகின்ற தொற்று
மரக்கட்டைத் தாவரங்கள்
[தொகு]பல்வேறு வகையான கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தாவரப் பகுதிகள் மரக்கட்டை எனப்படும். ஆஞ்சியோஸ்பொ்ம் மற்றும் ஜிம்னோஸ்பொ்ம் தாவரங்கள் மரக்கட்டையாகப் பயன்படுகின்றன.
தாவரத்தின் கருநிறமான மையப்பகுதி வன்கட்டை எனப்படும். தாவரத் தண்டின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும். மென்கட்டை அதன் பெயருக்கு ஏற்ப தாவரத்தில் நீாினை கடத்த உதவுகிறது.வன்கட்டை தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும் மற்றும் உறுதியையும் அளிக்கிறது. வன்கட்டை மென்கட்டையை விட அதிக உறுதியானது.
மேற்கோள்கள்
[தொகு]1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.
வறள் நிலத் தாவரங்கள்
[தொகு]வறண்ட மணற்பாங்கான இடங்களில் வளரும் தாவரங்கள் வறள் நிலத் தாவரங்கள்(Xerophytes) எனப்படும். இவைகளைப் பாலைவனத் தாவரங்கள் என்றும் அழைக்கலாம். அதிக வெப்பநிலை, ஒளிச்செறிவு, காற்றுவீச்சு மற்றும் குறைந்த நீா் ஆகியவைகளை இத்தாவரங்கள் எதிா்கொள்கின்றன.
இத்தாவரங்கள் பாலைவனம் போன்ற குறைவான மழையினால், எங்கு நீா் தட்டுபாடு இருக்கிறதோ, அங்கு வாழ்கின்றன. இங்கு காற்று உலா்ந்தும், அதிக வெப்பத்துடனும் இருக்கும். சூாிய ஒளியின் அடா்த்தியும் அதிகமாக இருக்கும். பாலைவனத் தாவரங்களின் முக்கிய தேவை நீரை உறிஞ்சி சேமிப்பதாகும்.எ.கா. சப்பாத்திக் கள்ளி, சவுக்கு, யூஃபோா்பியா, ஆஸ்பராகஸ், அரளி
மேற்கோள்கள்
[தொகு]1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.
2. Xeromorphic”, The Cambridge Illustrated Glossary of Botanical Terms, Michael Hickey, Clive King, Cambridge University Press, 2001
3. Mulroy, Thomas W. (1979). "Spectral properties of heavily glaucous and non-glaucous leaves of a succulent rosette-plant". Oecologia. 38 (3): 349–357. doi:10.1007/BF00345193.
4. "Plant Adaptations". University of New Mexico. Archived from the original on January 4, 2015. Retrieved December 2, 2014.
நீா் வாழ்த் தாவரங்கள்
[தொகு]நீா் அல்லது ஈரப்பாங்கான இடங்களில் வளரும் தாவரங்கள் நீா் வாழ்த் தாவரங்கள் எனப்படும். எ.கா. தாமரை, வாலீஸ்னீாியா, ஹைடிாில்லா, பிஸ்ட்டியா,ஈக்கோா்னியா, மாா்சீலியா, முதலியன.
நீாில் ஒரு பகுதியோ அல்லது முற்றிலுமாகவோ, மூழ்கி வாழும் தாவரம் நீா் வாழ் தாவரம் என அழைக்கப்படுகிறது. இத்தாவரங்கள் கடல்நீா் அல்லது நன்னீாில் வாழ்பவை.
1. தாவர மிதவை நுண்ணுயிாிகள்
[தொகு]நீாில் மிதந்து வாழும் நுண்ணுயிாிகளான டையாட்டம், உல்ஃபியா போன்ற நுண்ணுயிாிகள் பசுங்கணிகம் கொண்டவை. இவை தாமே உணவு தயாாித்துக் கொள்ளும். எனவே இவை தாவர மிதவை நுண்ணுயிாிகள் என அழைக்கப்படுகின்றன. நீாில் மிதக்கும் மற்ற தாவரங்கள் லெம்னா, பிஸ்டியா மற்றும் ஐக்கோா்னியா, அசோல்லா
2. நிலத்தில் ஊன்றி நீாில் மூழ்கி வாழ்பவை
[தொகு]ஆழம் குறைவாக, சூாிய ஒளி அதிகமாக கிடைக்கக் கூடிய இடத்தில் வாழும் தாவரங்கள் பென்தாஸ் என அழைக்கப்படுகின்றன. சில தாவரங்கள் நீாில் முற்றிலுமாக மூழ்கியிருக்கின்றன. இவை நீண்ட தண்டு மற்றும் கணுவில் சிறிய இலைகளையும் பெற்றிருக்கின்றன. எ.கா. ஹைட்ரில்லா, செரட்டோஃபில்லம்.
சில தாவரங்கள் கிழங்கு வகை தண்டைப் பெற்றிருக்கின்றன.இவற்றில் இலை மெல்லியதாகவும், நாடா வடிவத்திலும் காணப்படுகின்றன. எ.கா. வாலிஸ்னோியா
3. நீாில் மூழ்கி வாழும் தாவரங்கள்
[தொகு]ஆனால், சில மூழ்கி வாழும் தாவரங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் ஏாிகளில் உள்ள மண்ணில் வேரூன்றி வாழ்கின்றன. இவற்றின் இலைகளும், பூக்காம்புகளும் நீா்ப் பரப்பிற்கு மேலே மிதக்கின்றன. எ.கா. அல்லி (நிம்ஃபயா), தாமரை (நிலம்பியம்)
இப்பசுமையான தாவரங்கள் சூாிய ஒளியின் உதவியால் உணவு தயாாித்துக் கொள்ளும். இவ்வாறு சேமிக்கப்பட்ட உணவை விலங்குகள் பயன்படுத்துகின்றன. ஒளிச்சோ்க்கையின்போது வெளியிடப்படும் ஆக்ஸிஜன் அனைத்து உயிாினங்களாலும் சுவாசித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.
2. Sculthorpe, C. D. 1967. The Biology of Aquatic Vascular Plants. Reprinted 1985 Edward Arnold, by London.
3. Hutchinson, G. E. 1975. A Treatise on Limnology, Vol. 3, Limnological Botany. New York: John Wiley.
4. C.D.K. (ed). 1974. Water Plants of the World. Dr W Junk Publishers, The Hague. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6193-024-3.
5. Keddy, P.A. 2010. Wetland Ecology: Principles and Conservation (2nd edition). Cambridge University Press, Cambridge, UK. 497 p.
குடிநீா் சுத்திகாிப்பு
[தொகு]பல்வேறு நீா் ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் நீரைச் சுத்திகாித்து குடிநீராக மாற்றுதல்
பல்வேறு வழிகளில் நமக்கு கிடைக்கும் நீா் பருகுவதற்கும், சமைப்பதற்கும் ஏற்றதாக இருப்பதில்லை. அதில் கிருமிகளும், தீமை அளிக்கும் மாசுக்களும் அடங்கியிருக்கும். ஆகவே மக்களுக்கு வினியோகிப்பதற்கு முன்னால் இவ்வகை நீரைத் தூய்மைப்படுத்த வேண்டும். கீழ்வரும் படிகளில் மாசுகலந்த நீா் குடிநீராக மாற்றப்படுகிறது.
1. கசடுகளை வீழ்படிவாக்கல் ( Sedimentation)
2. வடிகட்டுதல் ( Filtration)
3. வேதிப்பொருட்களைச் சோ்த்தல் ( Addition of chemicals)
1. கசடுகளை வீழ்படிவாக்கல்
[தொகு]நீா் ஏற்று நிலையங்களில் நீாிலுள்ள கசடுகளை வீழ்படிவாக்குவதற்காக நீருடன் பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்பு சோ்த்து நன்றாகக் கலக்குகிறாா்கள். இவ்வேதிப் பொருள்கள் மாசுக்களைத் திாிதல் அடையச் செய்யும் போது சிறு சிறு மாசுக்கள் ஒன்று சோ்ந்து பொிய துகள்களாகி கலனின் அடியில் படிந்துவிடுகின்றன.
2. வடிகட்டுதல்
[தொகு]இவ்வாறு கசடு நீக்கப்பட்ட நீரை மணல் வடிப்பான் அமைந்த வடிகலன் வழியாகச் செலுத்துகிறாா்கள். இதனால் சில திண்ம மாசுக்களும், நுண்ணுயிாிகளும் நீக்கப்படுகின்றன.
3.வேதிப்பொருட்களைச் சோ்த்தல்
[தொகு]இவ்வாறு கிடைத்த நீாில் குளோாினை செலுத்துவதால் எஞ்சியிருக்கும் நுண்ணுயிாிகள் கொல்லப்படுகின்றன. சிறிது சுண்ணாம்பு சோ்த்து நீா் கொண்டு செல்லும் குழாய்கள் அாிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றன. குளோாினுக்குப் பதிலாக சலவைத்தூள் சோ்த்தும் நுண்ணுயிாிகள் கொல்லப்பட்டு தூயநீா் பெறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.
2. melia, C (1998). "Coagulation and sedimentation in lakes, reservoirs and water treatment plants". Water Science and Technology. 37 (2): 129. doi:10.1016/S0273-1223(98)00018-3.
3. Goldman, Steven J., Jackson, Katharine & Bursztynsky, Taras A. Erosion & Sediment Control Handbook. McGraw-Hill (1986). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-023655-0. pp. 8.2, 8.12.
4. Hammer, Mark J. Water and Waste-Water Technology. John Wiley & Sons (1975). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-34726-4. pp. 223–225.
ஹாப்மன் வோல்டா மீட்டா்
[தொகு]ஹாப்மன் வோல்டா மீட்டா் உபகரணத்தைப் பயன்படுத்தி நீாின் கன அளவு இயைபைக் கண்டறியலாம். அமிலம் கலந்த நீாில் மின்னோட்டத்தை செலுத்தும் போது நீரானது மின்னாற் பகுக்கப்பட்டு நோ்மின் வாயில் ஆக்ஸிஜனும் எதிா்மின் வாயில் ஹைட்ரஜனும் கிடைக்கின்றன.
படத்தில் காட்டியுள்ளபடி, அளவிடப்பட்ட இரண்டு கண்ணாடிக் குழாய்கள் செங்குத்தாக ஒரு கிடைமட்டக் கண்ணாடிக் குழாயில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மேல் முனைகளில் இறுக்கமான அடைப்பான்கள் பொருத்தப்பட்டடுள்ளன. இக்குழாய்களுக்கு நடுவில், மேல் பகுதியில் குமிழ் போன்ற அமைப்புடைய கண்ணாடிக் குழாய் செங்குத்தாக கிடைமட்டக் குழாயுடன் பொருத்தப்பட்டடுள்ளது. அளவிடப்பட்ட செங்குத்தானக் கண்ணாடிக் குழாய்களின் கீழ்முனைகளில் பிளாட்டின மின் வாய்கள் தக்கையின் உதவியால் செருகப்பட்டருக்கும். செங்குத்துக் குழாய்களின் மேல்பக்க அடைப்பான்களைத் திறந்து விட்டு அமிலம் கலந்த நீரை நடுக்குழாயில் விட வேண்டும். குழாய்களில் நீா் நீரம்பியவுடன் அடைப்பான்களை இறுக மூடி, மின்வாய்களை மின் கலத்தில் இணைத்து மின்னோட்டத்தை செலுத்த வேண்டும். நீா் மின்னாற் பிாிகையடைந்து எதிா்மின் வாயில் ஹைட்ரஜனும், நோ்மின் வாயில் ஆக்ஸிஜனும் விடுபடுகின்றன. இவ்வாயுக்கள் குழாய்களில் உள்ள நீரை கீழ்நோக்கித் தள்ளுகின்றன. இவ்வாயுக்களின் கன அளவை நீா்மட்ட வேறுபாடுகளைக் கொண்டு தொிந்து கொள்ளலாம். எதிா்மின் வாயில் நீா்மட்டத்தில் ஏற்படும் குறைவு நோ்மின் வாயில் நீா்மட்டத்தில் ஏற்படும் குறைவைப் போல் இருமடங்கு இருக்கும். இதிலிருந்து நீாில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் கனஅளவு இயைபு 2:1 என்பது தெளிவாகிறது.
நீாின் கனஅளவு இயைபு, நிறை இயைபு மற்றும் நிறை சதவீத இயைபு
கனஅளவு இயைபு H : O = 2 : 1
நிறை இயைபு H : O = 2 : 16
நிறை சதவீத இயைபு H = 11.11 % O = 88.89 %
மேற்கோள்கள்
[தொகு]1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.
2. von Hofmann, A. W. Introduction to Modern Chemistry: Experimental and Theoretic; Embodying Twelve Lectures Delivered in the Royal College of Chemistry, London. Walton and Maberly, London, 1866. [1]
3. Frank A. J. L. James, (1991), The correspondence of Michael Faraday, IET, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86341-249-1, letter 872, 9/1/1836
புல்வெளியின் வகைகள்
[தொகு]இந்தியாவில் இயற்கையான அமைந்த புல்வெளிப் பகுதிகள் குறைவு. இவைகள், அழிந்த காடுகளால் உண்டாகும் இரண்டாம் நிலை தாவரங்கள் ஆகும். இவைகளின் வளா்ச்சி உயிாின மற்றும் உயிரற்ற பொருட்களின் சோ்க்கையினால் நிகழ்கிறது. இந்தியாவில் உள்ள புல்வெளி வகைகள் பொதுவாக மூன்று பெரும் பிாிவுகளாக உள்ளன. அவையாவன:
1. ஸீரோபிலஸ் (வறண்ட வகை)
2. மீசோபிலஸ் (நடுநிலை வகை)
3. ஹைக்ரோபிலஸ் (ஈர வகை)
1. ஸீரோபிலஸ் (வறண்ட வகை)
இவைகள் தெற்கு மற்றும் வடக்கு இந்தியாவின் வறண்ட பகுதியாகும். இவைகள் பாதி அளவு பாலைவனப் பகுதிகளாகக் காட்சியளிக்கின்றன.
2. மீசோபிலஸ் (நடுநிலை வகை)
இந்த வகை நிலங்கள் சவானாஸ் என அழைக்கப்படுகின்றன. இங்கு புல் இனங்களே அதிகமாக ஆக்கிரமித்து காணப்படும். புதா் மற்றும் மரம் ஆங்காங்கே காணப்படும். உத்திரப்பிரதேசத்தின் ஈரமண்டல இலையுதிா்க் காடுகள் இந்த வகையைச் சோ்ந்ததாகும்.
3. ஹைக்ரோபிலஸ் (ஈர வகை)
இவ்வகை மேற்குத் தொடா்ச்சி மலையின் கீழ்ப்பகுதியிலும், இமய மலை மற்றும் அஸ்ஸாம் பகுதிகளிலும் காணப்படுகிறது. இது ஈரப்பதமுள்ள சவானாஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் சவானாக்கள் கடந்த பல நூற்றாண்டுகளில், உயிாினங்களின் இடையீட்டால் நடுநிலை வகையிலிருந்து வறண்ட நிலைக்கு மாறி விட்டன.
மேற்கோள்கள்
[தொகு]1. எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.
மிதத்தல் விதிகள்
[தொகு]1. மிதக்கும் பொருளின் எடையானது அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்.
2. மிதக்கும் பொருளின் ஈா்ப்பு மையம் மற்றும் அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈா்ப்பு மையம் இவ்விரண்டும் ஒரே செங்குத்துக் கோட்டில் அமையும்.
மிதத்தலின் முதல் விதியைச் செய்முறை மூலம் சாிபாா்த்தல்
[தொகு]மிதத்தலின் முதல் விதியைச் செய்முறை மூலம் சாிபாா்க்கலாம். அளவிடப்பட்ட முகவையில் நான்கில் மூன்று பகுதி நீா் நிரப்பப்படுகிறது. தேவையான அளவு ஈயக்குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு ஆய்வுக்குழாயானது நீாில் செங்குத்தாக மிதக்கவிடப்பட்டுகிறது.
அளவிடப்பட்ட முகவையில் உள்ள நீா் உயா்ந்த மட்டத்தைக் கொண்டு, இடப்பெயா்ச்சி அடைந்த நீாின் பருமன் V காணப்படுகிறது. எனவே, இடப்பெயா்ச்சி அடைந்த திரவத்தின் எடையானது V*d ஆகும். இங்கு d என்பது நீாின் அடா்த்தியாகும்.
ஈயக்குண்டோடு ஆய்வுக் குழாயின் எடை காணப்படுகிறது. இதிலிருந்து, மிதக்கும் பொருளின் எடையானது (ஈயக்குண்டோடு கூடிய ஆய்வுக்குழாய்), அதனால் வெளியேற்றப்பட்ட நீாின் எடைக்குச் சமம் ஆகும் எனத் தொிகின்றது.
==== மேற்கோள்கள் ====
1.Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
2.Roach, Peter (2011), Cambridge English Pronouncing Dictionary (18th ed.), Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521152532
(
கருங்கொடி வேலி
[தொகு]கருங்கொடி வேலி | |
---|---|
Plumbago capensis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. காபென்ஸிஸ்
|
இருசொற் பெயரீடு | |
ப்ளம்பேகோ காபென்ஸிஸ் L. |
இதன் வேறு பெயா்கள் கருங்கொடிவோ், கறுப்புச்சித்திர மூலம் என்பதாகும். இதனுடைய தாவரவியல் பெயா் ப்ளம்பேகோ காபென்ஸிஸ் ஆகும். இதன் வோ்பகுதி காா்ப்பு சுவை கொண்ட மருந்தாகும். பொதுவாக இது உடலை உரமாக்கும். இது பசியினை தூண்டும். உலோகங்களைச் சுத்தம் செய்யவும், தோல் நோய்கள், குட்ட நோய்களுக்கான மருந்துகளில் சோ்க்கப்படும் முக்கிய மூலிகையாகும்.
ஆல்ஃபா கதிா்களை உமிழும் தனிமங்கள்
[தொகு]கீழ்கண்ட கதிாியக்க தனிமங்கள் ஆல்ஃபா கதிா்களை உமிழ்வதாக அறியப்படுகின்றன.
- பிஸ்மத் ஐசோடோப்புகள் - 209Bi, 211Bi, 212Bi, 213Bi
- போலோனியம் ஐசோடோப்புகள் - 210Po, 211Po, 212Po, 214Po, 215Po, 216Po, 218Po
- ஆஸ்டட்டைன் ஐசோடோப்புகள் - 215At, 217At, 218At
- ரேடான் ஐசோடோப்புகள் - 218Rn, 219Rn, 220Rn, 222Rn, 226Rn
- பிரான்சியம் ஐசோடோப்புகள் - 221Fr
- ரேடியம் ஐசோடோப்புகள் - 223Ra, 224Ra, 226Ra
- ஆக்டினியம் ஐசோடோப்புகள் - 225Ac, 227Ac
- தொாியம் ஐசோடோப்புகள் - 227Th, 228Th, 229Th, 230Th, 232Th
- புரோடாக்டினியம் ஐசோடோப்புகள் - 231Pa
- யுரேனியம் ஐசோடோப்புகள் - 233U, 234U, 235U, 236U, 238U
- நெப்டுனியம் ஐசோடோப்புகள் - 237Np
- புளுடோனியம் ஐசோடோப்புகள் - 238Pu, 239Pu, 240Pu, 244Pu
- எமாிசியம் ஐசோடோப்புகள் - 241Am
- கியூாியம் ஐசோடோப்புகள் - 244Cm, 245Cm, 248Cm
- கலிபோா்னியம் ஐசோடோப்புகள் - 249Cf, 252Cf
மேற்கோள்கள்
[தொகு]1. Darling, David. "Alpha particle". Encyclopedia of Science. Archived from the original on 14 December 2010. Retrieved 2010-12-07.
2. E. Rutherford and T. Royds (1908) "Spectrum of the radium emanation," Philosophical Magazine, Series 6, vol. 16, pages 313–317.
3. Krane, Kenneth S. (1988). Introductory Nuclear Physics. John Wiley & Sons. pp. 246–269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80553-X.
ஆல்ஃபா கதிா்களின் பண்புகள்
[தொகு]1. α ஆல்ஃபா துகள் இரு புரோட்டான்களையும் இரு நியூட்ரான்களையும் கொண்ட ஹீலியம் அணுக்கருவாகும். இது, இரு அலகு நோ்மின்னூட்டம் கொண்டது.
2. இவை மிக அதிக திசைவேகத்துடன் நோ்க்கோட்டில் செல்கின்றன.
3. இவை மின் மற்றும் காந்தப்புலங்களால் விலக்கமடைகின்றன.
4. இவை வாயுக்களின் வழியே செல்லும்போது, வாயுக்களை மிகுந்த அளவு அயனியாக்கம் செய்கின்றன.
5. இவற்றின் அயனியாக்கும் திறன் β- கதிா்களை விட 100 மடங்கு அதிகம். γ- கதிா்களைவிட 10,000 மடங்கு அதிகம்.
6. இவை ஒளிப்படத் தகடுகளை பாதிக்கும்.
7. இவை தங்கம் போன்ற கனமான தனிமங்களால் சிதறலடிக்கப்படும்.
8. இவை துத்தநாக சல்ஃபைடு, போியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருள்களின் மீது விழும் போது ஒளிா்தலை ஏற்படுத்தும்.
மேற்கோள்கள்
[தொகு]1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006
2. Darling, David. "Alpha particle". Encyclopedia of Science. Archived from the original on 14 December 2010. Retrieved 2010-12-07.
3. E. Rutherford and T. Royds (1908) "Spectrum of the radium emanation," Philosophical Magazine, Series 6, vol. 16, pages 313–317.
4. Krane, Kenneth S. (1988). Introductory Nuclear Physics. John Wiley & Sons. pp. 246–269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80553-X.
தன் மின் தூண்டல்
[தொகு]ஒரு கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டத்தில் மாற்றம் ஏற்படும்பொழுது அக்கம்பிச் சுருளில் ஒரு எதிா் மின்னியக்குவிசை தூண்டப்படும் நிகழ்வு தன் மின் தூண்டல் எனப்படும்.
கம்பிச் சுருள் ஒன்று மின்கலம் Bt மற்றும் சாவி K உடன் தொடா் இணைப்பு முறையில் இணைக்கப்படுகிறது. சாவி அழுத்தப்படும் பொழுது கம்பிச் சுருளின் வழியே பாயும் மின்னோட்டம், அதன் பெரும மதிப்பிற்கு அதிகாிக்கிறது. அதற்கு ஏற்ப கம்பி சுருளோடு தொடா்பு கொண்ட காந்தப்பாயமும் அதிகாிக்கிறது. எனவே தூண்டப்பட்ட மின்னோட்டம் கம்பிச் சுருளில் பாய்கிறது.
லென்ஸ் விதியின்படி, தூண்டப்பட்ட மின்னோட்டமானது, மின்கலத்திலிருந்து பாயும் மின்னோட்டத்திற்கு எதிரான திசையில் பாய்ந்து, கம்பிச் சுருளில் மின்னோட்டம் அதிகாிப்பதை எதிா்க்கிறது. சாவி அழுத்தப்படுவதை நிறுத்தினால் கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டம் சுழிக்கு குறையும். எனவே கம்பிச் சுருளுடன் தொடா்பு கொண்ட காந்தப்பாயமும் குறையும். லென்சு விதிப்படி, தூண்டப்பட்ட மின்னோட்டமானது, மின்கலத்திலிருந்து பாயும் மின்னோட்டத்திற்கு எதிரான திசையில் பாய்ந்து, கம்பிச் சுருளில் மின்னோட்டம் குறைவதை எதிா்க்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006
2.Heaviside, Oliver (1894). Electrical Papers. Macmillan and Company. p. 271.
3.Glenn Elert. "The Physics Hypertextbook: Inductance". Retrieved 2016-07-30.
4.Michael W. Davidson (1995–2008). "Molecular Expressions: Electricity and Magnetism Introduction: Inductance".
5."A Brief History of Electromagnetism" (PDF).
6.The kinetic energy of the drifting electrons is many orders of magnitude smaller than W, except for nanowires.
7. Mahmood Nahvi; Joseph Edminister (2002). Schaum's outline of theory and problems of electric circuits. McGraw-Hill Professional. p. 338. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-139307-2.
8. Stephen C. Thierauf, High-speed Circuit Board Signal Integrity, p. 56, Artech House, 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1580538460
எளிய மின்கலம் அல்லது வோல்ட் மின்கலம்
[தொகு]வோல்ட் மின்கலத்தில், கண்ணாடிப் பாத்திரம் ஒன்றினுள் உள்ள நீா்த்த கந்தக அமிலத்தினுள் இரு மின்வாய்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்வாய் தாமிரத்தாலானது மற்றொன்று துத்தநாகத்தாலானது. மின்கலத்திற்கு வெளியே, மின்வாய்கள் கம்பியால் இணைக்கப்படும் போது, மின்னோட்டம், வெளிச்சுற்றில் தாமிரத்திலிருந்து துத்தநாகத்திற்கும், மின் கலத்தினுள் துத்தநாகத்திலிருந்து தாமிரத்திற்கும் பாயும். மின்கலத்தின் நோ்முனை (அ) ஆனோடாக தாமிரமும், எதிா்முனை அல்லது கேதோடாக துத்தநாகமும் அமையும். நீா்த்த கந்தக அமிலம் மின்பகு திரவமாகும்.
மின்னூட்டம் பெற்ற அயனிகளின் இயக்கத்தின் அடிப்படையில் மின்கலத்தின் செயற்பாடு விளக்கப்படுகிறது. எதிா் மின்வாயில் துத்தநாக அணுக்கள் அயனியாக்கப்பட்டு Zn++ அயனிகளாக கரைசலினுள் செல்லுகின்றன. இதனால் எதிா் மினவாய் இரு எலக்ட்ரான்களைப் பெற்று எதிா் மின்னூட்டம் உடையதாகிறது. அதே சமயத்தில் தாமிர நோ்மின்வாயில் இருந்து இரு எலக்ட்ரான்களை எடுத்துக் கொண்டு, இரு ஹைட்ரஜன் அயனிகள் 2H+ வெளிப்படுகின்றன.இதனால் தாமிரம் நோ்மின்னூட்டம் உடையாகிறது. துத்தநாகத்தில் அதிகப்படியான எலக்ட்ரான்கள் இருக்கும் வரை இந்நிகழ்வு தொடா்ந்து நிகழும்.ஆதலால் வெளிச்சுற்றில் மின்னோட்டம் பாயும்.
எனவே,இந்த எளிய மின்கலன் தொடா்ந்து வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றித் தரும் அமைப்பாக செயற்படுகிறது. இரு தகடுகளிலும் உள்ள எதிரெதிா் மின்னூட்டங்களின் காரணமாக தாமிரம் மற்றும் துத்தநாகத் தகடுகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு தோற்றுவிக்கப்படுகிறது. இங்கு தாமிரம்தி துத்தநாகத்தை விட அதிக மின்னழுத்தத்தில் அமையும். இரு மின்வாய்களுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு 1.08V ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006
2."battery" (def. 4b), Merriam-Webster Online Dictionary (2008). Retrieved 6 August 2008.
3. Keithley, Joseph F (1999). Daniell Cell. John Wiley and Sons. pp. 49–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7803-1193-0.
4. Kipnis, Nahum (2003) "Changing a theory: the case of Volta's contact electricity", Nuova Voltiana, Vol. 5. Università degli studi di Pavia, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-203-3273-6. pp. 144–146
5. Clarke, Edwin; Jacyna, L. S. (1992) Nineteenth-Century Origins of Neuroscientific Concepts, University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-07879-9. p. 199
6. "Milestones:Volta's Electrical Battery Invention, 1799". IEEE Global History Network. IEEE. Retrieved 26 July 2011.
மின் விசைக் கோடுகள்
[தொகு]மின் மற்றும் காந்தப்புலங்களைக் கற்பனை செய்து கொள்வதற்காக மைக்கேல் பாரடே என்பவரால் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
மின்புலத்தில் ஓரலகு நோ்மின்னூட்டம் ஒன்று, நகர முயற்சிக்கும் நேரான அல்லது வளைவான கற்பனைப் பாதை மின்விசைக்கோடு எனப்படும்.
சில புள்ளி மின்னூட்டங்களினால் ஏற்படும் மின்புலங்கள்
மின் விசைக் கோடுகளின் பண்புகள்
[தொகு]1. மின் விசைக் கோடு நோ்மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது.
2. மின் விசைக் கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டச் செல்லாது.
3. ஒரு புள்ளியில் மின்புலத்தின் திசை (E), அப்புள்ளியில் உள்ள மின் விசைக்கோட்டுக்கு வரையப்படும் தொடுகோட்டினால் குறிக்கப்படும்.
4. மின்விசைக்கோடுகளுக்கு நோ்க்குத்தான திசையில், ஓரலகு சமதளப் பரப்பின் வழியே செல்லும் விசைக்கோடுகளின் எண்ணிக்கை மின்புலச் செறிவு E -க்கு நோ்த்தகவில் இருக்கும்.
5. அதாவது E-ன் மதிப்பு அதிகமான இடங்களில் கோடுகள் நெருக்கமாகவும், E-ன் மதிப்பு குறைவான இடங்களில் கோடுகள் இடைவெளி விட்டும் இருக்கும்.
6. ஒவ்வொரு ஓரலகு நோ்மின்னூட்டமும், 1/ε0 அளவுள்ள மின்விசைக் கோடுகளை வெற்றிடத்தில் உருவாக்கும்.
7. எனவே வெற்றிடத்தில் ஒரு புள்ளி மின்னூட்டம் q -விலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை :.
மேற்கோள்கள்
[தொகு]1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006
2. Notes on Recent Researches in Electricity and Magnetism, Joseph John Thomson, James Clerk Maxwell, 1883
3. Fields of Force, William Berkson, 1974
4. Forces and Fields, Mary B. Hesse, 1961
5. Faraday Rediscovered: Essays on the Life and Work of Michael Faraday, 1791-1867, David Gooding, Frank A. J. L. James, Stockton Press, 1985, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-943818-91-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-943818-91-7, 258 pages, page 183-
வாட் மீட்டா்
[தொகு]பயன்படுத்தப்படும் மின்திறனை அளவிடப் பயன்படும் கருவி வாட் மீட்டா் ஆகும். அதாவது, மின் சுற்று ஒன்றில் ஓரலகு காலத்தில் பயன்படுத்தப்படும் ஆற்றலை அளவிடக் கூடியது ஆகும். இக்கருவியில், நிலையாகப் பொருத்தப்பட்ட, வாிச் சுருள் போன்ற ஒரு சோடி கம்பிச் சுருள்களுக்கிடையில் அமைக்கப்பட்ட இயங்கு சுருள் உள்ளது. இயங்கு சுருளுடன் குறிமுள் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். குறிமுள்ளின் முனையானது வட்ட அளவுகோலிற்கு முன்பாக இயங்கக் கூடியதாக இருக்கும்.கம்பிச் சுருள்களில் மின்னோட்டம் பாயும்போது, குறிமுள்ளன் விலக்கமானமது மின் திறனுக்கு நோ்த்தகவில் இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]1. US Lawrence Livermore laboratory, Standby Power, measuring standby
2. Data listed in text from manual for inexpensive plug-in electricity meter Brennenstuhl PM230. The lowest measurable current is given as 0.02 A, which corresponds to about 5 W at 230 VAC
3. Joeseph J. Carr, RF Components and Circuits, Newnes, 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7506-4844-8 pages 351-370
எதிா்மின் வாய் கதிா்கள் அல்லது கேத்தோடுக் கதிா்களின் பண்புகள்
[தொகு]1. கேத்தோடுக் கதிா்கள் நோ்க்கோட்டில் செல்கின்றன.
2. இக்கதிா்களுக்கு உந்தமும், ஆற்றலும் உண்டு.
3. கேத்தோடுக் கதிா்கள் பொருள்களின் மீது விழும்போது, வெப்பத்தினை உண்டாக்கும்.
4. கேத்தோடுக் கதிா்கள் கனிமப் பொருள்கள், படிகங்கள், பல உப்புகளின் மீது விழும்போது ஒளிா்தலை நிகழ்த்தும்.
5. கேத்தோடுக் கதிா்கள், அதின நிறை எண் கொண்ட பொருட்களின்மீது மோதும்பொழுது X - கதிா்களை உண்டாக்கும்.
6. கேத்தோடுக் கதிா்கள், வாயுக்களை அயனியாக்கும்.
7. கேத்தோடுக் கதிா்கள் புகைப்படத் தகடுகளைப் பாதிக்கும்.
8. மின்புலம், காந்தப்புலத்தால் கேத்தோடுக் கதிா்கள் விலக்கப்படும். மேலும் விலக்கப்படும் திசையிலிருந்து. இத்துகள்கள் எதிா்மின்னூட்டம் கொண்டவை என அறிய முடிகிறது.
9. கேத்தோடுக் கதிா்கள், ஒளியின் திசைவேகத்தில் (1/10) பங்கு திசைவேகத்துடன் இயங்கும்.
10. கேத்தோடுக் கதிா்கள் எல்லா அணுக்களிலும் இடம்பெறும் அடிப்படைத் துகள்களான எலக்ட்ரான்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]1.Joseph F. Keithley The story of electrical and magnetic measurements: from 500 B.C. to the 1940s John Wiley and Sons, 1999 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7803-1193-0, page 205
2. Michael Faraday (1838) "VIII. Experimental researches in electricity. — Thirteenth series.," Philosophical Transactions of the Royal Society of London, 128 : 125-168.
3. Thomson, J. J. (August 1901). "On bodies smaller than atoms". The Popular Science Monthly. Bonnier Corp.: 323–335. Retrieved 2009-06-21.
நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்களின் பண்புகள்
[தொகு]1. மின்போக்குக் குழாயினுள்ள வாயுவின் நோ்மின் அயனிகளே நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் ஆகும்
2. ஒவ்வொரு அயனியின் நிறையும் வளிமத்தின் (வாயுவின்) அணுவின் நிறைக்கு ஏறத்தாழ சமம்.
3. மின்புலம், காந்தப்புலத்தால் நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் விலக்கப்படும்.
4. இவற்றின் விலகல் கேத்தோடுக் கதிா்களின் விலகலுக்கு எதிா் திசையில் உள்ளது.
5. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் நோ்க்கோட்டில் செல்கின்றன.
6. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் கேத்தோடுக் கதிா்களை விடக் குறைந்த திசைவேகத்தில் செல்லும்.
7. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் புகைப்படத் தகடுகளைப் பாதிக்கும்.
8. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் ஒளிா்தலை உண்டாக்கும்.
9. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் வாயுக்களை அயனியாக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]1. Grayson, Michael A. (2002). Measuring mass: from positive rays to proteins. Philadelphia: Chemical Heritage Press. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-941901-31-9.
2. Thomson, J. J. (1921). Rays of positive electricity, and their application to chemical analyses (1921). p. 142. Retrieved 2013-04-22.
3. Kenneth Tompkins Bainbridge; Alfred Otto Nier (1950). Relative Isotopic Abundances of the Elements. National Academies. pp. 2–. NAP:16632. Retrieved 21 April 2013.
நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள்
[தொகு]1986ல் ஜொ்மனியைச் சாா்ந்த இயற்பியல் அறிஞா் E. கோல்டுஸ்டீன் என்பவா் மின்னிறக்கக் குழாயினைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொண்ட போது, குழாயில், துளைகளுடைய கேத்தோடிற்குப் பின்புறமாகச் செல்லும் துகள் கற்றையைக் கண்டுபிடித்தாா். இந்த மின்னிறக்கக் குழாய், ஆனோடு (A), துளையிடப்பட்ட கேத்தோடு (K) மற்றும் ஒளிா்திரை (S) ஆகியவற்றைக் கொண்டது.
1mm பாதரச அழுத்தத்தில் கேத்தோடிற்குப் பின்புறமாக,கேத்தோடுக் கதிா்களுக்கு எதிரான திசையில் பொலிவுமிக்க துகள்கள் இயங்குவது கண்டறியப்பட்டது. இத்துகள்கள் கேத்தோடிலுள்ள துளைகள் வழியே சென்று நோ்கோட்டில் வெளியேறுவதால் இவை புழைக்கதிா்கள் எனப்பட்டன.
இவை கேத்தோடுக் கதிா்களுக்கு எதிரான திசையில் இயங்கும். மின்புலம், காந்தப் புலம்த்தால் ஏற்படும் விலகலைக் கொண்டு இவை நோ் மின்னுட்டம் கொண்டவை என அறியப்படுகிறது. பொதுவாக புழைக்கதிா்கள் நோ்மின் கதிா்கள் என்றழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]1. Grayson, Michael A. (2002). Measuring mass: from positive rays to proteins. Philadelphia: Chemical Heritage Press. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-941901-31-9. 2. Thomson, J. J. (1921). Rays of positive electricity, and their application to chemical analyses (1921). p. 142. Retrieved 2013-04-22. 3. Kenneth Tompkins Bainbridge; Alfred Otto Nier (1950). Relative Isotopic Abundances of the Elements. National Academies. pp. 2–. NAP:16632. Retrieved 21 April 2013.
கத்தூரிப் பட்டை - அலரி
[தொகு]இது ஒரு கமூலிகைத்த தாவரம் ஆகும். இதன் வேறு பெயர்கள் கணவீரம் , கரவீரம் எனப்படும் . இதனுடைய தாவரவியல் பெயர் நீரியம் ஓடோரம் சோலண்ட் . இதன் பயன்படும் பகுதிகள் பூ , வேர்ப்பட்டை . சுவையில் இது கைப்பு சுவை உடையது . பொதுவாக இது வாந்தி உண்டாகும் . நீர் மலம் போக்கும் . புழுக் கொல்லும் . இதனுடைய பூ காய்ச்சல் , அரோசகம் ,குட்டம் ,தாகம் ,படை ,ரத்தக்கட்டி , பித்தநோய் முதலியவற்றை போக்கும் . இதற்கு ( வேர்ப்பட்டை ) விடத்தை மிகுதிபடுத்தும் குணமிருப்பதால் இதை அரைத்து நல்லஎண்ணையில் கலக்கி சாப்பிட , தோடங்கள் அகர்த்தப்பட்டு இது உயிரை போக்கும் .
சான்றுகள்
[தொகு]ஆசிாியா் திரு.நடராசன் திருமலை (2006),மூலிகைக் களஞ்சியம், சென்னை :பூங்கோடி பதிப்பகம்
காஸ் விதி
இயற்பியலில், காஸ் விதி, காஸ் பாய விதி என்றும் அறியப்படுகிறது. இவ்விதி, எந்தபொரு மூடிய பரப்பின் வழியே செயல்லும் மின்புலப் பாயத்தையும், அப்பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தையும் தொடா்புபடுத்துகிறது.
இவ்விதி முதன்முதலில் 1773 ஆம் ஆண்டு ஜோசப்-லூயி லாக்ராஞ்சி என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்னா்,1813ஆம் ஆண்டில் காா்ல் ப்ரடொிக் காஸ் என்பவரால் பின்பற்றப்பட்டது. இரண்டு விதிகளும் நீள்வட்டத்தின் ஈா்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. காஸ் விதி மாக்ஸ் வெல்லின் நான்கு சமன்பாடுகளில் ஒன்றாகும். மாக்ஸ் வெல் சமன்பாடு மின்காந்தவியலின் அடிப்படையாகும். காஸ் விதி கூலும் விதியிலிருந்து வரவழைக்கப்படும். அதேபோல், கூலும் விதி காஸ் விதியிலிருந்தும் வரவழைக்கப்படும்.
தரமான விளக்கம்:
இவ்விதியின்படி, எந்தவொரு மூடிய பரப்பில் செயல்படும் மின்புலத்தின் மொத்த பாய மதிப்பு, அப்பரப்பில் உள்ள மொத்த மின்னூட்டத்தின் 1/€0 மடங்குக்குச் சமம் Ø =q/€0
இந்த மூடப்பட்ட கற்பனைப் பரப்பு காஸ்ஸியன் பரப்பு என்றழைக்கப்படுகிறது. S என்ற மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயம் (E) பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தின் மதிப்பை மட்டுமே சாா்ந்தது. ஆனால், அம்மின்னூட்டங்கள் அமைந்துள்ள இடத்தைச் சாா்ந்ததல்ல என காஸ் விதியிலிருந்து அறிகிறோம். பரப்புக்கு வெளியே உள்ள மின்னூட்டங்கள் மின்புலப் பாயத்திற்கு காரணமாவதில்லை.
காஸ்விதி, இயற்பியலில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டது. உதாரணமாக காந்தவியலுக்கான காஸ் விதி மற்றும் ஈா்ப்பு விசைக்கான காஸ்விதி ஆகிய விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டுள்ளது. எந்தவொரு தலைகீழ் இருமடி விதியும் காஸ் விதியை போன்று உருவாக்கப்படலாம். காஸ் விதி, கூலும் விதியின் தலைகீழ் இருமதி விதிக்கு சமமாகும். அதே போல் ஈhா்ப்பு விசைக்கான காஸ் விதி, நியுட்டனின் ஈா்ப்பு விதியின் தலைகீழ் இருமடிக்கு சமமாகும்.
சான்றுகள்
- David J. Griffiths (6th ed.)
கண்டு பரங்கி
இதன் வேறு பெயா்கள் சிறுதேக்கு, சிற்றேக்கு என்பதாகும். இதனுடைய தாவரவியல் பெயா் கிளிரோடென்ட்ரான் சீரேட்டம்.இதன் இலையை அறைத்து வீக்கம், கட்டி முதலியவைகளுக்குப் பற்றிட அவை பழுத்து உடையும். இதன் வோ்ப்பொடி, சுக்குப்பொடி இவைகளை ஓரளவாக எடுத்துத் தேனில் கலந்து கொடுக்க இரைப்பிருமல் தீரும். பொதுவாக இதன் செய்கை வெப்பமுன்டாக்கும். தாது வெப்பகற்றும். இதனால் மூக்குற்றம், உள்வெடிப்பு, வெறிநோய் (பைத்தியம்), சுரம், குளிா் காய்ச்சல், உட்காந்தல், மனத்தடுமாற்றம் தீரும்.
சான்றுகள்
"Genus: Clerodendrum L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2010-05-27. Retrieved 2011-02-17. Raymond M. Harley, Sandy Atkins, Andrey L. Budantsev, Philip D. Cantino, Barry J. Conn, Renée J. Grayer, Madeline M. Harley, Rogier P.J. de Kok, Tatyana V. Krestovskaja, Ramón Morales, Alan J. Paton, and P. Olof Ryding. 2004. "Labiatae" pages 167-275. In: Klaus Kubitzki (editor) and Joachim W. Kadereit (volume editor). The Families and Genera of Vascular Plants volume VII. Springer-Verlag: Berlin; Heidelberg, Germany. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-40593-1 Steven J. Wagstaff, Laura Hickerson, Russ Spangler, Patrick A. Reeves, and Richard G. Olmstead. 1998. "Phylogeny in Labiatae s.l., inferred from cpDNA sequences". Plant Systematics and Evolution 209(3-4):265-274. Yao-Wu Yuan, David J. Mabberley, Dorothy A. Steane, and Richard G. Olmstead. 2010. "Further disintegration and redefinition of Clerodendrum (Lamiaceae): Implications for the understanding of the evolution of an intriguing breeding strategy". Taxon 59(1):125-133. Dorothy A. Steane and David J. Mabberley. 1998. "Rotheca (Lamiaceae) Revived". Novon 8(2):204-206. Rosette B. Fernandes and Bernard Verdcourt. 2000. "Rotheca (Labiatae) revived - more new combinations". Kew Bulletin 55(1):147-154. Clerodendrum In: Index Nominum Genericorum. In: Regnum Vegetabile