உள்ளடக்கத்துக்குச் செல்

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு (COUNTER TERRORISM AND COUNTER RADICALIZATION DIVISION), இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரிவாகும். இப்பிரிவுக்கு அரசின் கூடுதல் செயலாளர் தலைராகவும், அவருக்கு உதவிட இரண்டு அரசுச் துணைச் செயலாளர்கள் உள்ளனர்.[1] இதன் பணிகள் வருமாறு: [2]

  1. 1967 சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தை நிர்வகித்தல்
  2. உபா சட்டத்தின் கீழ் முதல் அட்டவணையில் பயங்கரவாத அமைப்புகளை பட்டியலிடுதல்/ பட்டியலிடப்படாதது. வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படும் அமைப்புகள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் தவிர.
  3. பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான கொள்கைகள் வகுத்தல்.
  4. பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த உள்ளீடுகளைக் கையாளுதல்.
  5. பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் மாநிலங்கள்/ ஒன்றியப் பகுதிகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல்.
  6. இந்திய-நேபாளம் மற்றும் இந்திய-வங்காளதேச எல்லைப்புறங்களில் செயல்படும் மதராசாக்களை கண்காணித்தல்.
  7. இசுலாமிய அரசு தொடர்புகள் குறித்து கண்காணித்தல்
  8. பயங்கரவாதத்திற்கு எதிராக அயல்நாடுகளுடன் கூட்டுப் பணிக்குழுக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிர்வகித்தல்.
  9. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பணிமனைகள் ஆகியவற்றிற்கு அலுவலர்களை நியமனம் செய்தல்.
  10. ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு, இந்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு மன்றம், வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, இந்தியத் துணை இராணுவப் படைகள் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு அறிக்கைகளைக் கையாளுதல்.
  11. கூட்டுப் பாதுகாப்புக் குழு (JIC) தொடர்பான விஷயங்களை கையாளுதல்.
  12. பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுடன் உள்துறை அமைச்சர் / உள்துறை செயலாளர் நிலை பேச்சுவார்த்தை மற்றும் கூட்டு உரையாடல் செயல்முறைகள் மேற்கொள்தல்.
  13. பயங்கரவாதத்திற்கு எதிரான ஊடக பிரச்சாரம் செய்தல்.
  14. எதிர் தீவிரமயமாக்கல் மற்றும் தீவிரமயமாக்கலுக்கான செயல் திட்டம் தீட்டுதல்.
  15. மேற்கூறிய பணிப் பொருட்கள் தொடர்பான தகவல் பெறும் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் செய்தல்.
  16. மேற்கூறிய பணிகள் தொடர்பான பாராளுமன்ற கேள்விகள் / விஷயங்களை எதிர்கொள்தல்
  17. மேற்கூறிய பணிகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளை மேற்கொள்தல்.
  1. தேசிய புலனாய்வு சட்டம், 2008 ஐ நிர்வகித்தல்
  2. தேசிய புலனாய்வு முகமையின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களை கண்காணித்தல்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]