பயங்கரவாத எதிர்ப்புப் படை
பயங்கரவாத எதிர்ப்புப் படை | |
---|---|
செயற் காலம் | டிசம்பர் 1990 - தற்போது வரை |
நாடு | இந்தியா |
கிளை | அனைத்து கிளைகளிலும் செயல்படுகிறது |
வகை | காவல்துறையின் தந்திரோபாய அலகு |
பொறுப்பு | வான் தாக்குதல் நெருக்கமான போர் அதிருப்தியாளர்களை எதிர்த்தல் தீவிரவாத எதிர்ப்பு பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கை நுண்ணறிவு புலனாய்வு தகவல்களை சேகரித்தல் சிறப்பு நடவடிக்கைகள் தீவிரவாத நடவடிக்கைகளை முன்கூட்டி தடுத்தல் |
சுருக்கப்பெயர்(கள்) | ATS |
குறிக்கோள்(கள்) | பயங்கரவாதத்தை நிறுத்தி அமைதியை தொடங்குங்கள் "Stop terrorism and Start peace" |
ஆண்டு விழாக்கள் | திசம்பர் 19 |
பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terrorism Squad (ATS), இந்தியாவின் மகாராட்டிரம், குஜராத்[1], கேரளா, உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிகள், இசுலாமியத் தீவிரவாத தாக்குதல்கள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கும், எதிர்த்து நிற்பதற்கும் காவல் துறையின் சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்டு நிறுவப்பட்ட படையாகும்.[2] மகாராட்டிரா மாநிலத்தில் மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி தலைமையில் பயங்கரவாத எதிர்ப்புப் படை 19 டிசம்பர் 1990 முதல் இயங்குகிறது.[3]
இப்படையின் அதிகாரிகளுக்கு லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையின் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரங்கள் குழுக்களால் பயிற்சி வழங்கப்படுகிறது.[4] மகாராட்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை பல இடங்களில் 26 நவம்பர் 2008 மும்பை தாக்குதல்களை எதிர்கொண்டு செயலாற்றியது.
தமிழ்நாட்டில்
[தொகு]தமிழ்நாட்டில் பயங்கரவாத எதிர்ப்புப் படை 21 நவம்பர் 2023 அன்று நிறுவ அரசாணை வெளியிடப்பட்டது. [5][6][7][8]
பயங்கரவாத எதிர்ப்புப் படையின் குறிக்கோள்கள்
[தொகு]- மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் தேச விரோத சக்திகள் செயல்படுவதைப் பற்றிய தகவல்களைப் பெறுதல்.
- இந்திய உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு போன்ற உளவு அமைப்புகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல்.
- பிற மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்பு படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
- மாஃபியாக்கள், குண்டர்கள் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் அகற்றுதல்
- போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தலைக் கண்டறிதல்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Leena Misra (2003-07-22). "ATS to branch out to other cities in state – Ahmedabad – City". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
- ↑ "Sarat Kumar appointed as Bihar ATS Chief". Biharprabha News. 24 November 2013. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013.
- ↑ "Maharashtra ATS gets new chief" தி இந்து, 2015
- ↑ "The Anti-Terrorism Squad: Unsung Heroes of Indian Counter-Terrorism". 28 December 2015. Archived from the original on 29 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
- ↑ DIG rank officer, 4 SPs: TN sets up anti-terror squad
- ↑ தீவிரவாதத்தை ஒழிக்க தமிழக அரசின் அதிரடி படை தயார்!
- ↑ Anti Terrorism Squad to be set up in T.N. Police’s Intelligence Wing: CM!