பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் (International Volunteer Day) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1985 ஆம் ஆண்டில் இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது. இந்நாள் உள்ளூரிலும், சரவதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தன்னார்வப் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது.[1]

பன்னாட்டுத் தன்னார்வத் தொண்டர் நாள் அரசு சார்பற்ற அமைப்புகள், சமூக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்களினாலும் நினைவுகூரப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் திட்டத்தினாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறது.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]