நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.

இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது[1]. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க அது நிறைவேற்றப்பட்டது.

இதன் படி 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதன்முறையாக மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது 92வது பிறந்த நாளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]