பத்திரி (சிற்றுண்டி)
Appearance
பத்திரி | |
மாற்றுப் பெயர்கள் | அரி பத்திரி, பத்தில் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | கேரளா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு |
வேறுபாடுகள் | நெய் பத்திரி, பொரிச்ச பத்திரி, மீன் பத்திரி, இறைச்சி பத்திரி |
பத்திரி (Pathiri, மலையாளம்: പത്തിരി) என்பது அரிசி மாவில் செய்யப்பட்ட தட்டையான ரொட்டியாகும். இது தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடலோர மலபார் பகுதியில் வாழும் மாப்பிளாக்கள் விரும்பி உண்ணும் சிற்றுண்டியாகும். சப்பாத்தியைப் போல, அரிசி மாவினால் செய்யப்பட்ட,[1] இந்த அரிசி ரொட்டி தயாரிக்க அரிசி மாவு மற்றும் எண்ணெய் தேவை. வெளிச்செண்ணெய் (தேங்காய் எண்ணெய்) பத்திரி, நெய் பத்திரி, நல்ல பத்திரி, கை பத்திரி, கட்டிபத்திரி, இறைச்சி பத்திரி, பொரிச்ச பத்திரி, சட்டி பத்திரி என்று பலவகைகள் உள்ளன.[2]
இன்றும் கேரளத்தில் உள்ள மலபார் முஸ்லிம்களிடையே பத்திரி ஒரு விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.[3][4]
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பத்திரி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Back Burner: Learn how to make Malabar parotta Pooja Pillai The Indian Express October 3, 2020
- ↑ On a food trail through Kerala’s Ponnani that has a culinary tradition marked by umpteen snacks, sweets and delicacies Athira M. The Hindu November 16, 2021
- ↑ Moideen, Cini P. (12 June 2015). "Rice pathiri, Ari pathiri, Kerala Malabar pathiri". CheenaChatti. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
- ↑ In Kerala, one can’t get enough of pathiris during the month of Ramzan Athira M. The Hindu May 06, 2021