கிண்ணத்தப்பம்
கிண்ணத்தப்பம் | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | கேரளா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசிமாவு, தேங்காய்ப்பால், வெல்லம், துறுவிய தேங்காய், ஏலக்காய் |
கிண்ணத்தப்பம் (Steamed plate cake) கேரளா மற்றும் தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு ஊர்களில் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய இனிப்பு உணவாகும் ஆகும். கிண்ணத்துப்பத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை நிறமானது, மற்றொன்று கருப்பு நிறமுடையது.[1] வெள்ளை வகை கிண்ணத்துப்பத்தினை சமைப்பது மிகவும் எளிதானது. மேலும் இதனைக் கருப்பு வகையுடன் ஒப்பிடும்போது மிகவும் மென்மையானதாகவும் உள்ளது.
தேவையான பொருட்கள்
[தொகு]- பச்சை அரிசி ஊறவைத்தது
- கடலைப்பருப்பு (ஊறவைத்து அவித்தது)
- தேங்காய்ப்பால்
- தேங்காய் துருவியது
- வெல்லம்
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்முறை
[தொகு]சுவையான கிண்ணத்தப்பம் தயாரிக்க, முதலில் பாத்திரம் ஒன்றில் தேவையான அளவு வெல்லத்தை எடுத்து இரண்டு குவளைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவேண்டும். வெல்லம் முழுவதுமாக உருகி கெட்டியாக வரும் வரை கொதிக்கவிடவேண்டும். அதே நேரத்தில் ஊறவைத்த அரிசியை நன்றாக அரைத்து தேங்காய்ப்பால் சேர்த்து மெல்லிய மாவு பதத்திற்குக் கொண்டுவர வேண்டும். மிதமான சூட்டில் இக்கலவையினை தடிமனான வாணலி பாத்திரத்தில் இட்டுக் கிளறி வரவேண்டும். மாவின் அளவு வெப்பத்தினால் அளவு குறைந்து இறுகும்போது காய்ச்சிய வெல்லத்தைச் சேர்த்துக் கிளற வேண்டும். இதனுடன் கடலைப்பருப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துத் தொடர்ந்து கிளற வேண்டும். மாவு பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டால், நெய் சேர்த்துக் கிளறினால் சரியாகிவிடும். மாவிலிருந்து நெய் பிரிய ஆரம்பிக்கும் போது, இந்தக் கலவையை நெய் தடவிய பாத்திரம் ஒன்றில் இட்டு அதன் மீது மேல் வறுத்த தேங்காய்த் துருவலைப் பரப்பவேண்டும். அறைவெப்ப நிலையில் சூடு ஆறி குளிரும் முன் துண்டு போட்டால் துண்டின் வடிவம் சரியான வடிவத்தில் வராமல் போக வாய்ப்புகள் உள்ளன.[2]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sulekha Kinnathappam
- ↑ "Kerala Malabar Kinnathappam – pachakam.com" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kinnathappam தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.