பண்புப்பெயர் மாற்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணம் பெயர்ச்சொல்லை ஆறு வகையாகப் பகுத்துப் பார்க்கிறது. அவை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பன.

தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கண நூல்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன.

நன்னூல் பண்புப் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்துச் சுட்டி, அவை எத்தகைய மாற்றங்களைக் கொள்ளும் எனத் தொகுத்துக் காட்டுகிறது.

செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே (நன்னூல் 135)

ஈறு போதல் இடையுகர மிய்யாதல்
ஆதி நீட லடியகர மையாதல்
தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல்
இனமிக லினையவும் பண்பிற் கியல்பே (நன்னூல் 136)


அடிக்குறிப்பு[தொகு]