காலப்பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1] இந்த ஆறு பாகுபாடுகளில் ஒன்று காலப்பெயர். வாழ்நாள் முதலானவற்றை அளக்கக் காலப்பெயர் உதவும். ஞாயிறு தோன்றி மறையும் காலம் நாள். பூமி ஞாயிற்றை ஒருமுறை சுற்றிவரும் காலம் ஆண்டு. நிலா ஒருமுறை வளர்ந்து தேயும் காலம் மாதம். சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்களைக் கண்டறிந்த முன்னோர் வாரம் என்னும் ஏழுநாள் சுழலை வகுத்துக்கொண்டனர். இவற்றின் ஒவ்வொரு அலகுக்கும் தனித்தனிப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.

  • நாள், நாழிகை, நொடி போன்றவை
  • அசுவினி, பரணி போன்றவை.
  • மேழம், விடை (சித்திரை, வைகாசி) போன்றவை

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலப்பெயர்&oldid=2155233" இருந்து மீள்விக்கப்பட்டது