சினைப் பெயர்
Appearance
(சினைப்பெயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும். சினை என்றால் உறுப்பு என்று பொருள். உயர்திணைப் பொருள்களின் உறுப்புகளையும் அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும் இது குறிக்கும்.
(எ.கா) கை, கண், கிளை, இலை
தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1] இவற்றில் ஒன்று சினைப்பெயர். தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கண நூல்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன.
பெயர்க்காரணம்
- கன்றை வயிற்றுக்குள் கொண்டுள்ள பசுவைச் சினைமாடு என்கிறோம். அதுபோல ஒரு பொருளின் பகுதியாக மற்றோரு பொருள் இருப்பதைச் சினைப்பெயர் என்கிறோம்.
- கருவைத் தன்னகத்தே கொண்டுள்ள முட்டையைச் சினை என்கிறோம்.
சினைப்பெயர் விளக்கம்
- கையில் விரல், காலில் விரல், விரலில் நகம், மஞ்சளில் விரல் ஒன்றில் ஒன்று இருப்பது தெரியவரும்.
- மரத்தில் கிளை, கிளையில் கொம்பு, கொம்பில் சிம்பு, சிம்பில் இலை, இலையில் காம்பு, சிம்பில் பூ, பூவில் காம்பு, பூவில் இதழ்
என்பன போல் சினைப்பெயர்களை விரித்துக்கொள்ளலாம்.
மொழி மரபு
- சினைப்பெயர் என்னும் பாகுபாடு வரும்போது அதனோடு தொடர்புடைய பொருளை முதற்பொருள் என்கிறோம்.
முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்குஞ் சினைமுதற்பெயரொரு நான்குமுறை யிரண்டுந் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர் (நன்னூல் 282)
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்