பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hemipus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான்
Hemipus picatus capitalis உத்தராகண்டம், இந்தியா
Calls of H. p. picatus (South India)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hemipus
இனம்:
இருசொற் பெயரீடு
Hemipus picatus
(Sykes, 1832)
Subspecies
  • H. p. picatus (Sykes, 1832)
  • H. p. capitalis (Horsfield, 1840)
  • H. p. leggei Whistler, 1939
  • H. p. intermedius Salvadori, 1879
வேறு பெயர்கள்

Muscicapa picata
Hemipus picaecolor[2]

பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான் ( bar-winged flycatcher-shrike) (Hemipus picatus ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு சிறிய பறவையாகும். இது தெற்காசியாவின் இமயமலையிலும், தென்னிந்தியாவில் உள்ள மலைகள் முதல் இந்தோனேசியா வரையிலான வெப்பமண்டல தெற்கு ஆசியாவின் காடுகளில் காணப்படுகிறது. முக்கியமாக பூச்சிகளை உண்ணும் இது காடுகளின் நடுப்பகுதியில் வேட்டையாடுகிறது. இவை நிமிர்ந்து நிற்பவையாகவும், கருப்பு, வெள்ளை நிறத்தின் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளன, ஆண் பறவைகள் பெண் பறவைகளை விட பளபளப்பான கருப்பாக உள்ளன. சில பறவைகளின் முதுகின் நிறம் பழுப்பு நிறமாக இருக்கும், பல பறவைகளுக்கு அடிப்பகுதியில் கருஞ்சாயம் இருக்கும்.

துணையினங்கள்[தொகு]

பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானில் நான்கு துணையினங்கள் பரிந்துரைக்கபட்டுள்ளன:

விளக்கம்[தொகு]

அலகில் உள்ள கொக்கி போன்ற முனை மற்றும் அலகின் அடிப்பகுதியைச் சுற்றி கடினமான முட்கள் போன்ற தூவிகள் அமைந்தள்ளமையைக் காட்டும் தலையின் படம்

பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானின் தலையின் மேல் பகுதியும் இறக்கைகளும் கருப்பு நிறத்தில் உள்ளன. இதன் உடல் வெள்ளை நிறத்தில் இருக்கும். இறக்கையின் குறுக்கே ஒரு வெள்ளைப் பட்டையும், வெள்ளை நிற பிட்டமும் இதை வித்தியாசப்படுத்துகின்றன. இவை கிளைகளில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்து, பூச்சிகளைப் பறந்து பிடிக்கின்றன. மூக்குத் துளைகள் முடிகளால் மறைக்கப்பட்டுள்ளன மேலும் மேல் அலகின் முனை வளைந்து கொக்கிபோல் காணப்படும். ஆண் பறவைகள் பளபளக்கும் கறுப்பாகவும், பெண் பறவைகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும். ஆனால் வாழிட எல்லை பொறுத்து இதன் நிறத்தில் சற்று மாறுபாடுகள் இருக்கும். இமயமலையில் காணப்படும் துணையினமான எச்.பி. கேபிடலிசில் ஆண் பெண் என இரு பறவைகளுக்கும் பழுப்பு நிற முது உள்ளது ஆனால் ஆண் பறவைகளுக்கு கருப்பு தலை உள்ளது. இலங்கையில் காணப்படும் பறவைகளின் இறகுகளில் பால் ஈருருமை இல்லை. எச். பி. இண்டர்மீடியஸ் துணையினத்தில் பழுப்பு நிற முதுகு பெண் பறவைகளுக்கு மட்டும் உள்ளது. வால் கருப்பு என்றாலும் வெளிப்புற வால் இறகுகள் வெண்மையாக இருக்கும். [3] [4] [5]

இது வ்வீரீரிரி, வ்வீரீரிரி, வ்வீரீரிரி என சிறு குரல் கொடுக்கும். [6] இலங்கையின் லெகெய் என்ற துணை இனத்தின் ஆண்-பெண் இணைகள் துல்லியமாக டூயட் பாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [7]

இளம் பறவைகள் சாம்பல் நிறத்தில் கல்பாசி தோற்றத்தைக் கொண்டுள்ளன. [6]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

எச்.பியின் முட்டைகள். கேபிடலிஸ் (இடது) மற்றும் எச். பி. பிகாடஸ் (வலது)

இந்தப் பறவை, இலைகளிடையே புழு, பூச்சிகளைத் தேடித் திரியக் காணலாம். கிளைகளில் அமர்ந்து பறந்து பூச்சிகளைப் பிடிப்பதும் உண்டு. [8] மற்ற இரைதேடும் பறவைப் பட்டாளங்களுடன் கலந்தே பெரும்பாலும் இரைதேடும். [9] இவை காடு வழியாக நகர்ந்தபடி இருக்கின்றன மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிதாகவே தங்குகின்றன. [6]

இலங்கையில் கூடு கட்டும் காலம் முக்கியமாக பெப்ரவரி முதல் ஆகத்து வரையிலும், இந்தியாவில் மார்ச் முதல் மே வரையிலும் இருக்கும். வேர், பாசி, சிறு துளிர்கள் ஆகியன கொண்டு குறுக்காக செல்லும் காய்ந்த அல்லது இலைகளற்ற மரக்கிளையில் கோப்பை வடிவில் கூடு கட்டும். கீழிருந்து பார்ப்பவர்களுக்கு இதன் கூடு மரக்கிளையில் புடைத்துக் கொண்டிருக்கும் முருடு போலவே தோன்றும். வழக்கமாக இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். அவை பசுமை தோய்ந்த வெண்மை நிறத்திலும் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். கூட்டில் அமர்ந்திருக்கும் பறவை சாதாரணமாக அமர்ந்திருப்பது போல் தோன்றும். ஆண் மற்றும் பெண் என இரு பறவைகளும் அடைகாக்கும். கூட்டில் இருக்கும் குஞ்சுகள் கண்களை மூடிக்கொண்டு அசையாமல், உடைந்த கிளையின் தோற்றத்தைக் கொடுப்பதாக இருக்கும். [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Hemipus picatus". IUCN Red List of Threatened Species 2018: e.T22706769A130352774. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706769A130352774.en. https://www.iucnredlist.org/species/22706769/130352774. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Checklist of the birds of the world. 9. Museum of Comparative Zoology, Cambridge Massachusetts. 1960. பக். 217–218. https://archive.org/stream/checklistofbirds91960pete#page/217/mode/1up/. 
  3. Beryl Patricia Hall (1956). "Variation in the Flycatcher Shrike Hemipus picatus (Sykes)". Bull. Brit. Orn. Club 76 (4): 63–64. https://www.biodiversitylibrary.org/page/40551408. 
  4. Whistler, H (1939). "A new race of the Pied Shrike of India". Bull. Brit. Orn. Club 59: 101–102. https://www.biodiversitylibrary.org/page/40513561. 
  5. Jerdon, TC (1872). "Supplementary notes to "The Birds of India"". Ibis 3 (2): 114–139. doi:10.1111/j.1474-919x.1872.tb06138.x. https://archive.org/stream/ibis23brit#page/114/mode/2up. 
  6. 6.0 6.1 6.2 Ali, S; S D Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. 6 (2nd ). Oxford University Press. பக். 1–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-562063-1. Ali, S & S D Ripley (1996).
  7. Thorpe, W.H. (1972). Duetting and antiphonal song in birds – its extent and significance. Behaviour Monograph Supplement 18. E J Brill, Leiden. 
  8. Somasundaram, S; L Vijayan (2008). "Foraging Behaviour and Guild Structure of Birds in the Montane Wet Temperate Forest of the Palni Hills, South India". Podoces 3 (1/2): 79–91. http://www.wesca.net/Podoces/Podoces3/PODOCES%203_1-2_%20Foraging%20Behaviour%20in%20southern%20India.pdf. 
  9. Partridge L.; Ashcroft R. (1976). "Mixed-species flocks of birds in hill forest in Ceylon". Condor 78 (4): 449–453. doi:10.2307/1367093. http://sora.unm.edu/sites/default/files/journals/condor/v078n04/p0449-p0453.pdf. 
  10. Phillips, WWA (1940). "Some observations on the nesting of Hemipus picatus leggei, the Ceylon Black-backed Pied Shrike". Ibis 82 (3): 450–454. doi:10.1111/j.1474-919X.1940.tb01666.x. 

வெளி இணைப்புகள்[தொகு]