பட்டுக் கடித இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுக் கடித இயக்கம் (Silk Letter Movement ) என்பது உதுமானிய துருக்கி, செருமனி மற்றும் ஆப்கானித்தானுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் இந்தியாவை பிரிட்டிசு ஆட்சியிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு 1913 மற்றும் 1920க்கு இடையில் தியோபந்தி தலைவர்கள் ஏற்பாடு செய்த ஒரு இயக்கமாகும். ஆப்கானித்தானில் இருந்த தியோபந்தி தலைவர்களில் ஒருவரான உபைதுல்லா சிந்தி என்பவர் பாரசீகத்திலிருந்த மற்றொரு தலைவரான முகமது அசன் தியோபந்திக்கு எழுதிய கடிதங்களை பஞ்சாப் குற்ற விசாரணைத் துறை கைப்பற்றியது. கடிதங்கள் பட்டுத் துணியில் எழுதப்பட்டிருந்தன., எனவே இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.[1][2]

கண்ணோட்டம்[தொகு]

இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராகவும் அரசியல் ஆர்வலராகவும் இருந்த முகம்மது மியான் மன்சூர் அன்சாரி என்பவர் 1915 செப்டம்பரில் முகமது அசனுடன் ஹெஜாஸுக்கு சென்றார். அவர் 1916 ஏப்ரலில் காலிப் நாமா (பட்டுக் கடிதம்) உடன் இந்தியா திரும்பினார். அவர் இந்தியாவிலும் தன்னாட்சி பகுதிகளிலும் உள்ள சுதந்திர போராளிகளுக்கு அக்கடித்தத்தைக் காட்டினார். பின்னர் 1916 சூனில் காபூலுக்குச் சென்றார்..[3]

முதலாம் உலகப் போர் தொடங்கியவுடன், உபைதுல்லா சிந்தி மற்றும் முகமது அசன் ( தாருல் உலூம் தேவ்பந்தின் தலைவர்) 1915 அக்டோபரில் இந்தியாவின் பழங்குடிப் பகுதியில் முஸ்லீம் கிளர்ச்சியைத் தொடங்குவதற்கான திட்டங்களுடன் காபூலுக்குப் பயணம் செய்தனர். இந்த நோக்கத்திற்காக, ஆப்கானித்தானின் அமீர் பிரிட்டனுக்கு எதிராக போரை அறிவிக்க வேண்டும் என்று உபைத்அல்லா முன்மொழிய வேண்டும் என்றும், அதே நேரத்தில் முகமத் அல் அசன் ஜெர்மன் மற்றும் துருக்கிய உதவியை நாடுவதெறும் முடிவு செய்யப்பட்டது. அசன் ஹெஜாஸுக்கு சென்றார். இதற்கிடையில், உபைத்அல்லா, அமீருடன் நட்புறவை ஏற்படுத்த முடிந்தது. பட்டுக் கடித இயக்கம் என்று அழைக்கப்பட்ட திட்டங்களின் திட்டங்கள் வெளிவந்ததால், உபைத்அல்லா அமீருடன் நட்புறவை ஏற்படுத்த முடிந்தது. காபூலில், உபைத்அல்லா, பிரிட்டனுக்கு எதிரான கலீஃப்பின் "ஜிகாத்தில்" சேர துருக்கிக்கு முன்னர் வந்த சில மாணவர்களுடன் சேர்ந்து, இந்திய விடுதலை இயக்கத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பான்-இஸ்லாமிய காரணத்தை சிறப்பாக வழங்க முடியும் என்று முடிவு செய்தார்.[4]

பிரிட்டிசாரை எதிக்க உள்ளூர் பழங்குடியினரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பெர்லின்-இந்தியக் குழு (இது 1915 க்குப் பின்னர் இந்திய சுதந்திரக் குழுவாக மாறியது) இந்தோ-ஜெர்மன்-துருக்கி திட்டப் பணியை இந்தோ-ஈரானிய எல்லைக்கு உருவாக்கியது.[4][5] இந்த குழு 1915 திசம்பரில் காபூலில் தியோபந்திகளை சந்தித்தது. இந்திய இயக்கத்தின் உறுப்பினர்களை இந்தியாவின் எல்லைக்கு கொண்டு வருவதோடு, எகிப்தின் இடம்பெயர்ந்த கெடிவ் கைசர், என்வர் பாசா மற்றும் அப்பாசு இல்மி ஆகியோரிடமிருந்தும் இந்த செய்தி அனுப்பப்பட்டது, பிரதாப்பின் பணிக்கு ஆதரவை வெளிப்படுத்துவதோடு, பிரித்தானியாவின் இந்தியாவுக்கு எதிராக அமீரை நகர்த்த அழைத்தார்.[6][7]

பிரிட்டிசாருக்கு எதிராக அமீரை அணிதிரட்டுவதே இந்த பணியின் உடனடி நோக்கமாகும்.[6] மேலும் இதனால் ஆப்கான் அரசு ஒரு சில இடங்களுக்கான உரிமையைப் பெறும்.[4] ஆனால் திட்டம் கசிந்த பின்னர், உயர்மட்ட தியோபந்தி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் . முகமது அசன் மக்காவில் கைது செய்யப்பட்டார். உசைன் அகமதுவுடன் சேர்ந்து மால்டாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பின்னர் நாள்பட்ட காசநோய் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

மரபு[தொகு]

இந்திய சுதந்திர இயக்கத்திற்காக இந்த குழுக்கள் செய்த தியாகங்களை நினைவுகூரும் வகையில், 2013 சனவரியில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பட்டுக் கடிதம் இயக்கம் குறித்த நினைவு தபால்தலை வெளியிட்டார்.[8]

பட்டுக் கடிதம் இயக்கம் பற்றி அறிவார்ந்த படைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Pan-Islam in British Indian Politics: A Study of the Khilafat Movement, 1918-1924.(Social, Economic and Political Studies of the Middle East and Asia). M. Naeem Qureshi. p79,80,81,82
  2. Sufi Saints and State Power: The Pirs of Sind, 1843-1947.Sarah F. D. Ansari.p82
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  4. 4.0 4.1 4.2 Ansari 1986
  5. Strachan 2001
  6. 6.0 6.1 Sims-Williams 1980
  7. Seidt 2001
  8. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=91529
  9. "रेशमी रुमाल षडयंत्र एक मुस्लीम क्रान्तिकारी आंदोलन". bookganga.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2019.

மேற்கோள்கள்[தொகு]

  • Syed Muhammad Miyan Deobandi /Muhammadullah Qasmi, Moulana (2013), Silk Letter Movement (2013), Manak Publications, Pvt. Ltd. New Delhi, ISBN 978-93-7831-322-6.
  • Ansari, K. H. (1986), Pan-Islam and the Making of the Early Indian Muslim Socialist. Modern Asian Studies, Vol. 20, No. 3. (1986), pp. 509-537, Cambridge University Press.
  • Seidt, Hans-Ulrich (2001), From Palestine to the Caucasus-Oskar Niedermayer and Germany's Middle Eastern Strategy in 1918.German Studies Review, Vol. 24, No. 1. (Feb., 2001), pp. 1-18, German Studies Association, ISSN 0149-7952.
  • Sims-Williams, Ursula (1980), "The Afghan Newspaper Siraj al-Akhbar. Bulletin (British Society for Middle Eastern Studies), Vol. 7, No. 2. (1980), pp. 118-122", British Journal of Middle Eastern Studies, London, Taylor & Francis Ltd, ISSN 0305-6139.
  • Strachan, Hew (2001), The First World War. Volume I: To Arms, Oxford University Press. USA, ISBN 0-19-926191-1.
  • M .E. Yapp, "That Great Mass of Unmixed Mahomedanism": Reflections on the Historical Links between the Middle East and Asia, British Journal of Middle Eastern Studies, Vol. 19, No. 1. (1992), pp. 3–15.
  • M. Naeem Qureshi, The 'Ulamā' of British India and the Hijrat of 1920, Modern Asian Studies, Vol. 13, No. 1. (1979), pp. 41–59.
  • Silk Letter Movement(PDF)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுக்_கடித_இயக்கம்&oldid=3845125" இலிருந்து மீள்விக்கப்பட்டது