உசைன் அகமது மதானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையது உசைன் அகமது மதானி
பதவிமால்வானா
சுய தரவுகள்
பிறப்பு(1879-10-06)6 அக்டோபர் 1879
இறப்பு5 திசம்பர் 1957(1957-12-05) (அகவை 78)
சமயம்இசுலாம்
Eraநவீன சகாப்தம்
பகுதிஇஸ்லாமிய அறிஞர் மற்றும் அரசியல்வாதி
Jurisprudenceஅனாபி
Creedசிஸ்டி ஒழுங்கின் சிஸ்டி-சபிரி கிளை
Movementதியோபந்தி
Main interest(s)ஹதீஸ், தப்சீர், பிக்
Alma materதாருல் உலூம் தேவ்பந்த்
பதவிகள்
Influenced by
  • மௌலானா மகமூத் ஹசன், ரசீத் அகமது கங்கோஹி
Influenced
  • ஜாமியத் உலமா-இ-ஹிந்த், மௌலானா நிஜாமுதீன் ஆசிர் அட்ராவி, முஹம்மது அலி ஜவ்ஹர், அப்துல் மாட்டின் சவுத்ரி

உசைன் அகமத் மதானி (Hussain Ahmad Madani ) (1879 அக்டோபர் 6 - 1957 திசம்பர் 5 ) இவர் ஓர் இந்திய இஸ்லாமிய அறிஞராவார் . 1954இல் இந்தியாவின் குடிமை கௌரமான பத்ம பூசண் விருதினைப் பெற்ற முதல் நபர்களில் இவரும் ஒருவராவார். [1][2]

1920களில் காங்கிரசு-கிலாபத் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதில் மதானி முக்கிய பங்கு வகித்தார். மேலும் 1920கள் மற்றும் 1930களில் தொடர்ச்சியான சொற்பொழிவுகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம், இந்திய தேசிய காங்கிரசுடன் இந்திய உலமாக்களின் ஒத்துழைப்புக்கு களம் தயார் செய்தார். [3]

1938 இல் இவர் எழுதிய முத்தாகிதா கௌமியாத் இஸ்ர் இஸ்லாம் என்றப் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இந்தியாவின் பிரிவினையை எதிர்த்தது. [4] அதில் மதானி ஒரு ஐக்கியப்பட்ட இந்தியாவுக்குள் ஒரு கலப்பு தேசியவாதத்தின் இலட்சியத்திற்காக வாதிட்டார். இது எந்தவொரு மதப் பகிர்வையும் விட முழு துணைக் கண்டத்திலும் தனது சமூகத்தின் பரவலுக்கும் செழிப்புக்கும் உகந்ததாக இருக்கும் என்று இவர் கருதினார் . [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

உசைன் அகமது மதானி உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில் பங்கர்மாவ் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவர் பிறந்தபோது இவரது தந்தை பங்கர்மாவில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது குடும்பம் முதலில் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள தாண்டாவில் இருந்தது . நபிகள் நாயகத்தின் வழித்தோன்றலாக இருந்த இவரது தந்தையின் பெயர் சையித் ஹபீபுல்லா என்பதாகும். [6]

கல்வி மற்றும் ஆன்மீக பயிற்சி[தொகு]

1892ஆம் ஆண்டில், தனது பதின்மூன்றாவது வயதில், தாருல் உலூம் தேவ்பந்திற்குச் சென்றார். அங்கு இவர் முகமது ஹசன் என்பவரிடம் படித்தார். ஆழ்ந்த விஞ்ஞானங்களை முடித்த பின்னர், இவர் ரசீத் அகமத் கங்கோகியின் சீடரானார். பின்னர் சூபி பாதையில் மற்றவர்களுக்கு வழிகாட்ட இவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தொழில்[தொகு]

தாருல் உலூம் தேவ்பந்தில் பட்டம் பெற்ற பிறகு, இவர் தனது குடும்பத்துடன் மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். இவர் அரபு இலக்கணம், உசுல் அல்-ஃபிக், உசுல் அல்-ஹதீஸ் மற்றும் குர்ஆனிய எக்ஸெஜெஸிஸ் ஆகியவற்றைக் கற்பிக்கத் தொடங்கினார். மதீனாவில் இந்த பல்வேறு இஸ்லாமிய அறிவியல்களை கற்பிக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். பின்னர் இவர் தலைமை ஆசிரியராகவும், தாருல் உலூம் தேவ்பந்தின் "ஷேகுல் ஹதீஸ்" ஆகவும் நியமிக்கப்பட்டார். இவர் சுமார் 28 ஆண்டுகள் இந்த பதவியில் பணியாற்றினார். [2]

சுதந்திரத்திற்கான முயற்சிகள்[தொகு]

மால்ட்டா தீவில் உள்ள ஒரு சிறைக்கு பட்டுக் கடித இயக்கத்தில் பங்கு வகித்ததற்காக இவரது ஆசிரியர் முகமது ஹசனுக்கு ஆங்கிலேயர்கள் தண்டனை விதித்த பின்னர், மதானியும் அவருக்குத் துணையாக அவருடன் சிறை செல்ல முன்வந்தார்.

மூன்றுகளுக்குப் பின்னர் விடுதலையைத் தொடர்ந்து, இவர் இந்தியாவுக்குத் திரும்பி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் மீது இவர் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தார். புதுதில்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். [7] ஷேகுல்-ஹிந்த் மௌலானா மகமது ஹசன் தலைமையிலான அடித்தளக் குழுவில் (ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் அடித்தளத்திற்காக) 1929 அக்டோபர் 29 அன்று சந்தித்தார். இவர் இரு நாடுகளின் விரிவினைக்கு எதிராக இருந்த்தால் கிழக்கு உ.பி. மற்றும் பீகாரில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் இந்தியப் பிரிவினையின் போது பாக்கித்தானுக்கு குடியேற மறுத்துவிட்டனர். இவர் 1957 இல் இறக்கும் வரை ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தலைவராக இருந்தார். (இவர் இறக்கும் வரை தாருல் உலூம் தேவ்பந்தில் ஷேகுல் ஹதீஸின் பதவியையும் வகித்தார்).. [2]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

மரணம் மற்றும் மரபு[தொகு]

மௌலானி மதானி 1957 திசம்பர் 5 அன்று இறந்தார். [9]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2017.
  2. 2.0 2.1 2.2 The rise and fall of the Deoband movement பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம், The Nation (newspaper), Published 27 June 2015, Retrieved 19 July 2017
  3. Sikka, Sonia; Puri, Bindu; Lori G. Beaman (2015) (in English). Living with Religious Diversity. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781317370994. 
  4. Peers, Douglas M.; Gooptu, Nandini (2017) (in English). India and the British Empire. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780192513526. "Madani, head for several decades of the Deoband training centre for theologians, strongly supported Congress nationalism and the ideal of a 'composite nationalism' within an united India, which he thought would be more conducive to the spread and prosperity of his community over the entire subcontinent than any religious partition." 
  5. Peers, Douglas M.; Gooptu, Nandini (2017) (in English). India and the British Empire. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780192513526. "Madani, head for several decades of the Deoband training centre for theologians, strongly supported Congress nationalism and the ideal of a 'composite nationalism' within an united India, which he thought would be more conducive to the spread and prosperity of his community over the entire subcontinent than any religious partition." 
  6. Metcalf, Husain Ahmad Madani 2012.
  7. How Indians see Jinnah. BBC News. Retrieved on 19 July 2017
  8. India Post issued a commemorative postage stamp in Husain Ahmad Madani's honour in 2012 பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம், The Nation (newspaper) article shows the stamp image, Published 27 June 2015, Retrieved 19 July 2017
  9. Abu Muhammad Maulana Sana’ullah Sad Shuja’abadi (in Urdu). Ulama-e-Deoband Ke Aakhri Lamhaat. Maktaba Rasheediya, சகாரன்பூர். பக். 95. 

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Al-E’tidaal Fi Maraatib ar-Rijaal (English Translation), Islamic Book Service, Pages 34–35
  • Aap Beeti (English Translation), Darul Isha’at, Pages 375–376
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசைன்_அகமது_மதானி&oldid=3656878" இலிருந்து மீள்விக்கப்பட்டது