படூர்
படூர் Padur, Kanchipuram படூர் | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 12°48′28″N 80°13′33″E / 12.807700°N 80.225800°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
ஏற்றம் | 31 m (102 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 603 103 |
அருகிலுள்ள பகுதிகள் | சிறுசேரி, நாவலூர், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, திருவிடந்தை மற்றும் கோவளம் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | டாக்டர். எம். ஆர்த்தி, இ. ஆ. ப. |
இணையதளம் | https://kancheepuram.nic.in |
படூர் (ஆங்கில மொழி: Padur, Kanchipuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள படூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12°48′28″N 80°13′33″E / 12.807700°N 80.225800°E ஆகும். இந்தியாவின் சர்வதேச தொழில்நுட்பப் பூங்காக்களில் ஒன்றான சிறுசேரி பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே படூர் அமையப் பெற்றுள்ளது.[2][3] சிறுசேரி, நாவலூர், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, திருவிடந்தை மற்றும் கோவளம் ஆகியவை படூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
படூர் பகுதியில் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி ஒன்று அமைந்துள்ளது.[4] மேலும், இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றும் படூரில் நிறுவப்பட்டுள்ளது.[5]
சுப்ரீம் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று படூரில் சேவைகள் செய்து கொண்டிருக்கிறது.[6]
இங்குள்ள கிருஷ்ணசாமி என்கிற பெருமாள் கோயில்[7] மற்றும் பழண்டியம்மன் கோயில்[8] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Liffy Thomas (2021-09-25). "Wake up Padur!". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ Sathik Basha (2022-12-23). "Poor administration turns Padur roads into accident hot spots". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ Jayanthi Jacob (2016-10-07). "Residents of Padur on OMR raise their voices against dumping". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "Contact us now for Admissions in Hindustan Schools" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "HITS-Contact". hindustanuniv.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "Supreme Multi-speciality Hospitals Omr Padur". www.supremehospitals.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "Arulmigu Krishanaswamy @ Perumal Temple, Padur - 603107, Kancheepuram District [TM002945].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "Arulmigu Pazhandiamman Temple, Padur - 603107, Kancheepuram District [TM002952].,pazhandiyamman,pazhandiyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.