உள்ளடக்கத்துக்குச் செல்

படிப்பினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுக்கநெறியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

படிப்பினை (moral) என்பது பாடத்தின் வழியாகவோ, நிகழ்வின் வழியாகவோ அறிந்துகொள்ளும் தகவலாகும். சில கதைகளில் படிப்பினைகளை ஆசிரியரே குறிப்பிடுவார். மற்ற சில கதைகளில் படிப்பவரே படிப்பினையைத் தீர்மானித்துக் கொள்வார். படிப்பினைகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட பல நூல்கள் உள்ளன. பல நாடுகளில் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குப் படிப்பினைகளைக் கற்றுத் தருவதும் உண்டு. குழந்தைகளிடம் கதையைச் சொல்லி, அதிலிருந்து அவர்கள் கற்றறிந்ததைச் சோதிப்பர். பள்ளிப் பாடங்களிலும் படிப்பினை தொடர்பான பாடங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான படிப்பினைகளை கூறும் கதைகள் 'நீதிக் கதைகள்' எனப்படுகின்றன.[1][2][3]

படிப்பினையை அறிவது

[தொகு]

படிப்பினையைப் பற்றி குறிப்பிடும்போது பிரபலமான ஈசாப்பின் நீதிக்கதையை எடுத்துக்காட்டாகக் கூறுவர். இந்தக் கதையில் முயலும் ஆமையும் ஓட்டப் போட்டியில் பங்கெடுத்ததாகக் குறிப்பிருக்கும். விரைவாக ஓடக்கூடிய திறன் இருந்தும் அலட்சியமாகத் தூங்கியதால் முயல் வெற்றி வாய்ப்பை இழக்கும். மெதுவாக நகரக்கூடிய ஆமை வெற்றி பெறும். இதில் நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்ற படிப்பினை கிடைக்கும். இதே கதையில் வேறு மாதிரியான படிப்பினைகளும் தோன்றக் கூடும். எடுத்துக்காட்டாக, ஆணவத்துடன் செயல்படுவதால் தோல்வியைத் தழுவலாம் என்ற படிப்பினையைப் பெறலாம்.

சான்றுகள்

[தொகு]
  1. Vuong, Quan-Hoang (2022). The Kingfisher Story Collection. AISDL. ISBN 979-8353946595.
  2. "Aesop's Fables: Online Collection - Selected Fables". Retrieved 18 March 2013.
  3. Dennis Butts (2006). Jack Zipes (ed.). Children's Literature. New York: Oxford University Press. pp. 93–96. ISBN 0195146565.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிப்பினை&oldid=4100328" இலிருந்து மீள்விக்கப்பட்டது