உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:படிப்பினை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த கட்டுரையில் எவ்வாறான மேற்கோள்களைச் சேர்ப்பது? எல்லாமே Common knowledge அடிப்படையிலான facts தானே! இவற்றில் நம்பகத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் தகவலோ, நடுநிலை மீறிய தகவலோ இல்லை. படி: பயனர்:Ravidreams, பயனர்:Kanags -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:38, 4 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ்க்குரிசில், இக்கட்டுரையில் சில வரிகளை கொடுத்து எவ்வாறு, ஏன் ஆதாரம் தேவை எனவும் விவரிக்கிறேன். // படிப்பினைகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட பல நூல்கள் உள்ளன. // எந்தெந்த நூல்கள் ? அதற்கான நூல்களை ஆதாரமாக தருக. //பல நாடுகளில் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குப் படிப்பினைகளைக் கற்றுத் தருவதும் உண்டு.// எந்த நாட்டில் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது, சான்றுகளை குறிப்பிடுக. // குழந்தைகளிடம் கதையைச் சொல்லி, அதிலிருந்து அவர்கள் கற்றறிந்ததைச் சோதிப்பர். பள்ளிப் பாடங்களிலும் படிப்பினை தொடர்பான பாடங்கள் இடம்பெறுகின்றன.// இவ்வாறு நடக்கும் சோதனை குறித்த செய்திகளை மேற்கோளாக சேர்த்திடுக. //இவ்வாறான படிப்பினைகளை கூறும் கதைகளை 'நீதிக் கதைகள்' எனப்படுகின்றன.// நீதிக் கதைகள் குறித்த கருத்துகளை மேற்கோளாக இணைக்கவும்.
// படிப்பினையைப் பற்றி குறிப்பிடும்போது பிரபலமான ஈசாப்பின் நீதிக்கதையை எடுத்துக்காட்டாக கூறுவர். // யாரால் எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது ? // இந்தக் கதையில் முயலும் ஆமையும் ஓட்டப் போட்டியில் பங்கெடுத்ததாகக் குறிப்பிருக்கும். விரைவாக ஓடக்கூடிய திறன் இருந்தும் அலட்சியமாகத் தூங்கியதால் முயல் வெற்றி வாய்ப்பை இழக்கும். மெதுவாக நகரக்கூடிய ஆமை வெற்றி பெறும். இதில் நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்ற படிப்பினை கிடைக்கும். இதே கதையில் வேறு மாதிரியான படிப்பினைகளும் தோன்றக் கூடும். எடுத்துக்காட்டாக, ஆணவத்துடன் செயல்படுவதால் தோல்வியைத் தழுவலாம் என்ற படிப்பினையைப் பெறலாம். // முயல்-ஆமைக் கதை குறிக்கும் தளத்தினை வெளியிணைப்பாக கொடுக்கலாம். இன்னும் நிறைய ஆதாரம், சான்று, வெளியிணைப்புகளை இடலாம். பொது அறிவு என்பதற்கு நிச்சயமாக ஆதாரம் தேவை. :D --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:07, 4 செப்டம்பர் 2014 (UTC)
கூடுதல் இணைப்புகள் தருவதில் சிக்கலில்லை. சான்று தருவது தான் சிக்கலே! இவை பொதுவான தகவல்களாக உள்ளதால் தனித் தனியாக சான்று தரத் தெரியவில்லை. எ.கா: (”குழந்தைகளுக்கு கதை சொல்வதும், பள்ளிகளில் moral science பாடங்கள் இருப்பதும் பொதுவாக அறியப்படுபவையே. நீதிக்கதை என்பது அகராதியில் தேடி புரிந்துகொள்ளக் கூடிய சொல். Common knowledge அடிப்படையில் வருகிறது. வரலாற்றுக் கதைகளையும், நீதிக்கதைகளையும் முன்னிறுத்தி நூல்கள் எழுதப்படுவதும் பொதுவானதே. நான் சில எடுத்துக்காட்டுகளை காட்டியிருக்கலாம். ஆனால், நீதிக்கதைகளை முன்னிறுத்தி நூல்கள் எழுதப்படும் என்பதற்கு சான்று எப்படி கிட்டும்?) முயல் ஆமை கதை உள்ளிணைப்பாக தரப்பட்டுள்ளது. உள்ளடக்கத்தைப் படித்து பார்த்து அதில் நம்பகத்தன்மை/ நடுநிலை இல்லையென்றால் மட்டும் சான்றில்லை என குறிப்பிடுங்கள். சர்ச்சைக்குரிய விடயம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுரையில் நம்பகத்தன்மை கேள்விக்கு உட்படுத்தாமலே, சான்றில்லை என்று சொல்லி நீக்கும் போக்கும் காணப்படுகிறது. இந்த கட்டுரை அவ்வகையைச் சார்ந்ததில்லை. இன்னும் பொருத்தமான வார்ப்புரு இட்டிருக்கலாம். எனக்கு சான்றுகள் எதுவும் கிட்டாததால் நீங்களே சான்றுகளை சேர்த்துவிடுங்கள். :) தவிரவும், நம்பக்கூடிய தகவலாகவும், அடிப்படையானவையாக இருந்தும் அனைத்திற்கு சான்று கேட்பது பொருத்தமானதல்ல. மற்றொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இங்கே நீங்கள் கேட்டிருப்பதைப் போல் அங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறேன். Common Knowledge factsக்கு சான்று தேவைப்படாது என்பதை உணர்வீர்கள். நம்பகத்தன்மை கிட்டாத இடங்களில் மட்டும் வார்ப்புரு இடுவது பொருத்தமாய் இருக்கும். எல்லாவற்றிற்கும் சான்று கோருவதும்/சேர்ப்பதும் இயலக்கூடிய காரியமல்ல. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:19, 4 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:படிப்பினை&oldid=1718328" இலிருந்து மீள்விக்கப்பட்டது