ஒழுக்கநெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) அறம் என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

ஒழுக்கநெறி (Morality) என்பது நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்றுபோல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. ஒழுக்கநெறிகள், சமூகம், மெய்யியல், சமயம், தனிமனிதரின் மனச்சாட்சி போன்றவற்றால் வரையறுக்கப்படுகின்றன.

நெறி சார்ந்ததும், உலகம் தழுவியதுமான பொருளில், ஒழுக்கநெறி என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய இலட்சிய நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இவ்வாறான "விதிமுறை" சார்ந்த ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலேயே "கொலை ஒழுக்கநெறிக்கு மாறானது" போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழுக்கநெறி&oldid=1946346" இருந்து மீள்விக்கப்பட்டது