படிக்காதவன் (1985 திரைப்படம்)
படிக்காதவன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | என். வீராசாமி வி. ரவிச்சந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் அம்பிகா ஜெய்சங்கர் ரம்யா கிருஷ்ணன் வடிவுக்கரசி இந்திரா டிஸ்கோ சாந்தி தேவிகாராணி மாஸ்டர் சுரேஷ் மாஸ்டர் பிஜு பேபி ப்ரியா சூர்யகலா குண்டு கல்யாணம் நாகேஷ் விஜய்பாபு ஜனகராஜ் தேங்காய் சீனிவாசன் பூர்ணம் விஸ்வநாதன் செந்தாமரை கிருஷ்ணமூர்த்தி குள்ளகாந்தி |
ஒளிப்பதிவு | ஏ. ராமசாமி |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் எஸ். பி. மோகன் |
வெளியீடு | நவம்பர் 11, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படிக்காதவன் இயக்குநர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-நவம்பர்-1985. 1982இல் வெளியான குத் தார் என்ற இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரு தம்பிகள் விதிவசத்தால் தங்கள் அண்ணனை விட்டுப் பிரிகின்றனர். ஒரு பெரியவரால் தத்து எடுக்கப்படும் அச்சிறுவர்கள் அவரின் பாதுகாப்பில் வளர்கின்றனர். இளைய அண்ணண் டாக்ஸி ஓட்டுநர் ஆகிறார். அவரின் கடின உழைப்பில் தம்பியைப் படிக்க வைக்கிறார். அண்ணனின் உழைப்பை மறந்து ஊதாரியாகவும் படிப்பில் அக்கறை இல்லாமலும் இருக்கிறார் தம்பி. அவரின் சதியால் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார் இளைய அண்ணன். அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி தான் மூத்த அண்ணன். வழக்கின் முடிவு என்ன, பிரிந்த அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை. இத்திரைப்படம் அண்ணன் தம்பியின் பாசப் பிணைப்பைக் காட்டும் குடும்பச் சித்திரம் ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - ராஜசேகர்
- ரஜினிகாந்த் - ராஜேந்திரன்
- அம்பிகா - மேரி
- ராமச்சந்திரனாக விஜய் பாபு
- ஜெய்ஷங்கர் - சக்ரவர்த்தி
- நாகேஷ் - ரஹீம்
- பூர்ணம் விஸ்வநாதன் - வேதாச்சலம்
- ராமநாதனாக தேங்காய் சீனிவாசன்
- ஜனகராஜ் - கபாலி
- ராஜசேகரின் மனைவியான ராதாவாக வடிவுக்கரசி
- செந்தாமரை - வழக்கறிஞர்
- ரம்யா கிருஷ்ணன் - மஞ்சு
- ஃபரிதாவாக இந்திரா
- சாந்தி
- சூர்யகலா
- ராசி
- ராமுவின் நண்பராக குண்டு கல்யாணம்
வெளி இணைப்புகள்
[தொகு]- [1]பரணிடப்பட்டது 2011-12-27 at the வந்தவழி இயந்திரம்
- யூடியூபில் படிக்காதவன் முழுத்திரைப்படம்
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்