படிகவியல் மீளாய்வுகள்
படிகவியல்.மீள். doesn't exist. |
படிகவியல்மீள் doesn't exist. |
![]() | |
| துறை | படிகவியல் |
|---|---|
| மொழி | ஆங்கிலம் |
| பொறுப்பாசிரியர் | பெட்ரா போம்பிக்சு |
| Publication details | |
| வரலாறு | 1987-முதல் |
| பதிப்பகம் | டெய்லர் & பிரான்சிசு |
| வெளியீட்டு இடைவெளி | காலாண்டிதழ் |
| 2.467 (2020) | |
| Standard abbreviations | |
| ISO 4 | படிகவியல்.மீள். |
| Indexing | |
| CODEN | CRRVEN |
| ISSN | 0889-311X 1476-3508 |
| LCCN | 87640399 |
| OCLC no. | 50409833 |
| Links | |
படிகவியல் மீளாய்வுகள் (Crystallography Reviews) என்பது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ஒரு காலாண்டு ஆங்கில மொழி அறிவியல் ஆய்விதழ் ஆகும். படிகவியலுடன் தொடர்புடைய மூலக்கூறு, படிக அமைப்பு மற்றும் பண்புகள் பற்றிய அனைத்து அம்சங்களையும் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் சக அறிவியல் ஆய்வாளர்களால் மீளாய்வு செய்யப்பட்டு இவ்விதழில் வெளியிடப்படுகின்றன. டெய்லர் மற்றும் பிரான்சிசு என்ற பன்னாட்டு புத்தக நிறுவனம் இவ்விதழை அச்சிட்டு வெளியிடுகிறது. மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயான். ஆர். எலிவெல் இதன் தலைமைப் பத்திரிகையாசிரியராகச் செயல்படுகிறார்.
சுருக்கமும் அட்டவணைப்படுத்தலும்
[தொகு]படிகவியல் மீளாய்வுகள் பத்திரிகை சுருக்கப்பட்டும் குறியிடப்பட்டும் உள்ளது.[1][2]
- வேதியியல் சுருக்கங்கள் சேவை/வேதியியல் சுருக்கங்கள் சேவை மூலக்குறியீடு
- விரிவாக்கப்பட்ட அறிவியல் மேற்கோள் குறியீடு
- இசுகோபசு என்ற அறிவியல் சுருக்கம் மற்றும் மேற்கோள் தரவுத்தளம்
செய்தி இதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, படிகவியல் மீளாய்வுகள் பத்திரிகையின் படி 2020 ஆம் ஆண்டின் தாக்க காரணி மதிப்பு 2.467 என்பதாக இருந்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Master Journal search". Coverage. Thomson Reuters. Archived from the original on 2011-07-17. Retrieved 2011-03-13.
- ↑ "Crystallography Reviews". Chemical Abstracts Service Source Index (CASSI) (Displaying Record for Publication). அமெரிக்க வேதியியல் குமுகம். Retrieved 2011-03-13.
- ↑ "Crystallography Reviews". 2020 Journal Citation Reports. அறிவியல் வலை (Sciences ed.). Thomson Reuters. 2021.
