உள்ளடக்கத்துக்குச் செல்

தாக்க காரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாக்க காரணி (Impact factor) என்பது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகும் ஆய்விதழ்களில் பதிப்பு சார்ந்த மதிப்பீடாகும். இது பல்வேறு துறை சார்ந்த ஆய்விதழ்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும் அதை மதிப்பிடவும் பயன்படுகிறது. யூச்சீன் கார்ஃபீல்டூ (Eugene Garfield) என்பவர் இதை உருவாக்கினார். இவர் அறிவியல் தகவல் நிறுவனம் (Institute for Scientific information) என்ற நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். இது இன்று, தாம்சன் ராய்ட்டர்சு (Thomson Reuters) என்னும் குழுமத்தின் பங்காக இருந்துவருகிறது. தாக்கக் காரணியை ஆண்டுதோறும் தாம்சன் ராய்ட்டர்சு ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையில் இணையும் ஆய்விதழ்களுக்குக் கணக்கிடுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு முந்தைய இரு ஆண்டுகளில் ஒரு ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சராசரியாக எவ்வளவு முறை (பிறஆய்வுக் கட்டுரைகளில்) மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பதே அந்த இதழின் அவ்வாண்டுக்கான தாக்க காரணியாகக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, ஓர் அறிவியல் இதழில், 2020-ல் n1 கட்டுரைகளும், 2021-ல் n2 கட்டுரைகளும் வெளியாகியிருந்து, அந்த n1 கட்டுரைகளில் ஏதேனும் ஒருசிலவாவது k​​​1 தடவையும், n2 கட்டுரைகளில் ஏதேனும் ஒருசிலவாவது k2 தடவையும் மற்ற ஆய்வாளர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன என்று வைத்துக் கொண்டால்,

2022-இல், தாக்கக் காரணி = (k1 + k2)/(n1 + n2)

என்று கணிக்கப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்க_காரணி&oldid=3514922" இலிருந்து மீள்விக்கப்பட்டது