ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர், தனது கண்டுபிடிப்புகளையும் அறியப்பட்டவைகளையும் வெளியிட சில இதழ்கள் செயல்படுகின்றன. அவை, ஆய்வாளரின் கட்டுரைகளை தரம் பார்த்தும் முக்கியத்துவம் கண்டும் இவ்வாய்விதழ்களில் வெளியிடுகின்றன. இவ்வாறு ஆய்வைப்பற்றி வெளியிடும் இதழே ஆய்விதழ் (Scientific journal) என அறியப்படுகின்றது. (எ. கா) நேச்சர் (Nature).

உலகெங்கும் வெளிவரும் பல இதழ்களில், இதழின் தன்மை பலவாக மாறுபடும். அவைகளுள் சில திரைத்துறை, விளையாட்டு, வேலைவாய்ப்பு போன்றவற்றை மையப்படுத்தி பல கருத்துக்களை வெளியிட்டும் பரப்புரை செய்தும் வருகின்றன.

அறிவியல் ஆய்விதழ்கள்[தொகு]

அறிவியல் ஆய்விதழ்கள் என்பது அறிவியல் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட சில புதிய தகவல்களைப் பற்றிய அறிக்கையாகும். பல ஆயிரம் அறிவியல் சார்ந்த ஆய்விதழ்கள் உள்ளன. பல இதழ்கள் குறிப்பிட்ட சில துறையை மட்டும் உள்ளடக்கியும், சில முதிய இதழ்க்குழுமமான “நேச்சர்” பல்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை அதன் தலைப்பின் கீழ் அச்சிட்டும் வருகின்றன. அவ்வாறு ஆய்விதழ்களில் வரும் கட்டுரையானது, அறிஞர்களால் மதிப்பிடப்பட்டு, அக்கட்டுரைக்கு அறிவியல் இதழில் இடம் பெறும் தகுதியும் காலமும் உள்ளதா எனச் சோதிக்கப்பட்டு இதழில் வெளியிடப்படுகின்றன. அறிவியல் ஆய்வில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் தாக்க காரணி மிக்க ஆய்விதழில் வெளியிடுதல் என்பது முக்கியமாகும். இது வெளியிடுபவருக்கு அவரது துறையில் உள்ளவருக்கும் அதன் சார்ந்து ஆய்வு மேற்கொள்பவருக்கும் அவரையும் அவரது ஆய்வின் நுணுக்கங்களையும் அறியும் முக்கிய காரணியாக செயலாற்றுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்விதழ்&oldid=2744608" இலிருந்து மீள்விக்கப்பட்டது