படமனவர்திகாவல்

ஆள்கூறுகள்: 12°51′41″N 77°29′06″E / 12.861366595707544°N 77.48494989888331°E / 12.861366595707544; 77.48494989888331
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படமனவர்திகாவல்
சிற்றூர்
படமனவர்திகாவல் is located in கருநாடகம்
படமனவர்திகாவல்
படமனவர்திகாவல்
கருநாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°51′41″N 77°29′06″E / 12.861366595707544°N 77.48494989888331°E / 12.861366595707544; 77.48494989888331
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
வட்டம்பெங்களூர் தெற்கு
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்2.97 km2 (1.15 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,912[1]
மொழிகள்
 • அதிகார்ப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநேIST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்560062
அருகில் உள்ள நகரம்பெங்களூர்
குடிமை முகமைஊராட்சி

படமனவர்திகாவல் அல்லது பிஎம் காவல் (Badamanavarthekaval or BM Kaval) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பெங்களூர் நகர மாவட்டத்தின் பெங்களூர் தெற்கு வட்டத்தில் பெங்களூரின் புறநகரில் அமைந்துள்ளது.

நிலம் தொடர்பான சட்டச் சிக்கல்கள்[தொகு]

இந்த கிராமம் பெங்களூரின் புறநகரில் அமைந்துள்ளதால், நிலம் தொடர்பாக பல சட்டச் சிக்கல்கள் உள்ளன. [2] வேளாண் நிலங்களில் அமைக்கப்பட பல வீட்டுமனைத் திட்டங்கள் அகற்றப்பட்டன. [3] அரசு நிலங்கள், ஏரிகள், வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளை முறைப்படுத்த முயற்சி நடந்தது. [4] பெங்களூர் நகர மாவட்டத்தின் துணை ஆணையர் 285 ஏக்கர் நிலத்தை கோடாய் குழுமத்திற்கு முறேகேடாக வழங்கியுள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்தது. [5] மேலும் கர்நாடக அரசு இந்த உத்தரவைத் தடுக்க உயர்நீதிமன்றத்தை அணுகியது. [6] ஒரு காலத்தில் மயில்கள், மான்கள், முயல்கள், குள்ளநரிகள் போன்ற பலவிதமான உயிரினங்களின் வாழ்ந்த பகுதியாக இது இருந்தது. ஆனால், பெங்களூரின் தெற்கு பகுதியில் இப்பகுதியில் உள்ள பசுமையான காடுகள், பகைர் ஹூக்கும் நிலத் திட்டத்தால் கான்கிரீட் காடாக மாறியுள்ளது. அதன் வளமான தாவரங்களும், விலங்கினங்களும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன. [7] காட்டுத் தீ, விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைநோக்கர்கள் நுழைவதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதற்காக ஆளில்லா வீனூர்திகளைப் பயன்படுத்துகின்றனர். [8] [9] ரோரிச் எஸ்டேட்டில் ஒரு திரைப்பட நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது. [10] மேலும் உயர்நீதிமன்றம் அதற்கான நிலப்பரிமாற்ற செயல்முறையை தடுத்து. [11]

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள் தொகை விவரங்கள் [12] [13] [14] [15] [16] [17]
ஊர் பெயர் எக்டேர் பரப்பளவு (1981) (2001) குடும்பங்கள் (1981) மக்கள் தொகை (1971) 1981 1991 2001 2011
படமனவர்திகாவல் 2968.03 104.09 217 878 1178 1424 2060 3912

2011[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு
மக்கள் தொகை நபர்கள் ஆண்கள் பெண்கள்
மொத்தம் 3,912 2,009 1,903
வயது 0-6 ஆண்டுகள் 505 255 250
பட்டியல் சாதியினர் (SC) 1,509 771 738
பட்டியல் பழங்குடியினர் (ST) 126 66 60
எழுத்தறிவு பெற்றவர்கள் 2,380 1,375 1,005
படிப்பறிவற்றவர்கள் 1,532 634 898

மேற்கோள்கள்[தொகு]

  1. "2011 census". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  2. BM Kaval irregularities: Disputed land inspected https://www.deccanherald.com/city/bengaluru-infrastructure/bm-kaval-irregularities-disputed-land-inspected-740417.html
  3. District officials remove illegal layout developed on Agri land https://www.deccanherald.com/city/bengaluru-infrastructure/district-officials-remove-illegal-layout-developed-on-agri-land-902038.html
  4. ‘A new ordinance bad for Bengaluru’ https://www.deccanherald.com/metrolife/metrolife-your-bond-with-bengaluru/a-new-ordinance-bad-for-bengaluru-845684.html
  5. DC awards 285-acre disputed land to Khodays https://www.deccanherald.com/city/special-dc-reverses-order-706676.html
  6. State government moves HC against special DC’s order https://www.thehindu.com/news/cities/bangalore/state-government-moves-hc-against-special-dcs-order/article25801036.ece
  7. A forest land turned into concrete jungle https://www.deccanherald.com/content/391204/a-forest-land-turned-concrete.html
  8. Coronavirus lockdown: Drones to track poachers, forest fires around Bengaluru https://www.deccanherald.com/city/top-bengaluru-stories/coronavirus-lockdown-drones-to-track-poachers-forest-fires-around-bengaluru-823864.html
  9. Birders throw கோவிட்-19 safety to the winds, get barred from Valley School https://www.newindianexpress.com/cities/bengaluru/2020/jun/27/birders-throw-covid-safety-to-the-winds-get-barred-from-valley-school-2161995.html
  10. Film city plan at Roerich Estate violates SC orders https://www.deccanherald.com/city/film-city-plan-at-roerich-estate-violates-sc-orders-762666.html
  11. Karnataka HC stays transfer of khata of estate next to Tataguni https://www.newindianexpress.com/cities/bengaluru/2018/dec/22/hc-stays-transfer-of-khata-of-estate-next-to-tataguni-1915043.html
  12. "1981 census Households" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  13. "1981 census" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  14. "1991 census" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  15. "1991 census" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  16. "1991 census" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  17. "2001 census" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படமனவர்திகாவல்&oldid=3748418" இலிருந்து மீள்விக்கப்பட்டது