உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச்குலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்ச்குலா
पंचकुला
ਪੰਚਕੂਲਾ
நகரம்
மானசா தேவி கோயில் வளாகத்தில் உள்ள யக்ஞ்சாலை
மானசா தேவி கோயில் வளாகத்தில் உள்ள யக்ஞ்சாலை
அடைபெயர்(கள்): சண்டிகர் மூநகரம்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்பஞ்ச்குலா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பஞ்ச்குலா மாநகராட்சி
 • மேயர்உபிந்தர் கவுர் வாலியா[1][2] (காங்கிரசு)
பரப்பளவு
 • மொத்தம்816 km2 (315 sq mi)
ஏற்றம்
365 m (1,198 ft)
மொழிகள்
 • அலுவல்முறைஇந்தி, பஞ்சாபி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
பின்கோடு
134 109 - 134 114
தொலைபேசி குறியீடு+91-172-XXXXXXX
வாகனப் பதிவுHR-03
இணையதளம்panchkula.nic.in

பஞ்ச்குலா (Panchkula, இந்தி: पंचकूला) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா மாவட்டத்தில் திட்டமிடப்பட்டவாறு கட்டமைக்கப்பட்ட நகரமாகும். இது சண்டிகர் ஒன்றியப் பகுதியுடனும் மொகாலி நகரத்துடனும் தொடர்ச்சியான நிலப்பகுதியின் அங்கமாகும். சண்டிகரிலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 4 கிமீ (2.4 மைல்கள்) தொலைவிலும் புது தில்லியிலிருந்து வடகிழக்கில் 259 கிமீ (162 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது. சண்டிகர்-மொகாலி-பஞ்ச்குலா பெருநகர வட்டாரம் கூட்டாக மூ-நகரம் எனப்படுகின்றது; இந்தக் கூட்டுப் பரப்பில் வாழும் மக்கள்தொகை 2 மில்லியனுக்கும் கூடுதலாக உள்ளது.

இந்த நகரத்தில் இந்தியத் தரைப்படையின் மேற்கு ஆளுகையின் தலைமையகம், சண்டிமந்திர் படைக் குடியிருப்பு (Chandimandir Cantonment), அமைந்துள்ளது. 2011இல் பஞ்ச்குலாவின் மக்கள்தொகை 561,293 ஆக இருந்தது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Saini, Manveer (5 July 2013). "Upinder Walia is 1st mayor of Panchkula MC". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  2. "Ahluwalia is Panchkula's first woman Mayor". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  3. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பஞ்ச்குலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச்குலா&oldid=2086427" இலிருந்து மீள்விக்கப்பட்டது