பஜூர் மாவட்டம்
பஜூர் மாவட்டம்
ضلع باجوڑ | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
ஆள்கூறுகள்: 34°41′N 71°30′E / 34.683°N 71.500°E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
தலைமையிடம் | கார் நகரம் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,290 km2 (500 sq mi) |
மக்கள்தொகை (2017)[2] | |
• மொத்தம் | 10,90,987 |
• அடர்த்தி | 850/km2 (2,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 |
முக்கிய மொழி | பஷ்தூ மொழி (99.5%) |
தாலுகாக்கள் | 7 |
இணையதளம் | bajaur |
பஜூர் மாவட்டம் (Bajaur District) (பஷ்தூ: باجوړ ولسوالۍ, உருது: ضلع باجوڑ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கார் நகரம் ஆகும்.[3]கார் நகரம், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு 118 வடக்கே கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பஜூர் மாவட்ட மக்கள் தொகை 10,93,684 ஆகும். ஆப்கானித்தான் எல்லையில் அமைந்த பஜூர் மாவட்டம், துராந்தா கோட்டை ஒட்டி 52 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ளது.
அமைவிடம்
[தொகு]பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த குனார் பள்ளத்தாக்கில் அமைந்த பஜூர் மாவட்டத்தின் தெற்கில் மொகமந்து மாவட்டம், கிழக்கில் சுவாத் மாவட்டம், வடக்கில் மேல் தீர் மாவட்டம், மேற்கில் ஆப்கானித்தான் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]பஜூர் மாவட்டம் 7 தாலுகாக்கள் கொண்டது.[4]அவைகள்:
- பார் சாமர் கண்ட் தாலுகா
- பாராங் தாலுகா
- கார் தாலுகா
- மமுண்ட் தாலுகா
- நவாகை தாலுகா
- சலர்சாய் தாலுகா
- உத்மன்கேல் தாலுகா
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 10,90,987ஆகும். அதில் ஆண்கள் 5,56,036 மற்றும் பெண்கள் 5,34,895 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 48.65% ஆகும். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.99.5% மக்கள்பஷ்தூ மொழி பேசுகின்றனர். [2]
மக்கள் பிரதிநிதிகள்
[தொகு]இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதியும், மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Historical and administrative profile of the Bajaur Agency (.fata.gov.pk)
- ↑ 2.0 2.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "Bajaur". www.globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
- ↑ (PDF). 2018-03-26 https://web.archive.org/web/20180326141456/http://www.pbscensus.gov.pk/sites/default/files/bwpsr/fata/BAJAUR_SUMMARY.pdf. Archived from the original (PDF) on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
{{cite web}}
: Missing or empty|title=
(help)