பசோஹ்லி ஓவியப் பாணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பசோஹ்லி ஓவியப் பாணி வட இந்திய ஓவியப் பாணிகளுள் ஒன்று. பசோஹ்லி என்பது, பண்டைக்காலத்தில், இன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரவி ஆற்றங்கரையில் இருந்த விஸ்வஸ்தாலி என்னும் நாட்டைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனக் கருதப்படுகின்றது. இது இன்று இப்பகுதியில் உள்ள நகர் ஒன்றுக்குரிய பெயர் ஆகும். இந் நகரம் பசோஹ்லி எனப்படும் ஓவியப் பாணிக்குப் பெயர் பெற்றது. இந்த ஓவியப்பாணி, 17 ஆம் நூற்றாண்டின் நாலாம் காலாண்டில் தொடங்கி வளர்ந்த ஒரு பாணியாகும். 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இப்பகுதியை ஆண்ட ராஜா கிருபால் பால் என்பவர் காலத்தைச் சேர்ந்த ஓவியம் ஒன்றே இப்பாணியில் வரையப்பட்டு இன்று அறியப்பட்டுள்ள மிகப் பழைய ஓவியமாகும். பசோஹ்லியில் உருவான இந்தப் பாணி, மங்கொட், நூர்பூர், குலு, மண்டி, சுகெத், பிலாஸ்பூர், நாலகர், சம்பா, குலெர், கங்ரா போன்ற மலைப்பகுதி நாடுகளுக்கும் பரவியது. 1921 ஆம் ஆண்டின், இந்தியத் தொல்லியல் ஆய்வு அறிக்கையிலேயே முதன் முதலாக இப்பாணி ஓவியம் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. அக்காலத்தில், ஒப்பாணியைச் சேர்ந்த ஓவியங்கள் சிலவற்றை லாகூர் மைய அருங்காட்சியகத்துக்காக வாங்கிய அதன் காப்பாளர், இவை முகலாயர் காலத்துக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- தஞ்சாவூர் ஓவியப் பாணி
- முகலாய ஓவியம்
- ராஜபுதன ஓவியப் பாணி
- மதுபானி ஓவியப் பாணி
- கங்ரா ஓவியப் பாணி
- பஹாரி ஓவியப் பாணி
படத்தொகுப்பு
[தொகு]-
பத்திரகாளி, Gouache on paper (1660-70).
-
மங்கொட் மகாராஜா சித்தல் தேவ் வழிபாட்டில் இருக்கிறார். மை, நீர் வண்ணம், மற்றும் வெள்ளி என்ன்பவற்றால் கடதாசியில் வரையப்பட்டது. (1690).
-
கண்ணன் அருகில் இருக்க, ராதை பசுக்களுடன் பேசும் காட்சி.(1685).
-
நீர்வண்ணமும், பொன்னும் கொண்டு கடதாசித் தாளில் வரையப்பட்டது. (1710).