கங்ரா ஓவியப் பாணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கங்ரா ஓவியப் பாணி (Kangra painting), 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்திய மலைப்பகுதியான கங்ராவில் வழங்கி வந்தது. இது பஹாரி ஓவியப் பாணியின் ஒரு பிரிவாகும். இப்பகுதியை ஆண்ட மகாராஜா சன்சார் சந்த் என்பவரின் காலத்தில் கங்ரா, பஹாரி ஓவியப் பாணியின் செல்வாக்கு மையமாகத் திகழ்ந்தது. இவர் காலத்திலேயே இப் பாணியிலான சிறந்த ஓவியங்கள் வரையப்பட்டன. பாகவத புராணம், கீத கோவிந்தம், நள தமயந்தி, சத்சாய் போன்ற அக்கால இலக்கியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத் தக்கவை. மகாராஜாவும், மற்றவர்களும் தொடர்புபட்ட அரசவைக் காட்சிகளும் வரையப்பட்டன.