பகுப்பு பேச்சு:பாடல் பெற்ற தலங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபி, இப்பகுப்பில் உள்ள பல ஊர்கள் அவற்றில் உள்ள கோயில்களைத் தாண்டியும் குறிப்பிடத்தக்க சிறப்பு பெற்றன (எடுத்துக்காட்டு-திருமயிலாப்பூர், திருவான்மியூர்). ganeshbotம் பல தகவல்களை சேர்க்கக்கூடும். எனவே, பாடல் பெற்ற தலங்களான கோயில்களின் பெயர்களிலேயே கட்டுரைகளைத் தொடங்குவது ஊர்ப்பெயர்களின் கீழ் கட்டுரைகளைத் தொடங்குவதை விட பொருத்தமாகவும் துல்லியமாகவும் இருக்கும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை கோயில்களின் பெயருக்கு நகர்த்திவிட்டு தற்போது உள்ள கட்டுரைகளை அழிப்பதை குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்--ரவி 08:20, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி. பாடல் பெற்ற தலங்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நான் ஏற்கனவே கட்டுரைகளின் பெயர்களை மாற்றலாம் எனக் குறிப்பிடுள்ளேன். எனக்கு தமிழகக் கோயில்களின் பெயர்கள் தொடர்பில் போதிய விளக்கமில்லை. ஊர்ப் பெயர்கள், கோயில்களின் பெயர்கள் என்பவற்றில் எது ஊர்ப்பெயர் எது கோவிலின் பெயர் என்பதிலும் எவை தற்போதைய பெயர்கள், எவை பண்டைய பெயர்கள் என்பதிலும் எனக்கு குழப்பங்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 275 பாடல் பெற்ற தலங்கள் தொடர்பாகவும் குறுங்கட்டுரைகள் உருவாக்கவுள்ளேன். ஆதலால் சரியான பெயர் மாற்றங்களைச் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 10:34, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, எனக்கு இந்தத் துறையில் பரிச்சயம் இல்லை. எனினும், வேறு எவரும் பின்னர் உதவுவர் என எதிர்பார்க்கலாம். பண்டைக் காலத்தில் இத்தலங்கள் கோயிலாலே அறியப்பெற்றன. இக்கோயில்களைச் சுற்றி நகரங்களும் எழுந்தன. எனவே தலப் பெயரும் கோயில் பெயரும் ஒன்றாய் விளங்கின. நவீன காலத்துக்கு தலப் பெயரையும் கோயில் பெயரையும் ஒன்றாக்குவது பொருந்தாது. மயூரநாதன், kanags உதவக்கூடும்--ரவி 11:26, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

விக்கிமூலத்திற் பங்களிக்கவிருப்போர் கவனத்திற்கு[தொகு]

தலங்கள் மீது பாடல்கள் பாடப்பட்ட காலம் தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு ஊர்களுமே கோயில்களின் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோயில் தொடர்பாகவும் உருவாக்கப்பட்ட புனைவுகள் முதல் அவை மீது பாடப்பட்ட பாடல்கள் தமிழிசை வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுக்களாக இருப்பது வரை தமிழர் வரலாற்றில், பண்பாட்டில் அவற்றின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ், தமிழர் தொடர்பான பல்வேறு கோணங்களிலமையும் ஆய்வுகளுக்குப் போதிய உசாத்துணைகள் வினைத்திறனாக உருவாக்கப்பட வேண்டும். கோயில்களுக்கான தனித்தனிக் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றமையால் குறித்த கோயில்கள் மீது பாடப்பட்ட பாடல்களை விக்கிமூலத்தில் சேர்த்து அவற்றைத் தொடுக்க முடியும். நன்றி. கோபி 16:11, 9 பெப்ரவரி 2007 (UTC)


துணைப்பகுப்பு[தொகு]

இங்கு பாடல் பெற்ற தலங்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள் எனும் தலைப்பிலான துணைப்பகுப்பு அதிக பொருத்தமற்றதாக உள்ளது. நீக்கிவிடுவது பற்றிய உங்கள் கருத்து யாது?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:28, 11 மார்ச் 2011 (UTC)

உள்ளடக்க கட்டுரைகளில் சில மாற்றங்கள்[தொகு]

பாடல் பெற்ற தலங்கள் எனும் பகுப்பு மிகப்பொதுவானதாக உள்ளது. அதிலும் மயிலாப்பூர் போன்ற ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளமையால் குழப்பங்கள் நிலவுகின்றன. பல ஊர்களின் பெயரால் தொடங்கப்பெற்ற கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் கோவில்களைப் பற்றியதாக உள்ளன. சைவர்களுக்கு மயிலை என்றால் கபாலீஸ்வரர்தான் மறுப்பதற்கில்லை. ஆனால் ஊரின் பெயரில் தொடங்கப்பெற்ற கட்டுரைகளை இந்த பகுப்பிலிருந்து நீக்குவதுதான் முறையென படுகிறது.

சில ஊரின் பெயரால் தொடங்கப்பெற்ற கட்டுரைகளை இனங்கண்டு அவற்றினை தக்க கோவில்பெயருக்கு நகர்த்தவும், தேவாரம் பாடல் பெற்ற தலங்களை பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் என்ற பகுப்பில் இணைக்கலாம் என எண்ணுகிறேன். அப்பகுப்பினை இத்துடன் இணைத்துவிடலாம். அத்துடன் ஆழ்வார்களால் பாடல்பெற்றவை - 108 திவ்ய தேசங்கள் பகுப்பினையும் இத்துடன் இணைக்கலாம். விக்கியன்பர்கள் கருத்து தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:24, 8 சூன் 2013 (UTC) Y ஆயிற்று[பதிலளி]

இரு இடங்களில் ஒரே கோயில்[தொகு]

பாடல் பெற்ற தலங்கள் பகுப்பில் காணப்படுகின்ற 11 கோயில்களில் பின்னுள்ள ஒன்பது கோயில்கள் முன்னரே காணப்படுவனவாகும். அந்த ஒன்பது கோயில்களையும் தற்போது இணைக்க தனியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அக்னிபுரீஸ்வரர் கோவில் (திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்), அம்பாள் பிரம்மபுரிஸ்வரர் கோயில் (அம்பல் பிரமபுரீசுவரர் கோயில்), கங்கா ஜடதீஸ்வரர் கோயில் (கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்), சுவேத விநாயகா் காேயில் (திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்), செறுகுடி,சுக்ஸ்மாபுரீஸ்வரர் கோயில் (செருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில்), திரிபுராந்தக சுவாமி கோயில் (கூவம் திரிபுராந்தகர் கோயில்), நீனேரி நாதர் கோவில் (தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில்), பாடலீஸ்வரர் கோயில் (அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர் கோயில்), வில்வநாதீஷ்வரர் ஆலயம் (திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில்) ஆகியவை அந்த ஒன்பது கோயில்களாகும். அவ்வகையில் பாடல் பெற்ற தலங்கள் என்ற பகுப்பினையேகூட நீக்கிவிடுவது சிறந்தது. மீதமுள்ள காளீஸ்வரர் காளையார்கோயில் மற்றும் திருவாதவூர் திருமறைநாதர் கோயில் ஆகியவை பாடல் பெற்றதா என்பதை உறுதி செய்தபின் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:33, 11 சனவரி 2019 (UTC)

மேற்கண்ட ஒன்பது கோயில்களைப் போலவே காளீஸ்வரர் காளையார்கோயில் (காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்) அமைந்துள்ளது. அதனையும் இணைக்க தனியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:48, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் என்ற பகுப்பில் உள்ள 14கோயில்களில் திருவாதவூர் திருமறைநாதர் கோயில் காணப்படவில்லை. ஆதலால் பாடல் பெற்ற தலங்கள் என்ற பகுப்பிலிருந்து திருவாதவூர் திருமறைநாதர் கோயில் என்ற கோயில் நீக்கப்படுகிறது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:56, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]