பகுப்பு பேச்சு:அசீன்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூர்த்தி, Azene, Acene இரண்டும் வெவ்வேறானவை. தமிழில் இவற்றை முறையே அசீன், அசென் என எழுதலாமா? இந்தப் பகுப்பிலுள்ள கட்டுரைகளில் ஒன்று Azene இற்கானவை. @செல்வா: பகுப்பு:ஆந்த்ரசீன்கள் என்ற பகுப்பின் பெயரும் மாற்றப்பட வேண்டும். ஒரே சீராக இருக்க வேண்டும் என்றால் ஆந்திரசென்கள் எனலாமா?--Kanags \உரையாடுக 09:39, 14 சூலை 2016 (UTC)[பதிலளி]

Kanags சார், Acene, Anthracene ஆகியனவற்றை அசீன்,ஆந்த்ரசீன் என்றே எழுதி Azene,Azane இவற்றை மட்டும் அசென், அசேன் என்று எழுதுவது கூட சரியாக இருக்குமென நினைக்கிறேன். தங்கள் கருத்து என்ன?--கி.மூர்த்தி (பேச்சு) 13:41, 14 சூலை 2016 (UTC)[பதிலளி]
acene என்பது பென்சீன் வளையத் தொடரடுக்கு. ஆகவே நாம் பல்லசீன் அல்லது பாலியசீன் எனலாம். (விளக்கம்:"The acenes or polyacenes are a class of organic compounds and polycyclic aromatic hydrocarbons made up of linearly fused benzene rings".) azene என்பதை nitrene என்றும் அழைப்பார்கள் (பார்க்க: https://en.wiktionary.org/wiki/nitrene ). எனவே நைத்திரீன், நைட்டிரீன், நைற்றீன் என்பதில் ஒன்றையும் ஆளலாம். azane என்பதை அசேன் என்றே அழைக்கலாம்.இவை ஒற்றைப்பிணைப்புகள் கொண்ட நைதரசன் ஐந்தரசன் அணுக்கள் கொண்டவை. அசீன், அசியீன், அசேன், அசெயீன், அசென் எனப்பலவிதமாக ஒலிப்புகள் கொண்டு மரபாக இன்னதற்கு இதுதான் என நாம் வழங்கலாம். மேலே சொன்னவாறு பல்லசீன் அல்லது பாலியசீன் வேண்டாமெனில் அசீன் என்பதை acene என்பதற்கும், azene என்பதை அசென் அல்லது அசெயீன் என்றும், azane என்பதைக் குழப்பமேதுமில்லாமல் அசேன் என்றும் வழங்கலாம்.--செல்வா (பேச்சு) 14:32, 14 சூலை 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:அசீன்கள்&oldid=2089011" இலிருந்து மீள்விக்கப்பட்டது