நோஸ்ராடாமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்கேல் டி நோஸ்திரதாம்
Michel de Nostredame
Nostradamus by Cesar.jpg
பிறப்பு14 திசம்பர் / 21 திசம்பர் 1503 (யூலியின் நாள்காட்டி)
செயின்ட்-ரேமி, பிரான்சு
இறப்பு2 சூலை 1566(1566-07-02) (அகவை 62)
சாலோன் மாகாணம், பிரான்சு
பணிமருத்துவர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சோதிடர்
அறியப்படுவதுகொள்ளை நோய்க்கு சிகிச்சை
சமயம்கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்

மைக்கேல் டி நோஸ்திரதாம் (Michel de Nostredame), சுருக்கமாக நோஸ்திரதாமுஸ் (திசம்பர் 14, 1503 - சூலை 2, 1566), உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார்.

நோஸ்ராடாமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார். இருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும் கூறுகின்றனர்.

நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். கத்தோலிக்கத் திருச்சபையின் பார்வையில் இவரின் ஆரூடங்கள் சாத்தானின் எச்சரிக்கைகளாகப் பட்டன. எனவே, நோஸ்ராடாமஸ் மீது திருச்சபையால் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரச்சனைகளால் நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களைக் குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

சிறு வயது வாழ்க்கை[தொகு]

நோஸ்ராடாமஸ் பிரான்ஸ்வடக்கில்செயின்ட்-ரெமி-டி-பகுதியில் டிசம்பர் 14 1503,அன்று பிறந்தார் என்பதும் அவர் வாழ்ந்த பிரதேசப் பகுதி இன்றளவும் காணப்படுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது,யூத வம்சாவளியினர்களான ரெய்னியெர் டி செயிண்ட் ரெமி மற்றும் நொடாரி ஜௌமெ டி நோஸ்ரடேம் ஆகியோரின் எட்டுப்பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார் நோஸ்ராடாமஸ். ஜௌமேயின் தந்தையான கசோனெட் 1455 ஆம் ஆண்டின் காலப் பகுதியில் தன்னை ஒரு கத்தோலிக்க மதத்தவராகத் தம்மை மாற்றிக்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோஸ்ராடாமஸ்&oldid=3219156" இருந்து மீள்விக்கப்பட்டது