நோவசிபீர்சுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோவசிபீர்சுக்
Novosibirsk
Новосибирск
NSK Montage 2017.png
வலச்சுற்றாக: அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தேவாலயம், தி சர்கசு, வணிக இல்லம், சிறுவர்களுக்கானத் தொடருந்து, நோவசிபீர்சுக் தொடருந்து நிலையம், ஓப்பரா மற்றும் பாலே அரங்கம்
Novosibirsk is located in உருசியா
Novosibirsk
Novosibirsk
இரசியாவில் நோவசிபீர்சுக் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 55°3′0″N 82°57′0″E / 55.05000°N 82.95000°E / 55.05000; 82.95000ஆள்கூறுகள்: 55°3′0″N 82°57′0″E / 55.05000°N 82.95000°E / 55.05000; 82.95000
Coat of Arms of Novosibirsk.svg
மேலங்கிச் சின்னம்
Flag of Novosibirsk.svg
நோவசிபீர்ஸ்க் கொடி
தேசியப்பாடல்இல்லை[1]
நகரம் நாள்சூன் மாதக் கடைசி ஞாயிறு[2]
நிருவாக அமைப்பு (2014)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு நோவசிபீர்சுக் மாகாணம்[3]
மாநகரத் தரம் (as of அக்டோபர் 2014)
Urban okrugNovosibirsk Urban Okrug[4]
Head (Mayor)[5]Anatoly Lokot[6]
பிரதிநிதித்துவ அமைப்புCouncil of Deputies[5]
Statistics
பரப்பளவு502.7 ச.கி.மீ (194.1 ச.மை)[7]
Population (January 2015)15,67,087 inhabitants[8]
Founded1893[9]
Previous namesNovonikolayevsk (until பெப்ரவரி 12, 1926)[10]
Postal code(s)630000, 630001, 630003–630005, 630007–630011, 630015, 630017, 630019, 630020, 630022, 630024, 630025, 630027–630030, 630032–630037, 630039–630041, 630045–630049, 630051, 630052, 630054–630061, 630063, 630064, 630066, 630068, 630071, 630073, 630075, 630077–630080, 630082–630084, 630087–630092, 630095–630100, 630102, 630105–630112, 630114, 630116, 630117, 630119–630121, 630123, 630124, 630126, 630128, 630129, 630132, 630133, 630136, 630200, 630201, 630700, 630880, 630885, 630890, 630899–630901, 630910, 630920–630926, 630970–630978, 630980–630983, 630985, 630988, 630989, 630991–630993, 901026, 901036, 901073, 901076, 901078, 901095, 901243, 901245, 901246, 991214[மேற்கோள் தேவை]
Dialing code(s)+7 383[11]
Official websitehttp://www.novo-sibirsk.ru

நோவசிபீர்ஸ்க் (Novosibirsk உருசியம்: Новосиби́рск, பஒஅ[nəvəsʲɪˈbʲirsk]) உருசியாவில் மிகுந்த மக்கள்தொகை உடைய நகரங்களில் மூன்றாவது ஆகும்; மாஸ்கோவும் சென். பீட்டர்ஸ்பேர்க்கும் முந்தியவையாம். ஆசிய உருசியாவில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது. 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை1,473,754.[12] தவிரவும் இந்நகரம் நோவசிபீர்சுக் மாகாணம் மற்றும் சைபீரிய கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைநகராக விளங்குகின்றது.

நோவசிபீர்சுக் நகரம் சைபீரியாவின் தென்மேற்குப் பகுதியில் ஓபு ஆற்றுப் பள்ளத்தாக்கை அடுத்து ஓபு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நோவசிபீர்சுக் புனல்மின் நிலையத்திற்காக அணை கட்டப்பட்டு நகரத்தின் அருகே பெரும் நீர்த்தேக்கமாக உள்ளது.[13] இந்த நகரம் பத்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பரப்பளவு 502.1 சதுர கிமீ (193.9 ச மை)[7] மாஸ்கோவிலிருந்து கிழக்கில் 2,800 கி.மீ (1,700 மை) தொலைவிலும் எக்கத்தரீன்பூர்க்கிலிருந்து கிழக்கே 1,400 கிமீ (870 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.

நோவசிபீர்சுக் என்ற பெயரை புதிய சைபீரியா என மொழியாக்கம் செய்யலாம். 1893 முதல் 1925 வரை இந்த நகரம் நோவோனிகோலயெவ்ஸ்க் என அழைக்கப்பட்டது.

இந்த நகரின் தெற்கே உள்ள உகோக் சமவெளி யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமான ஆல்டாய் தங்க மலைகளின் அங்கமாகும்.[14] இங்குள்ள வானிலை ஐரோப்பிய பெருநில வானிலையாகும். மிகவும் கடுமையான குளிரும் பனிப்பொழிவுமான குளிர்காலமும் வெப்பமான உலர் வேனிற்காலமும் கொண்டது. வேனிற்கால வெப்பநிலை 20 முதல் 25 °C (75 °F) வரையும் குளிர்கால வெப்பநிலை -18 முதல் -20 °C (0 °F) வரையும் நிலவுகிறது; குளிர்காலத்தில் வெப்பநிலை -40 °C (-40 °F) வரையும் வேனிற்காலத்தில் வெப்பநிலை 35-40 °C (100 °F) வரையும் செல்லலாம். மீயுயர் வெப்பநிலைக்கும் மீகுறை வெப்பநிலைக்கும் இடையேயான வேறுபாடு 88 °C (158 °F). பெரும்பாலும் சூரிய ஒளி காணப்படுகின்றது; சராசரியாக ஆண்டுக்கு 2880 மணிகள் சூரிய ஒளி கிடைக்கின்றது.

இயந்திரங்கள் தயாரிப்பு, உலோகவியல் ஆகியவை முதன்மை தொழில்களாக உள்ளன. நோவசிபீர்சுக் மாநிலப் பல்கலைக்கழகம் இங்குள்ளது. மற்றும் பல கல்வி நிறுவனங்களும் அறிவியல் ஆய்வகங்களும் அமைந்துள்ளன. நோவசிபீர்சுக்கின் ஓபரா, பாலே புகழ்பெற்றது; பல குழுக்களும் அரங்கங்களும் இங்குள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. Article 5 of the Charter of Novosibirsk lists a flag and a coat of arms but not an anthem among the symbols of the city.
 2. Charter of Novosibirsk, Article 1
 3. Charter of Novosibirsk Oblast, Article 5
 4. Law On the Status and the Borders of the Municipal Formations of Novosibirsk Oblast
 5. 5.0 5.1 Charter of Novosibirsk, Article 27
 6. Official website of Novosibirsk. Anatoly Yevgenyevich Lokot, Mayor of Novosibirsk (உருசிய மொழியில்)
 7. 7.0 7.1 Official website of Novosibirsk. General Information பரணிடப்பட்டது அக்டோபர் 22, 2015 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
 8. Novosibirsk Oblast Territorial Branch of the Federal State Statistics Service. Численность населения по муниципальным районам и городским округам Новосибирской области на 1 января 2015 года и в среднем за 2014 год பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
 9. Official website of Novosibirsk. History பரணிடப்பட்டது ஆகத்து 19, 2009 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
 10. Charter of Novosibirsk, Article 1.1
 11. https://www.timeanddate.com/worldclock/dialingcodes.html?p1=102&p2=375&number=
 12. Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (Russian). Federal State Statistics Service.CS1 maint: Unrecognized language (link)
 13. Новосибирская ГЭС. Вокруг здания ГЭС, водосливная плотина :: Gelio | Слава Степанов பரணிடப்பட்டது ஆகத்து 8, 2013 at the வந்தவழி இயந்திரம். Gelio.newsib.ru. Retrieved on 2013-08-16.
 14. "Altai: Saving the Pearl of Siberia". 2007-03-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவசிபீர்சுக்&oldid=3561324" இருந்து மீள்விக்கப்பட்டது