நொபொரு காராசிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:30, 7 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு மாற்றம் using AWB)
நொபொரு காராசிமா
Noboru Karashima
பிறப்பு(1933-04-24)ஏப்ரல் 24, 1933
சப்பான்
இறப்புநவம்பர் 26, 2015(2015-11-26) (அகவை 82)
பணிபேராசிரியர், எழுத்தாளர், வரலாற்றாளர்
விருதுகள்ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு
பத்மசிறீ

நொபொரு காரசிமா (Noboru Karashima, 辛島昇, 24 ஏப்ரல் 1933 - 26 நவம்பர் 2015)[1][2] சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார்.[3][4]

நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார்.[4] 2013ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5][6]

மறைவு

உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றிய நொபுரு கரஷிமா தனது 82-ஆவது வயதில் ஜப்பானில், 26 நவம்பர் 2015 அன்று (வியாழக்கிழமை) மறைந்தார்[7]

எழுதிய நூல்கள்

  • Ancient Medieval South Indian Society in Transition (Oxford Collected Essays)-2010
  • A Concise History of South India: Issues and Interpretations (2014)
  • A Concordance of Nayakas: The Vijayanagar Inscriptions in South India (2002)
  • Towards a New Formation: South Indian Society under Vijayanagar Rule (1993)

மேற்கோள்கள்

  1. "Tamil scholar who inspired a generation". தி இந்து. 27 November 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  2. "ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார்". பிபிசி தமிழ். 26 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2015.
  3. http://articles.timesofindia.indiatimes.com/2009-09-25/india/28105633_1_tamil-research-aiadmk-chief-jayalalithaa-locus-standi
  4. 4.0 4.1 http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
  5. "List of Padma Awardees" (PDF) (pdf). Ministry of Home Affairs, India.
  6. ஜப்பானிய தமிழறிஞருக்கு "பத்மஸ்ரீ' விருது, தினமணி, 29 மே 2013
  7. ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொபொரு_காராசிமா&oldid=2085762" இலிருந்து மீள்விக்கப்பட்டது