ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டு பரிசு
Fukuoka Asian Culture Prize
விருதுக்கான
காரணம்
ஆசியப் பண்பாடுகளின் தனியான மற்றும் பல்வேறு தன்மைகளையும் பேணுவதற்கு ஆற்றிய பணிகளுக்காக
வழங்கியவர் ஃபுக்குவோக்கா நகரம்
யோக்கடோப்பிய அமைப்பு
நாடு  சப்பான்
முதலாவது விருது 1990
அதிகாரபூர்வ தளம்

ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசுகள் (Fukuoka Asian Culture Prizes) ஆசியப் பண்பாடுகளின் தனியான மற்றும் பல்வேறு தன்மைகளையும் பேணுவதற்கு ஆற்றிய பணிகளுக்காக உலகளாவிய ரீதியில் தனிநபருக்கோ அல்லது ஓர் அமைப்பிற்கோ வழங்கப்படும் பணப்பரிசாகும். இப்பரிசை ஜப்பானின் ஃபுக்குவோக்கா நகரமும், யோக்கடோப்பீயா நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. இப்பரிசுத் திட்டத்தில் பெரும் பரிசு (the Grand Prize), கல்விப் பரிசு (the Academic Prize), கலை மற்றும் பண்பாட்டுக்கான பரிசு (Arts and Culture Prize) ஆகிய மூன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் 3 மில்லியன் யென் பணப்பரிசு வழங்கப்படுகிறது.

கிழக்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்காசியா (பாகிஸ்தானுக்குக் கிழக்கேயுள்ள நாடுகள்) ஆகிய பகுதிகளில் இருந்து விருதாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

பரிசு பெற்ற சிலர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]