நைத்திரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைத்திரைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
நைத்திரைடு
பண்புகள்
N3−
வாய்ப்பாட்டு எடை 14.01 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வேதியியலில்நைத்திரைடு (Nitride) அயன் என்பது N3- என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய ஓர் எதிரயன் ஆகும்.[1] இதில் நைதரசன் அணுவின் ஒட்சியேற்ற எண் -III ஆகும்.[2]

நைத்திரைடு அயனைக் நீர்க்கரைசல் நிலையில் பெற முடிவதில்லை. இது மூல வலிமை மிகவும் கூடிய அயனாதலால், நீரிலிருந்து H+ அயனைப் பெற்று, நேர்மின்னியேற்றம் அடைந்து விடும்.[1]

எடுத்துக்காட்டுகள்[தொகு]

எசு-தொகுப்புத் தனிமங்களின் நைத்திரைடுகள்[தொகு]

கார மாழைகளின் நைத்திரைடுகளுள் இலித்தியம் நைத்திரைட்டை (Li3N) மட்டுமே இலித்தியத்தை நைதரசன் வளிமத்தில் எரிப்பதன் மூலம் பெறமுடியும்.[3] ஏனைய கார மாழைகளை இவ்வாறு எரித்து, அவற்றின் நைத்திரைடுகளைப் பெறமுடியாது.[4] ஆயினும், சோடியம் நைத்திரைடு, பொற்றாசியம் நைத்திரைடு ஆகியவற்றை ஆய்வுக்கூடத்தில் ஆக்கமுடியும்.[5][6] காரமண் மாழைகள் அனைத்தும் நைதரசன் வளிமத்தில் எரிக்கும்போது, அவற்றின் நைத்திரைடுகளைத் தரக்கூடியவை.[4] காரமண் மாழைகளின் நைத்திரைடுகள் M3N2 என்ற பொதுவடிவில் அமைந்திருக்கும்.[7]

பீ-தொகுப்புத் தனிமங்களின் நைத்திரைடுகள்[தொகு]

போரன் நைத்திரைடு வேறுபட்ட பல வடிவங்களில் காணப்படுகின்றது.[8] சிலிக்கன், பொசுபரசு ஆகிய தனிமங்களின் நைத்திரைடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.[9] அலுமினியம், காலியம், இந்தியம் ஆகிய மூலகங்களின் நைத்திரைடுகள் வைரம் போன்ற கட்டமைப்பை உடையவை.

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Steven S. Zumdahl. "Nitride". Encyclopædia Britannica. http://global.britannica.com/science/nitride. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Michael Clugston & Rosalind Flemming (2000). Advanced Chemistry. OUP Oxford. பக். 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199146338. 
  3. Gregory, Duncan H (2001). "Nitride chemistry of the s-block elements". Coordination Chemistry Reviews 215: 301-345. doi:10.1016/S0010-8545(01)00320-4. https://archive.org/details/sim_coordination-chemistry-reviews_2001-05_215/page/301. 
  4. 4.0 4.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 66. 
  5. Richard Dronskowski (2008). Computational Chemistry of Solid State Materials: A Guide for Materials Scientists, Chemists, Physicists and others. John Wiley & Sons. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783527612291. 
  6. Steven Zumdahl (2003). Introductory Chemistry: A Foundation. Cengage Learning. பக். 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780618304998. 
  7. "Element of Group IIA (2) [Alkaline Earth Elements]". Competition Science Vision 5 (55): 889. செப்டம்பர் 2002. 
  8. Brian Clegg (17 திசம்பர் 2013). "Boron nitride". Chemistry World. http://www.rsc.org/chemistryworld/2013/12/boron-nitride-podcast. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015. 
  9. Wolfgang Schnick, Jan Lucke & Frank Krumeich (1996). "Phosphorus Nitride P3N5: Synthesis, Spectroscopic, and Electron Microscopic Investigations". Chem. Mater. 8 (1): 281-286. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைத்திரைடு&oldid=3577675" இருந்து மீள்விக்கப்பட்டது