நைக்டிபட்ராச்சசு பெடோமி
நைக்டிபாட்ராச்சசு பெடோமி | |
---|---|
முதுகுப்புற தோற்றம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றவை
|
குடும்பம்: | நைக்டிபேட்ராச்சிடே
|
பேரினம்: | |
இனம்: | நை. பெடோமி
|
இருசொற் பெயரீடு | |
நைக்டிபேட்ராச்சசு பெடோமி பெளளங்கர், 1882 | |
வேறு பெயர்கள் | |
நானோபேட்ராச்சசு பெடோமி பெளளங்கர், 1882 |
நைக்டிபட்ராச்சசு பெடோமி (Nyctibatrachus beddomii) என்ற தவளை சிற்றினத்தின் பொதுவான பெயர்கள் பெடோமின் இரவு தவளை, குள்ள சுருங்கிய தோல் தவளை, பெடோமின் குள்ள சுருங்கிய தோல் தவளை, மற்றும் திருநெல்வேலி மலைத் தவளை) என்பதாகும் இது நைக்டிபாட்ராச்சிடே குடும்பத்தில் உள்ள வகை தவளை இனமாகும்.[2] பெடோமி என்ற பெயரானது கர்னல் ரிச்சர்ட் ஹென்றி பெடோம் (1830-1911), ஐக்கிய இராச்சிய இயற்கை ஆர்வலர் மற்றும் இராணுவ அதிகாரி நினைவாக இடப்பட்டது.
அளவு
[தொகு]முதிர்வடைந்த தவளையின் உடல் நீளம் சுமார் 13 முதல் 18 மிமீ வரை நீளமுடையதாக இருக்கலாம்.
புவியியல் வரம்பு
[தொகு]இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தெற்குப் பகுதியில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[2]
வாழ்விடம்
[தொகு]நைக்டிபட்ராச்சசு பெடோமி என்பது இலைக் குப்பை, பாறை இடுக்கு மற்றும் மரக்கட்டைகளின் கீழ் வாழும் பகுதி நில வாழ் தவளைகளாகும். இவை பசுமையான, பகுதி பசுமையான ஈரமான மற்றும் இலையுதிர் காடுகளில் வாழ்கின்றன. சிறிய அளவிலான இத்தவளை பொதுவாக சதுப்பு நிலப்பகுதிகளிலும், வனத்திலுள்ள ஓடைகளில் ஆழமற்ற நீரில் மூழ்கிய பகுதிகளிலும் காணப்படுகிறது. இதனுடைய ஒலியானது ஓசை குறைந்த 'டிங்க்-டிங்க்' எனப் பல முறை மீண்டும் மீண்டும் ஒலிக்கும் வகையில் உள்ளது.[சான்று தேவை]
காப்பு நிலை
[தொகு]விவசாயத்திற்காக காடளிப்பு, மரங்களை அகற்றுதல் ஆகியவற்றால் ஏற்படும் வாழ்விட இழப்பு காரணமாக இது அச்சுறுத்தப்படுகிறது. இது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biju, S.D.; Dutta, S.; Ravichandran, M.S.; Inger, R. (2004). "Nyctibatrachus beddomii". IUCN Red List of Threatened Species 2004: e.T58396A11767424. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58396A11767424.en. https://www.iucnredlist.org/species/58396/11767424.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2013). "Nyctibatrachus beddomii (Boulenger, 1882)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 3 December 2013.