நைக்டிபாட்ராச்சசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைக்டிபாட்ராச்சசு
Nyctibatrachus
Nyctibatrachus spp.jpg
அடையாளங்காணப்படாத நைக்டிபாட்ராச்சசு பானாசாத் காட்டுயிரி காப்பகம், மகராட்டிரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றவை
குடும்பம்: நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்: நைக்டிபேட்ராச்சசு
சிற்றினம்

பார்க்கவும் உரை

நைக்டிபாட்ராச்சசு (Nyctibatrachus) என்பது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தவளைகளின் ஒரு பேரினமாகும். இத்தவளைகளின் பொதுவான பெயர் இரவுத் தவளைகள்.[1][2] இவற்றின் விலங்கியல் பெயர் இத்தவளைகளின் பழக்கவழக்கங்களையும் இத்தவளைகளின் இருண்ட நிறத்தையும் குறிக்கும் வகையில் "இரவுத் தவளை" என்றும் பொருள்படும். நைக்டிபாட்ராச்சினே ஒற்றைத் துணைக்குடும்பத்தின் வாழும் உயிரிகள் இவையேயாகும்.[3]

விளக்கம்[தொகு]

நைக்டிபட்ராச்சசு பேரினத்தின் கீழ் வரும் சிற்றினங்களின் வலிமையான உடலிக் கொண்டுள்ளன. மூக்கின் நுனியிலிருந்து குதம் வரை உடல் நீளமானது 13 மிமீ முதல் (13 மி.மீ. நைக்டிபட்ராச்சசு ரோபின்மோரே[4]) 84 மிமீ நீளமுடையது (நைக்டிபட்ராச்சசு கர்னாடகாகென்சிசு). இவை மறைக்கப்பட்ட செவிப்பறையினையும், நீளமான தோல் மடிப்புகளுடன் கூடிய முதுகுபுற தடிப்பும், தொடை சுரப்பிகள் மற்றும் விரிவாக்கப்பட்ட விரல் மற்றும் கால்விரல்கள் தட்டுகள் கொண்டுள்ளன. இவை மலைப்பாங்கான பசுமையான காடுகளில் உள்ள நீரோடைகளுக்கு அருகில் வாழ்கின்றன.[5] இவை இரவாடுதல் வகையின.[6] நைக்டிபட்ராச்சசு குமாயுனி தவிர ஏனைய இனங்களில் ஆண் பெண் தவளைத் தழுவி இனப்பெருக்கம் கொள்கின்றன. நை. குமாயுனி இடும் முட்டைகள் மீது ஆண் தவளைகள் தனது இனசெல்களை இட நகர்ந்து செல்லும்.[5]

இனங்கள்[தொகு]

நைக்டிபாட்ராச்சசு பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1]

நைக்டிபாட்ராச்சசு அகாந்தோடெர்மிசு பிஜீ மற்றும் பலர், 2011[6] - சுழல் இரவு தவளை

நைக்டிபட்ராச்சசு அலிசியா இங்கர், ஷாஃபர், கோஷி மற்றும் பாக்டே, 1984

நைக்டிபாட்ராச்சசு ஆனமலையென்சிசு (மையர்சு, 1942)

நைக்டிபட்ராச்சசு அதிரப்பள்ளியென்சிசு கார்க், 2017[4]

நைக்டிபட்ராச்சசு பெடோமி (பவுலெஞ்சர், 1882)

நைக்டிபட்ராச்சசு டேனியலி பிஜு மற்றும் பலர், 2011[6]

நைக்டிபட்ராச்சசு தத்தாத்ரேயன்சிசு தினேஷ், ராதாகிருஷ்ணன், மற்றும் பட்டா, 2008

நைக்டிபட்ராச்சசு டெக்கனென்சிசு துபோயிசு, 1984

நைக்டிபட்ராச்சசு தேவேனி பிஜு மற்றும் பலர்., 2011[6]

நைக்டிபட்ராச்சசு காவி பிஜு மற்றும் பலர், 2011[6]

நைக்டிபாட்ராச்சஸ் கிராண்டிசு பிஜு மற்றும் பலர், 2011[6]

நைக்டிபட்ராச்சசு ஹுமாயுனி பதுரி மற்றும் கிருபாலனி, 1955 - பாம்பே இரவு தவளை

நைக்டிபட்ராச்சசு இந்திரானேலி பிஜூ மற்றும் பலர், 2011[6]

நைக்டிபட்ராச்சசு ஜாக் பிஜு மற்றும் பலர்., 2011 -[6] ஜாக் இரவு தவளை

நைக்டிபட்ராச்சசு கர்நாடகென்சிசு தினேஷ், ராதாகிருஷ்ணன், மஞ்சுநாத ரெட்டி, மற்றும் குருராஜா 2007[7]

நைக்டிபட்ராச்சசு கெம்போலியென்சிசு (ராவ், 1937)

நைக்டிபட்ராச்சசு கும்பரா குருராஜா, தினேஷ், பிரிதி, மற்றும் ரவிகாந்த், 2014

நைக்டிபாட்ராச்சசு மேஜர் பவுலெங்கர், 1882 - மலபார் இரவு தவளை

நைக்டிபட்ராச்சசு மணலாரி கார்க், 2017[4]

நைக்டிபட்ராச்சசு மெவாசிங்கி கிருதா, தஹானுகர், மற்றும் மோலூர், 2017

நைக்டிபட்ராச்சசு மினிமசு பிஜு, வான் போக்ஸ்லேர், கிரி, ரோலண்ட்ஸ், நாகராஜு, மற்றும் போசுயிட், 2007

நைக்டிபட்ராச்சசு மைனர் இங்கர், ஷாஃபர், கோஷி மற்றும் பாக்டே, 1984

நைக்டிபட்ராச்சசு பெரியார் பிஜு மற்றும் பலர்., 2011[6]

நைக்டிபட்ராச்சசு பெட்ரீயசு தாஸ் மற்றும் குண்டே, 2005

நைக்டிபட்ராச்சசு பிள்ளை பிஜு மற்றும் பலர், 2011[6]

நைக்டிபட்ராச்சசு பூச்சா பிஜு மற்றும் பலர், 2011[6]

நைக்டிபட்ராச்சசு புலிவிஜயானி கார்க், 2017

நைக்டிபட்ராச்சசு ராட்க்ளிஃபி கார்க், 2017

நைக்டிபட்ராச்சசு ராபின்மூரி கார்க், 2017

நைக்டிபட்ராச்சசு சபரிமலை கார்க், 2017

நைக்டிபட்ராச்சசு சான்டிபலஸ்ட்ரிசு ராவ், 1920

நைக்டிபட்ராச்சசு சீரடி பிஜு மற்றும் பலர், 2011[6]

நைக்டிபட்ராச்சசு சில்வாடிகசு ராவ், 1937 - காடு இரவு தவளை

நைக்டிபட்ராச்சசு வசந்தி ரவிச்சந்திரன், 1997

நைக்டிபட்ராச்சசு விரிஜெயுனி பிஜூ மற்றும் பலர், 2011[6] -வியுபி இரவு தவளை

நைக்டிபட்ராச்சசு வெபில்லா கார்க், 2017

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Frost, Darrel R. (2015). "Nyctibatrachus Boulenger, 1882". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. 7 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Nyctibatrachidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2014. 29 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Blommers-Schlösser, Rose M. A. (1993-07-01). "Systematic relationships of the Mantellinae Laurent 1946 (Anura Ranoidea)". Ethology Ecology & Evolution 5 (2): 199–218. doi:10.1080/08927014.1993.9523105. பன்னாட்டுத் தர தொடர் எண்:0394-9370. 
  4. 4.0 4.1 4.2 Garg, Sonali; Suyesh, Robin; Sukesan, Sandeep; Biju, SD (21 February 2017). "Seven new species of Night Frogs (Anura, Nyctibatrachidae) from the Western Ghats Biodiversity Hotspot of India, with remarkably high diversity of diminutive forms" (in en). PeerJ 5: e3007. doi:10.7717/peerj.3007. பன்னாட்டுத் தர தொடர் எண்:2167-8359. பப்மெட்:28243532. 
  5. 5.0 5.1 Vitt, Laurie J.; Caldwell, Janalee P. (2014). Herpetology: An Introductory Biology of Amphibians and Reptiles (4th ). Academic Press. பக். 509–510. 
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 Biju, S.D., Van Bocxlaer, I., Mahony, S., Dinesh, K.P., Radhakrishnan, C., Zachariah, A., Giri, V., and Bossuyt, F. (2011). "A taxonomic review of the Night Frog genus Nyctibatrachus Boulenger, 1882 in the Western Ghats, India (Anura: Nyctibatrachidae) with description of twelve new species". Zootaxa 3029: 1–96. doi:10.11646/zootaxa.3029.1.1. http://www.mapress.com/zootaxa/2011/f/z03029p096f.pdf. 
  7. Dinesh, K.P., C. Radhakrishnan, A.H. Manjunatha Reddy and K.V. Gururaja (2007). "Nyctibatrachus karnatakaensis nom. nov., a replacement name for the Giant Wrinkled Frog from the Western Ghats". Current Science 93 (2): 246–250. http://www.ias.ac.in/currsci/jul252007/246.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைக்டிபாட்ராச்சசு&oldid=3137019" இருந்து மீள்விக்கப்பட்டது