நேர்திசை
Jump to navigation
Jump to search
நேர்த்திசைகள் (cardinal directions) மொத்தம் நான்கு, அவை வடக்கு, கிழக்கு, தெற்கு, மற்றும் மேற்கு. இதில் ஒரு திசை அடுத்துள்ள திசைக்கு செங்கோணத்தில் அமைந்து இருக்கும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று வைத்துக்கொள்ளும்பொழுது, அதன் வலது செங்கோணத்தில் இருப்பது தெற்கு மற்றும் இடது செங்கோணத்தில் இருப்பது வடக்கு.
இந்த நேர்த்திசைகளுக்கு இடையில் அமைத்த திசைகள் இடைப்பட்ட திசைகளாகும். இத்திசையும் வடகிழக்கு, தென்கிழக்கு , வடமேற்கு , தென்மேற்கு என்று நான்கு வகைப்படும்.அதாவது இரண்டு திசைகளுக்கு நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை இடைப்பட்ட திசை என்பர்.