நேரு கச்சுடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேரு உடை, 1990கள்.

நேரு கச்சுடை (Nehru jacket) என்பது 1947 முதல் 1964 வரை இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த ஜவகர்லால் நேரு அணிந்திருந்த இந்திய ஆக்கான் அல்லது செர்வானியின் முன் மாதிரியான மாண்டரின் கழுத்துப்பட்டை கொண்ட ஆண்களும் பெண்களும் அணியும் இடுப்பு வரை நீளமான மேலாடை ஆகும்.

வரலாறு[தொகு]

ஜவகர்லால் நேரு ஒரு அச்கான் அல்லது செர்வானியில், நேரு கச்சுடைக்கு மாதிரியாக செயல்பட்ட ஆடை.

நேரு கச்சுடை என்பது ஜோத்புரியின் மாறுபாடு ஆகும். இங்கு பெரும்பாலும் காதி (கையால் நெய்த துணி) ஆகும். ஜோத்புரியே அங்கர்காவிலிருந்து உருவானது. ஜவகர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் பிரபலமடைந்த இந்த தனித்துவமான பந்த்கலாக்கள் காதியால் செய்யப்பட்டவை. இவை இன்றுவரை பிரபலமாக உள்ளன.[1]

நடை[தொகு]

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் (இடது) நேரு கச்சுடையினை அணிந்துள்ளார். பிரேசில் குடியரசுத் தலைவர் தில்மா ரூசெப்பை சீனாவின் சான்யா, ஏப்ரல் 2011-ல் சந்தித்ப்போது

இந்த உடை அணிந்தவரின் முழங்கால்களுக்குக் கீழே எங்காவது விழும் அச்கான் போலல்லாமல், நேரு கச்சுடை குறுகியது. ஜவகர்லால் நேரு, குறிப்பாக, இந்த வகையான நேரு கச்சுடையினை அணிந்ததில்லை.[a][2]

பிரபலம்[தொகு]

1960களின் மத்தியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த கச்சுடை நேரு கச்சுடையாக விற்பனை செய்யத் தொடங்கியது. 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் இது பிரபலமாக இருந்தது. அபிலாசையுள்ள வர்க்கத்தின் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வு, வாழ்க்கை முறையின் குறைவியம் கொள்கையாளர்கள் மற்றும் குறிப்பாக, சாமி டேவிசு இளையோர்[3] மற்றும் பீட்டில்ஸ் ஆகியோரால் இது பிரபலமடைந்தது.[4][5] அறிவியல் புனைகதை டாக்டர் ஹூவில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் துரோகி டைம் லார்டின் ரோஜர் டெல்கடோவின் பதிப்பிலும் சிலர் இதனை அணிந்திருந்தனர்.

நேரு உடையை அடிக்கடி அணியும் அரசியல்வாதிகளில் சார்லஸ் பரோன், மகாதீர் பின் முகமது ஆகியோர் அடங்குவர்.[6][7]

2012-ல், நேரு கச்சுடை டைம் இதழில் ஜாரெட் டி. மில்லரால் அரசியல் வாதிகள் அணியும் சிறந்த 10 உடைகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது.[8]

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Nehru Jacket, which we know today had undergone alterations from its basic Achkin or Sherwani model over the years even during the lifetime of Nehru. The main difference between the popular Nehru Jacket and the original Achkan is the length. Achkans go below the knees whereas Nehru Jacket hardly reaches hips. It was only after 1940s the term 'Nehru Jacket' was started using widely. Till then it was known as 'band gale Ica coat', which means 'closed neck coat.' The strangest part of the story is that Nehru had never worn the popular, modified ones named after him, but always preferred the traditional models more akin to Ackhan or Sherwani."[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nehru Jacket or Modi Vest: Which One Are You Wearing Today? | Outlook India Magazine". 4 February 2022.
  2. 2.0 2.1 Aramam, Ajmal (16 January 2016). "Nehru's style statement: Achkan the knee-length coat made iconic by Nehru is still being worn with pride". Tehelka. Archived from the original on 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2017.
  3. Gonna Do Great Things: The Life of Sammy Davis, Jr., p. 15, Gary Fishgall
  4. "Nehru Jacket | Encyclopedia.com".
  5. "John Lennon's iconic suit goes on auction after being lost for 40 year". Express.co.uk. 29 October 2015. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
  6. https://www.pressreader.com/usa/new-york-post/20150112/281509339566651. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023. {{cite web}}: Missing or empty |title= (help)
  7. "Malaysian Leader: War May Bring Backlash". 20 February 2003.
  8. Jared T. Miller (16 January 2012). "Top 10 Political Fashion Statements". Time. http://www.time.com/time/specials/packages/article/0,28804,2103934_2103935_2103988,00.html. பார்த்த நாள்: 16 January 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரு_கச்சுடை&oldid=3789173" இலிருந்து மீள்விக்கப்பட்டது