உள்ளடக்கத்துக்குச் செல்

நேசனல் ஹெரால்டு மோசடி வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு (National Herald corruption case) 1936-இல் ஜவகர்லால் நேரு நிறுவிய நேசனல் ஹெரால்டு நிறுவனத்தின் பத்திரிக்கை வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் (Associated Journals) நிறுவனம் உள்ளது. மேற்படி இரண்டு நிறுவனங்களிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் ஓரா, ஆஸ்கார் பெர்னான்டஸ் போன்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நேசனல் ஹெரால்டு பத்திரிக்கையின் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சி கண்டதாலும், நட்டம் ஏற்பட்டதாலும், 2008-இல் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது.

நிதி இழப்பை சரிகட்டவும், தொடர்ந்து பத்திரிகை வெளியிடும் பொருட்டும் நேசனல் ஹெரால்டு நிறுவனத்திற்கு சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சி, ருபாய் 90.25 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது.

மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உறுப்பினர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்டட் நிறுவனத்திற்கு ரூபாய் 50 இலட்சம் வழங்கியது. பின்னர் நேசனல் ஹ்ரால்டு நிறுவனம் காங்கிரசு கட்சியிடம் பெற்ற கடன் தொகை ரூபாய் 90.25 கோடியை, யங் இந்தியா நிறுவனம் செலுத்திவிடுவதாகக் கூறி, ரூபாய் 1,000 கோடி மதிப்புள்ள நேசனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். இதுவே சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கின் சாரம் ஆகும்.[1]

வழக்கு

[தொகு]

இதற்கு கைம்மாறாக நேசனல் ஹெரால்டு சொத்துக்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் எடுத்து கொண்டதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் சொத்துக்களை அபகரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். [2] சோனியா, ராகுல் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் ஓரா உள்ளிட்டோர் மீது சொத்துக்களை அபகரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தில்லி விசாரணை நீதிமன்றம், சோனியா, ராகுல் உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக அறிவிக்கை அனுப்பியது.[3][4]இவ்வழக்கில் 19 டிசம்பர் 2015 அன்று தில்லி பாட்டியாலா நீதிமன்றம் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களுகு ஜாமீன் வழங்கியது.[5]

இவ்வழக்கை எதிர்த்து 2021-ஆம் ஆண்டில் சோனியா காந்தி குழுவினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இடைக்கால தடையை நீட்டிக்க மறுத்த அவர், சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.[6] 2021[7]

தில்லி பொருளாதாரக் குற்றப் பிரிவு இவ்வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது புதிய முதல் தகவல் அறிக்கையை 29 நவம்பர் 2025 அன்று பதிவு செய்துள்ளது.[8]

சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கை

[தொகு]

இவ்வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டின் ரூ.700 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குனரகம் ஏப்ரல் 2025ல் அறிவிக்கை வெளியிட்டது.[9][10][11][12].

முதல் தகவல் அறிக்கை

[தொகு]

இவ்வழக்கில் அமலாக்கத் துறை 15 ஏப்ரல் 2025 அன்று, சோனியா காந்தி, ராகுல் காந்தி. சாம் பிட்ரோடா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.[13]

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு

[தொகு]

15 டிசம்பர் 2025 அன்று தில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம், தேசிய ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை புதிதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மீது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. இந்த விசாரணை ஒரு தனிநபர் (சுப்பிரமணியன் சுவாமி) புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது: முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அல்ல என்பதால் இதன் மீது விசாரணையைத் தொடர முடியாது என நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல்களைப் பெற உரிமை இல்லை என்றும் அமலாக்கத்துறை தனது மேலதிக விசாரணையைத் தொடரலாம் என்று கூறியது. [14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி
  2. நேஷனல் ஹெரால்டு வழக்கு சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் விளக்கம்
  3. 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: சோனியா, ராகுலுக்கு 'நோட்டீஸ்'
  4. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
  5. நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்!
  6. நேஷனல் ஹெரால்டு வழக்கில்சோனியா, ராகுல் மனுக்கள் டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி: நேரில் ஆஜராக உத்தரவு [தொடர்பிழந்த இணைப்பு]
  7. 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: சோனியா, ராகுலுக்கு 'நோட்டீஸ்'
  8. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கல்: ராகுல், சோனியா மீது புதிதாக எப்.ஐ.ஆர்., பதிவு
  9. [National Herald case: ED issues notice to take possession of assets in Congress-linked AJL case National Herald case: ED issues notice to take possession of assets in Congress-linked AJL case]
  10. National Herald case: ED begins possession of assets linked to Sonia, Rahul Gandhi
  11. National Herald case: ED begins process to seize assets worth Rs 700cr tied to Congress
  12. சோனியா, ராகுல் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துக்கள்: பறிமுதல் நடவடிக்கை தொடங்கியது அமலாக்கத்துறை
  13. "Sonia, Rahul Gandhi Named In Probe Agency Chargesheet In National Herald Case". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2025-04-15.
  14. Relief for Rahul, Sonia Gandhi in National Herald case; court refuses to take cognisance of ED chargesheet

வெளி இணைப்புகள்

[தொகு]