பாட்டியாலா மாளிகை நீதிமன்ற வளாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்டியாலா மாளிகை நீதிமன்ற வளாகம் (Patiala House Courts Complex) தில்லி மாநிலத்தில் அமைந்துள்ள ஐந்து மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாகும்.[1] இது தில்லியின் மையப்பகுதியில் இந்தியாவின் வாயில் அருகே முன்னாள் பாட்டியாலா மன்னர் அரண்மனையில் இடம் கொண்டுள்ளது. தில்லி நகரை வடிவமைத்த எட்வின் லூட்யென் இந்தக் கட்டிடத்தையும் வடிவமைத்துள்ளார்.[2] பிற லூட்யென் கட்டிடங்களைப் போன்றே வண்ணாத்திப் பூச்சியின் அமைப்பில் மைய குவிமாடத்துடன் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.[3]

வரலாறு[தொகு]

மார்ச் 1997ஆம் ஆண்டு இந்த மாளிகையில் நீதிமன்ற வளாகம் ஏற்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற சாலையிலிருந்து குற்றவியல் நீதிமன்றங்கள் இங்கு மாற்றப்பட்டன.[1] 2001 முதல் 54 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு புது தில்லி, தெற்கு தில்லி, மற்றும் தென்மேற்கு தில்லி மாவட்டங்களின் குற்றவியல் நீதிமன்ற செயல்பாடுகள் இங்கு நடைபெறுகின்றன.[4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "History of District Courts in Delhi". Delhi District Courts, website. http://www.delhidistrictcourts.nic.in/History.htm. 
  2. Cultural History Of India By Om Prakash
  3. Delhi, a thousand years of building Lucy Peck, Indian National Trust for Art and Cultural Heritage
  4. Criminal Justice India Series: National Capital Territory of Delhi, 2002 By N. R. Madhava Menon, D. Banerjea, West Bengal National University of Juridical Sciences

வெளியிணைப்புகள்[தொகு]