நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல் ஆராய்ச்சி நிலையம், மங்கொம்பு (Rice Research Station, Moncombu), என்பது இந்தியாவின் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்புவில் வேளாண் ஆய்வு நிறுவனமாகும். இது கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மண்டலத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆராய்ச்சி நிலையமாகும்.

இந்து நெல் ஆராய்ச்சி நிலையமானது கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு வட்டம், சம்பக்குளம் பஞ்சாயத்தில் மான்கொம்பு, தெக்கிக்கரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் 1940 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது குட்டநாடு சூழ்நிலையில், நெல் ஆராய்ச்சிக்காக மட்டுமே தனியாக இம்மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதலாக அனைத்து இந்திய ஒருங்கிணைந்த நெல் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு அமைப்பும் செயல்பட்டு வருகிறது.

பணிகள்[தொகு]

இந்நிலையம் இதுவரை 12 நெல் இரகங்களை வெளியிட்டுள்ளது. அவை மோ 1, மோ 2, மோ 3, பத்ரா, ஆஷா, பவிழம், கார்த்திகா, அருணா, மக்கோம், ரெம்யா, கனக்கம் மற்றும் ரஞ்சனி ஆகிய 12 இரகங்களும் விவசாயிகளால் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மற்ற ஏழு முன் வெளியீடு ரகங்களை வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன. அவை, பவித்ரா, பஞ்சமி, ரெமானிக்கா, உமா, ரேவதி, கரிஷ்மா, மற்றும் கிருஷ்னாஞ்சனா ஆகியவை ஆகும். வரிநெல்லுக்கு (காட்டு நெல்) எதிராக, நெல் விதைகளில் “கேல்சியம் பெராக்ஸைடு” பூச்சிடப்பட்டு முறையான மேலாண்மை முறையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தழைச்சத்து மேலாண்மை, களைக்கொல்லி மூலம் களைகளைக் கட்டுபடுத்தும் முறை, ராக்பாஸ்பேட்டை அமில மண்ணில் பயன்படுத்துவது ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறது. நெற்பயிரில் பழுப்பு இலைத்தத்துப்பூச்சிக்கு எதிராக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை சிறப்பாக வழங்கியுள்ளது. மேலும் நெல்லின் பழுப்புப்புள்ளி மற்றும் இலையுறை அழுகல் நோய்களுக்கும் கட்டுப்பாட்டு முறைகளை வழங்கியுள்ளது. நெல் வயலில் எலிகளைப் பிடிப்பதற்காக “மான்கொம்புப் பொறி” என்னும் மலிவான மற்றும் நாட்டுக்குரிய சிறப்பான எலிப் பொறியை வடிவமைத்துள்ளது.[1] 2013ஆம் ஆண்டில், இந்த நெல் ஆராய்ச்சி நிலையத்தின் ஜெர்ம்ப்ளாசம் மையம், காலநிலை, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மைகொண்ட குறுகிய கால நெல் வகையினைத் தோற்றுவித்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]