நெடுவால் சிபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுவால் சிபியா
கழுகுகூடு காட்டு சரணலாயம் (அருணாச்சலப் பிரதேசம், இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெட்டோரோபாசியா

இனம்:
கெ. பிக்காயிட்சு
இருசொற் பெயரீடு
கெட்டோரோபாசியா பிக்காயிட்சு
(கோட்ஜ்சன், 1839)
வேறு பெயர்கள்

லெயோப்தியா பிக்காயிட்சு'

நெடு வால் சிபியா (கெட்டோரோபாசியா பிக்காயிட்சு) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் லியோத்ரிச்சிடே சிற்றினமாகும். இந்த சிற்றினம் ஒரு காலத்தில் திமாலிடே என்ற பெருங் குடும்பத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த குடும்பம் பிரிக்கப்பட்டு இச்சிற்றினம் லியோத்ரிச்சிடே குடும்பத்தில் சிரிப்பான்களுடன் வைக்கப்பட்டது. இந்த சிற்றினம் சில சமயங்களில் கெட்டோரோபாசியா பேரினத்தில் உள்ள ஒற்றை உயிரலகு சிற்றினமாகக் கருதப்படுகிறது. மற்ற சிற்றினங்கள் மலேசியாசு பேரினத்தில் வைக்கப்பட்டன.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில்

பரவலும் வாழிடமும்[தொகு]

நீண்ட வால் கொண்ட சிபியா இமயமலையிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் சுமாத்திரா வரைக் காணப்படுகிறது. இது பசுமையான காடுகள், ஓக் மற்றும் பைன் காடுகள், இரண்டாம் நிலை வளர்ச்சிக் காடுகள், பெரிய மரங்கள் மற்றும் வன விளிம்பு போன்ற வாழ்விடங்களில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Heterophasia picaoides". IUCN Red List of Threatened Species 2016: e.T22716717A94507572. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716717A94507572.en. https://www.iucnredlist.org/species/22716717/94507572. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Collar, N. J. & Robson C. 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுவால்_சிபியா&oldid=3876183" இலிருந்து மீள்விக்கப்பட்டது