உள்ளடக்கத்துக்குச் செல்

நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத சேர்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத சேர்மங்கள் (Saturated and unsaturated compounds) என்பவை வேதிச் சேர்மங்களின் ஒரு பிரிவு ஆகும். கரிம வேதியியலில், கரிமச்சேர்மங்களை நிறைவற்ற சேர்மங்கள், நிறைவுறாத சேர்மங்கள் என்று இரு வகையாகப் பிரிப்பர். நிறைவுற்ற என்ற சொல் தெவிட்டல், நிரம்பல். பூரிதம், அதிகபட்சம் எனப் பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

நிறைவுற்ற சேர்மம் என்பது ஐதரசனேற்றம், ஆக்சிசனேற்ற கூட்டு மற்றும் லூயிசு காரத்துடன் பிணைப்பு போன்ற கூடுதல் வினைகளை எதிர்க்கும் ஓர் வேதிச் சேர்மம் அல்லது அயனியாகும். இந்த சொல் பல சூழல்களிலும் பல வகை வேதியியல் சேர்மங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, நிறைவுற்ற சேர்மங்கள் நிறைவுறா சேர்மங்களை விட குறைவான வினைத்திறன் கொண்டவையாகும். நிறைவுற்ற என்பது இலத்தீன் வார்த்தையான சடுராரே என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'நிரப்புதல்' என்பது இதன் பொருளாகும்.[1]

கரிம வேதியியல்

[தொகு]

ஐதரோ கார்பன்கள்

[தொகு]
ethane formula
ஈத்தேன் வாய்பாடு

கரிம வேதியியலில் இரட்டைப்பிணைப்பு அல்லது முப்பிணைப்பு இல்லாத கரிம சேர்மங்கள் நிறைவுற்ற சேர்மங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக பின்வரும் சேர்மங்களைக் கருதுவோம். 1. ஈத்தேன். 2. எத்திலின். 3. ஈத்தைன் இவற்றுள் ஈத்தேன் (C2H6) என்பது ஒரு நிறைவுற்ற ஐதரோ கார்பன் ஆகும். ஏனெனில் இதன் கட்டமைப்பில் உள்ள கார்பன் – ஐதரசன் பிணைப்புகள் யாவும் ஒற்றைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன. இரட்டைப்பிணைப்போ அல்லது முப்பிணைப்போ இங்கு இல்லை.

நிறைவுறுதல் என்ற கோட்பாட்டை பெயரிடும் முறைகள், வாய்ப்பாடுகள், பகுப்பாய்வு சோதனைகள் மூலம் விவரிக்க இயலும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் நிறைவுறாத நிலை பிணைப்பின் வகை மற்றும் இருப்பிடம் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர புரோமின் எண் சோதனை, நிறை நிறமாலையியல், அகச்சிவப்பு நிறமாலையியல், அணுக்கருக் காந்த உடனிசைவு சோதனைகளால் இத்தன்மை உறுதிசெய்யப்படுகிறது.

பொதுவாக ஆல்கேன்கள் போன்ற நிறைவுற்ற சேர்மங்களுடன் சாத்தியமில்லாத வழக்கமான கூட்டு வினைகளை நிறைவுறாத சேர்மங்கள் மேற்கொள்கின்றன. நிறைவுற்ற ஒரு கரிமச்சேர்மத்தில் கார்பன் அணுக்களுக்கு இடையில் ஒற்றைப்பிணைப்பு மட்டுமே காணப்படும். ஆல்க்கேன்கள் நிறைவுற்ற கரிமச் சேர்மங்களுக்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும். பலநிறைவுற்ற கரிமச் சேர்மங்களில் வேதி வினைக்குழுக்கள் இணைந்திருக்கும். உதாரணம்:ஆல்ககால்

நிறைவுறா சேர்மங்கள்

[தொகு]

எத்திலினில் (C2H4) ஓர் இரட்டைப்பிணைப்பும், ஈத்தைனில் (C2H2) ஒரு முப்பிணைப்பும் உள்ளன. இவை இரண்டும் நிறைவுறாத சேர்மங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

பொதுவாக வெவ்வேறு வகையான நிறைவுறா கரிம சேர்மங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. ;ஐதரோகார்பன்களில்:

கார்பன் மற்றும் ஐதரசன் தவிர்த்த வேற்றின அணுக்களைக் கொண்ட கரிம சேர்மங்களில் நிறைவுறாத குழுக்களின் பட்டியல் நீளமானதாகும். சில பொதுவான வகைகள்:

நிறைவுற்ற சேர்மங்கள்

ஈத்தேன்

புரொப்பேன்

1-ஆக்டனால்

நிறைவுறாத சேர்மங்கள்

எத்திலீன்

அசிட்டிலீன்

ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் ஒரு நிறைவுறா கொழுப்பு அமிலம்

கொழுப்பும் கொழுப்பு அமிலங்களும்

[தொகு]

கொழுப்பு அமிலங்களையும் இந்த வகையில் நிறைவுற்ற கொழுப்புகள், நிறைவுறாத கொழுப்புகள் என்று அவற்றின் பகுதிக் கூறுகளைக் கொண்டு பிரிப்பர்.[2] கொழுப்பை உள்ளடக்கிய டிரைகிளிசரைடுகள் (கொழுப்புகள்) நிறைவுற்ற சிடீயரிக் மற்றும் நிறைவுற்ற ஒலியிக்கு அமிலங்களிலிருந்து பெறப்படுகின்றன.

பல தாவர எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகள் உள்ளன.

கரிமவுலோக சேர்மங்களில்

[தொகு]
IrCl(CO)(PPh3)2 ஒரு நிறைவுறாத அணைவுச் சேர்மமாகும்.

கரிமவுலோக வேதியியலில், ஓர் ஒருங்கிணைந்த நிறைவுறாத அணைவுச் சேர்மத்தில் 18 எண்ணிக்கைக்கும் குறைவான இணைதிறன் எலக்ட்ரான்கள் உள்ளன. இதனால் ஆக்சிசனேற்ற கூட்டு வினை அல்லது கூடுதல் ஈந்தணைவியால் ஒருங்கிணைப்புக்கு எளிதில் உள்ளாகிறது. நிறைவுறாத தன்மை பல வினையூக்கிகளின் சிறப்பியல்பாகும். நிறைவுறாத ஒருங்கிணைப்பிற்கு நேர் எதிரானது நிறைவுற்ற ஒருங்கிணைப்பாகும். நிறைவுற்ற ஒருங்கிணைப்பு அணைவுகள் அரிதாகவே வினையூக்கி பண்புகளை வெளிப்படுத்துகின்றன.[3][4]

மேற்பரப்பு வேதியியல்

[தொகு]

இயற்பியல் வேதியியலில், மேற்பரப்பு செயல்முறைகளைக் குறிப்பிடும் போது, நிறைவுறுதல் என்பது ஒரு பிணைப்பு தளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அளவைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, காரம் நிறைவுறுதல் என்பது கார நேர்மின் அயனிகளை பரிமாற்றக்கூடிய நேர்மின் அயனிகளின் பகுதியைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mosby's Medical, Nursing & Allied Health Dictionary, Fourth Edition, Mosby-Year Book Inc., 1994, p. 1394
  2. Alfred Thomas (2002). "Fats and Fatty Oils". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a10_173. 
  3. Hartwig, J. F. Organotransition Metal Chemistry, from Bonding to Catalysis; University Science Books: New York, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-891389-53-X
  4. "IUPAC definition of Coordinatively Unsaturated Complex". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1351/goldbook.C01334.