நியூ அயர்லாந்து காட்டு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ அயர்லாந்து காட்டு எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. சனிலா
இருசொற் பெயரீடு
ரேட்டசு சனிலா
பிளாநெறி & ஒயிட், 1991

நியூ அயர்லாந்து காட்டு எலி (ரேட்டசு சனிலா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பெரிய கொறிணி ஆகும். இது பப்புவா நியூ கினியாவின் பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள புது அயர்லாந்தில் மட்டுமே காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

ரேட்டசு சனிலா என்பது 3000 ஆண்டுகளுக்கும் மேலான தாடையின் 7 புதைபடிவத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் மட்டுமே அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட சிற்றினத்தின் கடைவாய்ப்பற்கள் அகலமானவை மற்றும் முகடுகள் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளன. ராட்டசு பேரினத்தின் பிற சிற்றினங்களை விட பல்லினவிடைவெளி அதிகமானது. இதனால் இது தனி சிற்றினமாக அறியப்படுகிறது, இது நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவிற்கு ரேட்டசு பேரினத்தின் பழமையான அல்லது மூதாதையர் பரவலின் நினைவுச்சின்னமாக இருக்கலாம். இந்த சிற்றினம் இன்றும் சில முதன்மை காடுகளில் வாழ்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]